Author: Editor TN Talks

நாகையில் நடைபெறும் பிரச்சாரத்திற்காக விஜய் புறப்பட்ட நிலையில், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். 2026 தேர்தலில் தீவிரம் காட்டி வரும் விஜய் இரு மாநாட்டுகளை தொடர்ந்து மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் திருச்சியில் பிரச்சாரம் செய்த விஜய், இன்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். நாகையில் நடைபெறும் மக்கள் பிரச்சாரத்திற்காக தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டார். நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் இருக்கும் அண்ணா சிலை அருகே பகல் 12.30 மணிக்கு விஜய் உரையாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருவாரூர் தெற்கு வீதியில் மதியம் 3 மணிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த சூழலில் திருச்சி செல்லும் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகை செல்வதால் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதற்கு முன்னதாக திருச்சி மரக்கடை பிரச்சாரத்திற்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் விஜய்  பேசுவதில் தாமதம் ஏற்பட்டது. இதேபோல்…

Read More

மதுரை பிரபல ரவுடி வரிசூர் செல்வம் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் *மதுரையில் கடந்த 2012ல் வரிசூர் செல்வம் உட்பட 4 பேர்மீது கொலை முயற்சி வழக்கு மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக சிலைமான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள சுகன்யா லாட்ஜில் குற்றவாளிகளான வரிசூர் செல்வம், கேரளாவை சேர்ந்த சினோஜ், அஜிஸ், வர்கீஸ் ஆகியோர் பதுங்கி இருந்தனர். இதனை அறிந்த சிலைமான் காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் 12.03.2012ல் அவர்களை கைது செய்வதற்காக திண்டுக்கல் வந்துள்ளார். அப்போது, குற்றவாளிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே நடைபெற்ற மோதலில் காவல்துறையால் கேரளாவை சேர்ந்த சினோஜ் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2ல் நடைபெற்று வந்தது இதில் தொடர்ச்சியாக வரிசூர் செல்வம் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனையடுத்து திண்டுக்கல் நீதிமன்றம் வரிச்சூர் செல்வத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.…

Read More

பழங்குடியினர் சான்று பெற தகுதியுள்ள மாவட்டங்களின் பட்டியலில் இடம்பெறாத நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளிகள் சமூகத்தினருக்கு பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கியது எப்படி என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கக் கோரிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளி சமூகத்தினர் 14 பேருக்கு பழங்குடியினர் சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும், ஈரோட்டைச் சேர்ந்த மலையாளி சமுதாயத்தினருக்கும் பழங்குடியினர் சான்று வழங்கும் வகையில் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தர்மபுரி, வட ஆற்காடு, தென் ஆற்காடு, புதுக்கோட்டை, சேலம், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மலையாளி சமுதாயத்தினருக்கு மட்டும்…

Read More

ஊட்டி, கொடைக்கானலைப் போல் வால்பாறையில் நவம்பர் 1 ம் தேதி முதல் இ பாஸ் நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். குழுவின் இடைக்கால அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த அறிக்கையில், ஊட்டிக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அரசு போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேலும், வரும் டிசம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஐ.ஐ.டி – ஐ.ஐ.எம். குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து, ஐ.ஐ.டி – ஐ.ஐ.எம். குழுவினருக்கு தேவையான…

Read More

மின் இணைப்பு, பெயர் மாற்றம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஊழியர்களுக்கு வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஊழியர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தமிழக மின்வாரியம் பல விஷயங்களில் நன்றாகச் செயல்பட்டு வந்தாலும், மேம்படுத்த வேண்டிய பல அம்சங்கள் உள்ளதாகவும், அதன்படி, நேரக்கட்டுப்பாட்டுடன் சேவைகள் வழங்கப்பட வேண்டும், தாமதங்கள் ஏற்பட்டால் நுகர்வோருக்கு காரணம் தெரிவிக்க வேண்டும், புகார்களை புறக்கணிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார், மனுவுக்கு காலக்கெடுவுடன் தீர்வு வழங்க வேண்டும் என்றும், பெயர் மாற்றம், மின் இணைப்பு, சூரிய மின் உற்பத்தி போன்றவைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும், திட்டங்கள் தொடர்பான கோப்புகள் விரைவாக நகர்த்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், செயல்படாத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, ஒப்பந்ததார்களுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு இருப்பதாகவும், கள அளவில் போதிய உதிரி பாகங்கள் இருப்பில் வைப்பதை உயரதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.…

