Author: Editor TN Talks

ஆசியக்கோப்பை குரூப் சுற்று லீக் போட்டியில் வலுவான இந்திய அணியுடன், கத்துக்குட்டி அணியான ஓமன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. 17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. தொடரின் 12ஆவது போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியும், ஓமன் அணியும் மோதவுள்ளன. இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிட்டதால், இந்த போட்டி சம்பிரதாய போட்டியாக நடைபெறும். முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி கண்டிருந்தது. இதனால், ஆசியக்கோப்பை தொடரில் அதிகப்பட்ச ரன் விகிதத்தில் (4.793) முதலிடத்தில் இந்திய அணி உள்ளது. மேலும்,…

Read More

நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் என்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த ரோபோ சங்கரின் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். சின்னத்திரையில், காமெடி பேச்சாளராக ஜொலித்தவர் ரோபோ சங்கர். தனது திறமையாலும், அயராத முயற்சியாலும் வெள்ளித்திரையிலும் காமெடி நடிகராக வலம் வந்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த இவர், சமீபகாலமாக மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தார். தொடர்ந்து, திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இந்நிலையில், உணவுக்குழாய் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், நேற்றிரவு காலமானார். ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ரோபோ சங்கர் மறைவிற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும்…

Read More

கரூர் – கோவை சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என அதிமுக சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக கரூர் மாவட்ட அவைத்தலைவர் திருவிக என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு.. அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் மாவட்டத்தில் வருகின்ற 25ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் கரூர் அரவக்குறிச்சி கிருஷ்ணாயபுரம் மற்றும் குளித்தலை தொகுதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கின்ற சுற்றுப்பயணம் மற்றும் பொதுக்கூட்ட நிகழ்வு நடத்த வருகை தர உள்ளார். 25 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் கரூர் கோவை சாலை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இதற்காக காவல்துறை அனுமதி கோரி கடந்த 9ஆம் தேதி மனு அளித்தோம். பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து காவல்துறை தரப்பில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருந்தனர். அதற்கும் முறையான பதில் அளித்தும்…

Read More

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4வது முறையாக வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். சென்னை டிஜிபி அலுவகத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி பெயரில் இமெயில் மூலம் கடிதம் அனுப்பப்பட்டிருப்பது. அதில், அமெரிக்க தூதரகம் அதன் பள்ளி வளாகம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றங்களில் 6 ஆர்டிஎக்ஸ் வகை வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றங்களில் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் என தொடர்ந்து 4 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்பட்டுத்துள்ளது.

Read More

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி காலமானார். சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். காமெடி காட்சிகளில் பிரபலமான இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான ரசிகர்களை கவர்ந்தார். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதை குறைத்து கொண்டார். இந்த நிலையில் சென்னையில் படப்பிடிப்பில் இருந்த ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நீர்சத்து குறைவு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக ரோபோ சங்கருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த சூழலில் நேற்று மாலை ரோபோ சங்கரின் உடல்நிலை மோசமானதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கருக்கு சிறுநீரக…

Read More

இன்றைய இளைய தலைமுறையினருக்கு பேரறிஞர் அண்ணா என்பவர் யார்? அவர் நடத்திக் காட்டிய சாதனைகள் என்ன? அவர் கற்றுத் தந்த கொள்கைகள் என்ன? போன்றவற்றை கொண்டு சேர்க்கும் வகையில் அண்ணா வழி திராவிடம் என்ற இதழ் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு.. மனித குலத்தின் மாபெரும் மற்றும் மிக முக்கியமான விழுமியங்களில் ஒன்று, பன்மைத்துவத்தின் மூலமாகவே ஒட்டுமொத்த மனித குலத்திற்கான முன்னேற்றத்தை அடையமுடியும் என்பது தான்! அதே வேளையில் ஒவ்வொரு இனத்திற்கும் உரியதான தனித்துவமான அடையாளங்களை விட்டுவிடாமல் பேணிகாத்திடவும் விரும்புகிறது மனித இனம். இவ்விரண்டிற்குமான இடையிலான அரசியலைத் தான் அறிஞர் அண்ணா நமக்காக சிந்தித்து தத்துவமாக்கிச் சென்றிருக்கிறார். அண்ணா முன்னிறுத்திய திராவிடம் ஆரியத்திற்கு மாற்றானது , எதிரானது என்பது வெளிப்படையான உண்மையாக இருப்பினும், “பிறப்பால் ஆரியத்தைச் சேர்ந்த ஒருவர், உணர்வால் திராவிடர் ஆகலாம். ஆரியம் பிறப்பில் இல்லை அது கருத்தில் உள்ளது . திராவிடராய்ப் பிறந்து சாதியத்தை நெஞ்சில்…

Read More

சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. பகல் நேரங்களில் தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வருவதால், சென்னைவாசிகள் செய்வதறியாது திகைத்து வந்தனர். குறிப்பாக காலை 10 மணி முதலே வெயில் அசுர தாண்டவம் ஆடியது. இந்த நிலையில், தற்போது சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தியாகராய நகர், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, அசோக்நகர், கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அதேநேரம் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், இரவிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அப்டேட் கொடுத்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், இரவிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் மேலும் பல…

Read More

பீகார் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் ஆணையம், மத்திய பாஜக அரசு ஆகியவை மீது, அடுத்த அணுகுண்டை வீசி அதிர்ச்சிக் கொடுத்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. சில தினங்களுக்கு முன்னர், கர்நாடகாவில் நடைபெற்ற வாக்குத் திருட்டு குறித்தும், பீகாரில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டது பற்றியும், ஆதாரங்கள் வெளியிட்டு பகீர் கிளப்பியிருந்தார் ராகுல் காந்தி. கர்நாடக மாநிலம் மகாதேவபுரா தொகுதியில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் 5 வெவ்வேறு முறைகளில் திருடப்பட்டப்பட்டதாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டு பொதுமக்களை அதிர வைத்தது. முக்கியமாக தேர்தல் ஆணையத்தின் தரவுகளை வைத்தே வாக்குத் திருட்டு நடைபெற்றிருப்பதை ராகுல் காந்தி காட்டி சுட்டிக் காட்டியிருந்தார். தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். அதேபோல் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றிலும் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள்…

Read More

அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவித்தார். இதனால் கடந்த 13ஆம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை துவங்கிய அவர், செப்டம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை ஒவ்வோரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி  கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள  காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி, தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின்…

Read More

தமிழக கோயில்களில் வழிபாட்டு உரிமைகளில் சாதி பாகுபாடு காட்டுவது சமூகநீதிக்கு எதிரானதாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கோயில்களில், வழிபாட்டு உரிமையை எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி பி. புகழேந்தி ஆணை பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆலய நுழைவுப் போராட்டம் என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே காந்தியடிகளின் வழிகாட்டுதலோடு, தந்தை பெரியார், வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தை 1925 இல் நடத்தி தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள் உள்ளிட்டோர் திருவிதாங்கூர் மகாதேவர் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் நுழைகிற அனுமதியை பெற்றுத் தந்தார். இதைத் தொடர்ந்து குருவாயூர் சத்தியாகிரகம் நடைபெற்றது. அறிக்கை தமிழ்நாட்டில் கோயில்களில், வழிபாட்டு உரிமையை எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று ஒரு வழக்கில்…

Read More