Author: Editor TN Talks
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் வருமான வரித் தொகை 36 கோடி ரூபாயில் இருந்து 13 கோடி ரூபாயாக குறைத்து, திருத்தியமைக்கப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய…
நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை 10 கோடியாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் , வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அக்கறையோடு செயல்பட்டு வருவதாக கூறினார்.மேலும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிக அளவில் கடன் உதவி வழங்கப்படுவதாக கூறிய முதலமைச்சர், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இதுவரை 13000 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ. 67.97 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், கிராம புறங்களில் 3.38 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை 10 கோடியாக உயர்த்த வலியுறுத்தியுள்ளதாக கூறிய அவர், இந்த நிதியை உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாகவும் கூறினார்.…
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மக்களுன் சந்திப்பு என்ற பெயரிலான தேர்தல் பிரசாரத்தை நடிகரும், தவெக தலைவருமான விஜய் மேற்கொள்ள உள்ளார். இதுபற்றி அக்கட்சி சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் நடைபெற உள்ளது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், வெற்றித் தலைவர் அவர்களின் சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும். நாளை நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டாளர் குழுக்கள் விவரம், இடம் மற்றும் நேரம் ஆகியவை பின்வருமாறு: நாகப்பட்டினம் மாவட்டம்: இடம்: நாகப்பட்டினம், புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு, நேரம்: காலை 11.00 மணி திருவாரூர் மாவட்டம்:…
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு மீதான இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 13 ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில், காவல் துறை தரப்பில் தாக்கல்…
தமிழகம் முழுவதும் 105 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் மோசடி தொடர்பாக 467 புகார்கள் மீது சிறப்பு புலனாய்வு குழு விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. போலி இன்சூரன்ஸ் மோசடி குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில், தமிழகம் முழுவதும் போலி இன்சூரன்ஸ் மோசடி குறித்து விசாரணை நடத்த உயர் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும், இன்சூரன்ஸ் மோசடி வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. மேலும் இன்சூரன்ஸ் கம்பெனிகள் கொடுத்த 105 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் மோசடி தொடர்பாக 467 புகார்கள் மீது இதுவரை போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லைை…
நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் எட்டாம் தேதி வரை இறுதி வாய்ப்பு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்பு பணம் வழங்குவதாக கூறி தமிழகம் முழுவதும் முதலீட்டாளர்களைச் சேர்த்தனர். பணத்தைத் திருப்பித் தராமல் முதலீட்டாளர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணம் மோசடி செய்ததாக நியோமேக்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக மதுரை, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குகள் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் ஆர்.முனியப்பராஜ், நியோ மேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு விவரங்களை தாக்கல் செய்தார். மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நிவாரணம் கிடைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவாதாக வாதிட்டார். இதனையடுத்து, அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு…
மகளிரை சுயதொழில் முனைவோராக உருவாக்கும் வகையில் ‘மோடியின் தொழில் மகள்’ என்ற பெயரில் பாஜக புதிய திட்டம் ஒன்றை தொடங்க உள்ளது. இதன் முன்னோட்டமாக பிரதமர் நரேந்திர மோதியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, 75 ஓவியங்கள் இடம் பெற்றுள்ள கண்காட்சி கோவை கணபதி வாஜ்பாய் திடலில் இன்று துவங்கப்பட்டது. கண்காட்சியை மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர், கோவை மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சேலஞ்சர் துறை ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சிறு வயது முதல் பிரதமர் பொறுப்பு ஏற்றது வரையிலான பல்வேறு ஓவியங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மோடியின் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்களுக்கான ஆதரவு, சூரிய மின் உற்பத்தி திட்டங்கள், வேளாண்மை மேம்படுத்துவதற்கான திட்டம், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் சர்வதேச நாடுகள் உடனான நட்புறவு ஆகியவற்றை குறிக்கும் வகையில்…
திண்டுக்கல்லில் முதல் முறையாக தேசிய அளவிலான விழிப்புணர்வு நாணயக் கண்காட்சி நடைபெற்றது. பண்டைய மன்னர்களின் நாணயங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன. திண்டுக்கல்லில் ரோட்டரி சங்கம் மற்றும் நாணயங்கள் பாதுகாப்பு சங்கம் இணைந்து முதல் முறையாக தேசிய அளவிலான நாணயங்கள் மற்றும் பழங்கால முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களின் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 2 ஆயிரம் ஆண்டுகள் முந்தைய மன்னர்கள் பயன்படுத்திய நாணயங்கள், பணத்தாள்கள், பழமையான பொருட்கள், அஞ்சல் தலைகள், வரலாற்று சிறப்பு மிக்க பொருட்கள் வெளிநாட்டு கரன்சிகள், மற்றும் பழங்கால மரம், தாமிரம், இரும்பான பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் பேசும்போது, தற்காலத்தில் பிட் காயின், டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நாணயம் பயன்பாடு குறைந்து வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் நாணயம் பயன்பாடு அழிந்துவிடும். வரும் தலைமுறைகள் இந்த நாணயம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாணயத்தின் மதிப்பினை…
சின்ன திரையில் பிரபலமாகி சினிமாவிலும் தடம் பதித்த ரோபோ சங்கர், தனது தனித்துவமான காமெடியால் உச்சம் தொட்டவர். அவரது திடீர் மரணம், திரைத்துறையினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதுரையை பூர்வீகமாகக் கொண்ட ரோபோ சங்கர், அந்த மண்ணுக்கே உரிய கலைஞனாக மேடையேறத் தொடங்கினார். ஒருபக்கம் மிமிக்ரி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்த அவர், இன்னொரு பக்கம் ரியல் ரோபோவாக ஆட்டம் போட்டு அசரடித்தார். கலைஞனாக மட்டுமல்லாமல் கமல்ஹாசனின் தீவிர ரசிகனாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் ரோபோ சங்கருக்கு ரொம்பவே ஆர்வம். இதுவே ரோபோ சங்கரை மிமிக்ரி கலைஞனாக உருமாற்றியது. ஆரம்ப காலங்களில் மேடை நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைத்தபோது, கமல், சிவாஜி ஆகியோரைப் போல மிக தத்ரூபமாக மிமிக்ரி செய்து கவனம் ஈர்த்துள்ளார். இதனால் ரோபோ சங்கருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க, அப்படியே ரோபோ அவதாரமும் எடுக்கத் தொடங்கினார். 1990-களில் மேடை கலை நிகழ்ச்சிகள் உச்சம் தொட்டிருந்தன. இதனால் அப்போது…
தேசிய வனவிலங்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து காட்டு பன்றி பாதிப்பில் இருந்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான 5 ஆவது மாவட்ட அளவிலான ஊரக வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும கண்காணிப்பு ( DISHA Committee) குழு கூட்டமானது நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச்செயலாளர்கள் பங்கேற்று இருந்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேசியதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல துறைகள் சார்ந்த நிதிகளை மத்திய அரசு வழங்காமல் இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆஜ் யோஜனா கிராமப்புறங்களில் ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கு மத்திய அரசு 1.20…