Author: Editor TN Talks

கரூர் கூட்ட நெரிசல் வழக்குகளில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பிய கண்ணன், டேவிட், சசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசு தரப்பில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், கரூர் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பதிவுகள் பதிவிடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தரப்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த செய்திக் குறிப்பில், ‘கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து…

Read More

கரூரில் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து 2ஆம் நாளக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர். கரூர் வேலாயுதம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உள்ளது. மேலும் பலர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஒருங்கிணைந்த விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இந்நிலையில், விபத்து தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்-05) கரூர் துயர நிகழ்வு குறித்து, சம்பவம் நடந்த இடத்தில், சிறப்பு புலனாய்வு குழு தங்கள் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். இன்று 2ஆம் நாளாக கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை…

Read More

மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் நடந்தவை குறித்து விளக்கம் அளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாக கரூர் விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பிக்கள் குழுவின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உள்ளது. மேலும் பலர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஒருங்கிணைந்த விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பின் பேரில் ஒருங்கிணைப்பாளர் ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன் பேரில், பாஜக எம்.பி.க்கள் ஹேமமாலினி, அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால் (முன்னாள் டிஜிபி), ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவ சேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா…

Read More

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் பெரும் வரவேற்பையும் அதேசமயத்தில் சர்ச்சைகளையும் ஏற்படுத்திய நிகழ்ச்சி பிக்பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இதன் முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த ஆண்டு இதன் 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதன் 9-வது சீசன் இன்று (05/10/2025) தொடங்கி உள்ளது. விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குகிறார். இந்தமுறை ஒண்ணுமே புரியலையே என்ற Tagline உடன் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இதில் மொத்தம் 20 பேர் பங்கேற்றுள்ளனர். முழுக்க சினிமாவில் இருப்பவர்கள் அல்லது சினிமாவுக்குள் செல்ல முயல்பவர்கள் என்ற இரண்டு பிரிவில் தான் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வாட்டர் மெலன் ஸ்டார் என்று வலம்வந்த வம்படி பேர்வழி திவாகர் முதல் போட்டியாளராக வந்ததுமே என்ன மாதிரியான நபர்களை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அடுத்தபடியாக பலூன் அக்கா என அறியப்படும் அரோரா சின்க்ளேர் இடம்பெற்றுள்ளார்.…

Read More

22.7 லட்சம் தலித் மற்றும் முஸ்லிம் பெண்களின் பெயர்கள் திட்டமிட்ட வகையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். பீகாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள, சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது. இதையடுத்து, அதிகாரிகள் இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என 65 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சிறப்பு தீவிர திருத்தத்தால் பீகார் வாக்காளர் பட்டியல் பெரும் சர்ச்சையை எதிர்கொண்ட நிலையில், தற்போது இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, “பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சமீபத்திய சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளின்…

Read More

தமிழ்நாடு யாருடன் போராடும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டிருந்த நிலையில், குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ”தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்ற முழக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வைத்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற வள்ளலார் பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு யாருடன் போராடும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், “மாநிலம் முழுவதும் பயணிக்கும் போது தமிழ்நாடு போராடும் என்று சுவர்களில் எழுதியுள்ளார்கள், யாருடன் போராடும்? தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை, இங்கு எந்த சண்டையும் இல்லை” என குறிப்பிட்டு ஆளுநர் விமர்சனம் செய்து இருந்தார். இந்நிலையில் இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ள அவர், “தமிழ்நாடு யாருடன் போராடும்?” என ஆளுநர் கேட்டுள்ளார்… இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி…

Read More

கரூரில் நடந்த சம்பவம் குறித்து வெளியாகும் அனைத்து வீடியோக்களும் விசாரணை ஆணையம் மூலம் விசாரிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள துரை செந்தமிழ் செல்வன் இன்று பொறுப்பேற்றார். அதனை முன்னிட்டு காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி, தலைமை தாங்கினார். பொங்கலூர் பழனிச்சாமி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து, ஏற்கனவே விரிவாக பேசி விட்டேன். விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே விசாரணை முடிந்த பிறகு அதைப் பற்றி பேசினால் சரியாக இருக்கும். எனவே, அது சம்பந்தமான…

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில், சாலையில் உணவு அருந்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜூனா, ஆமிர் கான், உபேந்திரா உள்ளிட்டோர் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான, ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கு அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில், ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும், இருவரும் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இயக்குநர் இன்னும் தேர்வு செய்யப்படாமல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், படப்பிடிப்பு ஓய்வில் ஒருவார ஆன்மீகப் பயணமாக ரஜினிகாந்த் இமயமலைக்குச் சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று பத்ரிநாத்…

Read More

தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு இயக்கத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. திமுக எம்பி ஆ.ராசா கலந்துகொண்டு நிகழ்வை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டவர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிறைவு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார், நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிலர் திமுகவைப் பிடிக்காது எனச் சொல்லுவார்கள். அதற்குப் பொருள் ஒடுக்கப்பட்ட வீட்டுக் குழந்தைகள் படிப்பது பிடிக்காது. இந்த இனத்தில் இருந்து படித்து முன்னேறி ஐஏஎஸ், ஐபிஎஸ் என ஆவது பிடிக்காது. இடஒதுக்கீடு பிடிக்காது, சமூக நீதி பிடிக்காது, சமத்துவம் பிடிக்காது, சரிசமமாக…

Read More

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அஹமதாபாத்தில் நேற்று முன்தினம் (அக்-2) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் போல்டானார். இந்திய அணி தரப்பில் முஹமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஜாஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், அபாரமாக ஆடிய கே.எல்.ராகுல் தனது 11ஆவது…

Read More