Read More

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரில் அதிமுக உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அடையாள அட்டைகளை சாலையோரத்தில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. சேலம் மாநகர் சூரமங்கலம் ஒன்றாவது பகுதி செயலாளராக உள்ள மாரியப்பன் திமுகவினருடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படுவதாகவும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கோரிக்கைகளை கண்டு கொள்வதில்லை எனவும், அடிப்படை பிரச்சனைகளுக்காக பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்தால் அதற்கும் தடை போடுவதாக அவர் மீது கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்களிடம் பலமுறை முறையிட்டும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அதிருப்தியடைந்த அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் தங்களுடைய உறுப்பினர் அடையாள அட்டைகளை சத்திரத்தில் இருந்து செவ்வாய்பேட்டை செல்லும் ரயில்வே மேம்பாலத்தின் அருகே வீசி உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது சேலத்தில் முகாமிட்டுள்ள நிலையில் சொந்தக் கட்சி உறுப்பினர்களே தலைமை மீதான…

Read More

சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 12.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ள மேம்பாட்டு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு. சென்னையில் மழை நீர்வடிகால்வாய் பணிகள் எந்த அளவில் உள்ளது என்ற கேள்விக்கு சென்னையில் பல இடங்களில் முழுமையாக மழைநீர் வடிகால் பணிகள் திட்டமிட்டப்படி வேலைகள் முடிந்துவிட்டது. புதிதாக நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அந்த இடத்தில் மழை நீர் வடிகால்வாய் பணிகளை தொடங்கி இருக்கிறோம். முதல்வர் அறிவித்த திட்டங்கள் முழுமையாக நிறைவடைந்துள்ள எனவும் மழைநீர் வடிகால்வாய் முடியாத இடங்களில் புதிதாக மழைநீர் வடிக்கால்வாய் பணிகள் வேறு ஒரு திட்டத்தின் மூலம் மேற்கொண்டு வருகிறோம் எனவும் தண்ணீர் தேங்கிய இடங்களில் அடுத்த கட்டமாக மழை நீர் வடிகால் அமைக்கக்கூடிய பணி நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார். எதனையும்…

Read More

நடிகை விஜயலட்சுமி- சீமான் விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பும் யூ-டியூப்பர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி டிஜிபி அலுவலகத்தில் புகார். அடிப்படை ஆதாரம் இல்லாமல் பெண்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் யூடியூப்பர் சாவுக்கு சங்கரை கைது செய்யக்கோரி தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி போலீஸ் டிஜிபியிடம் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார். புகார் கொடுத்து விட்டு வெளியே வந்த வீரலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார். யூடியூப்பர் சவுக்கு சங்கர் தமிழ்நாட்டு பெண்கள் குறித்தும், அரசு பெண் ஊழியர்கள் குறித்து தொடர்ந்து இழிவாக பேசி வருகிறார். இது தொடர்பாக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று டிஜிபியை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளேன். ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் நிபந்தனை ஜாமினில் தான் வெளியில் வந்துள்ளார். ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி…

Read More

ஆந்திராவில் இருந்து தேனிக்கு இருசக்கர வாகனத்தில் 14 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1200 கிலோமீட்டர் தூரம் உள்ள விசாகப்பட்டினத்திற்கு இருசக்கர வாகனத்திலேயே சென்று கஞ்சா வாங்கி வந்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து ஆந்திரா மாநிலம் விசாகபட்டினத்திற்கு (1200 கிலோ மீட்டர்) இருசக்கர வாகனத்திலேயே சென்று ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ 364 கிராம் கஞ்சாவை கடத்தி வந்த தேவாரம் சாலைத்தெருவைச் சேர்ந்த டிரைவர் பாலமுருகன் (32) கோம்பை ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த டிரைவர் ஈஸ்வரன் (40) ஆகிய இருவரை தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இப்பிரிவின் தேனி இன்ஸ்பெக்டர் பாக்கியம், எஸ்.ஐ. அருண் தலைமையிலான போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் உப்புக்கோட்டை -டொம்புச்சேரி ரோடு கண்மாய் அருகே கடந்த செப் 17 இரவு ரோந்து சென்றனர். அப்போது பாலமுருகன் என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வர,…

Read More

மழையின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமியின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணம் ஒத்திவைக்கப்பட உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று நாமக்கல்லில் தனது பிரச்சாரத்தை தொடங்கி வருகின்ற 29ஆம் தேதி வரை சேலம், திருச்செங்கோடு, மேட்டுப்பாளையம் குன்னூர், கரூர் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சார பயணத்தை மேற்கொள்ள இருந்தார். இந்த நிலையில் அடுத்த 10 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தனது பிரச்சார பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி ஒத்தி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்றுடன் நாமக்கல்லில் பிரச்சார பயணம் முடிவு பெற்று அடுத்த கட்ட பிரச்சாரம் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து…

Read More