Close Menu
    What's Hot

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தேர்தல் 2026»”2026-ல் விஜய் முதல்வராக சபதம் ஏற்போம்” – தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சு
    தேர்தல் 2026

    ”2026-ல் விஜய் முதல்வராக சபதம் ஏற்போம்” – தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pussy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026-ல் விஜய் முதல்வராக சபதம் ஏற்போம் என்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தவெகவினருக்கு அறைகூவல் விடுத்துள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று காலை கூடியது. இக்கூட்டத்தில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதையடுத்து கட்சியின் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும் நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அண்ணை தமிழ் மொழியைக் காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லணிக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணக்காக்கின்றன பொறு்புள்ள தனி மனிதனாக செயல்படுவேன்.

    மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராக கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதிகூறுகிறேன்” என்ற உறுதிமொழியை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் விஜயலட்சுமி வாசிக்க, அனைவரும் எழுந்து நின்று ஏற்றனர்.

    இதையடுத்து, தவெகவின் கொள்கைத் தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் வரவேற்புரை ஆற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், “எண்ணற்ற சோதனைகளைத் தாண்டி வந்துள்ளோம், இன்று அரசியலின் மையப்புள்ளி விஜய்தான். தவெக தொடங்கி 2 வருடம் 9 மாதம் நிறைவடைந்துள்ளது. ஆனால், நம் தலைவரின் உழைப்பு, அர்ப்பணிப்பு 30 ஆண்டுகளைத் தாண்டியது. இவை அனைத்துக்கும் அடித்தளம் ஒரு தனி நபர்தான்.

    நம்முடைய எதிரிகள் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை. இவரை(விஜய்) யாரும் எளிதில் அசைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில் இவர் தாய்மார்களின் நம்பிக்கை, தமிழ் மண்ணின் நம்பிக்கை. நமது கட்சி சாதாரணக் கோட்டை கிடையாது. இது தொண்டர்களின் உழைப்பால் கட்டப்பட்டுள்ள இரும்புக்கோட்டை. இனி நம் வேலை எதிரிகளை தோல் உரித்துக் காட்டுவதுதான். நாம் புதிய வேகத்துடன் செயல்படப் போகிறோம். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் தகுதியும் நேர்மையும் கொண்ட ஒரே கட்சி நமது தவெக மட்டும்தான்.

    இது வெறும் பொதுக்குழுக் கூட்டம் மட்டுமல்ல. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கூட்டம். ஒரு மாபெரும் இயக்கத்துக்கு கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியம். நாம் அனைவரும் தலைவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். நமது பலமே நமது கட்டுக்கோப்புதான். அதை சீர்குலைக்க நினைக்கும் எதிரிகளை நாம் அனுமதிக்கக் கூடாது. பெரியவர்களை மதித்தும் இளைஞர்களை அரவணைத்தும் நாம் பயணிக்கப் போகிறோம். இனி ஒரு நொடி கூட நமக்கு ஓய்வு இல்லை. நாம் ஒவ்வொருவரும் கிராமம்தோறும் வீதிதோறும் செல்ல வேண்டும்.

    ஆளும் அதிகாரத்தில் இருப்போரின் அவலங்களை எடுத்துரைக்க வேண்டும். நம் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து எடுத்துக்கூற வேண்டம். 2026-ல் நம் தலைவர் முதல்வராக அமர்வதற்கு நாம் அனைவரும் சபதம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக நாம் இருக்கிறோம். அதற்கான தொடக்கம்தான் இந்த சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்.” என தெரிவித்தார்.

    pussy#anand#tvk
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்
    Next Article பிஹாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு: 121 தொகுதிகளில் 122 பெண்கள் உட்பட 1,314 பேர் போட்டி
    Editor TN Talks

    Related Posts

    தமிழக சட்டமன்றத் தேர்தல் செலவு கணக்குகள்: ஜூன் 3-ம் தேதி கடைசி நாள்..!!

    May 30, 2026

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்..!! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த அறிக்கை..!!

    May 28, 2026

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.