Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»அண்ணா வழி திராவிடம் – புதிய இதழ் தொடக்கம்
    அரசியல்

    அண்ணா வழி திராவிடம் – புதிய இதழ் தொடக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 09 18 191239
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்றைய இளைய தலைமுறையினருக்கு பேரறிஞர் அண்ணா என்பவர் யார்? அவர் நடத்திக் காட்டிய சாதனைகள் என்ன? அவர் கற்றுத் தந்த கொள்கைகள் என்ன? போன்றவற்றை கொண்டு சேர்க்கும் வகையில் அண்ணா வழி திராவிடம் என்ற இதழ் தொடங்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு..

    மனித குலத்தின் மாபெரும் மற்றும் மிக முக்கியமான விழுமியங்களில் ஒன்று, பன்மைத்துவத்தின் மூலமாகவே ஒட்டுமொத்த மனித குலத்திற்கான முன்னேற்றத்தை அடையமுடியும் என்பது தான்!

    அதே வேளையில் ஒவ்வொரு இனத்திற்கும் உரியதான தனித்துவமான அடையாளங்களை விட்டுவிடாமல் பேணிகாத்திடவும் விரும்புகிறது மனித இனம்.

    இவ்விரண்டிற்குமான இடையிலான அரசியலைத் தான் அறிஞர் அண்ணா நமக்காக சிந்தித்து தத்துவமாக்கிச் சென்றிருக்கிறார்.

    அண்ணா முன்னிறுத்திய திராவிடம் ஆரியத்திற்கு மாற்றானது , எதிரானது என்பது வெளிப்படையான உண்மையாக இருப்பினும், “பிறப்பால் ஆரியத்தைச் சேர்ந்த ஒருவர், உணர்வால் திராவிடர் ஆகலாம். ஆரியம் பிறப்பில் இல்லை அது கருத்தில் உள்ளது . திராவிடராய்ப் பிறந்து சாதியத்தை நெஞ்சில் சுமப்போரும் ஆரியரே” என்கின்ற அவருடைய விரிவும் தெளிவும் அவரை சர்வதேசியவாதியாக்குகிறது.

    எனவே தான் அவரால், “நாடு என்பது பூகோளப்படம் அல்ல, அங்கு வசிக்கும் மக்களின் உணர்ச்சித் தொகுப்பு” என்று சொல்ல முடிந்தது!

    சமத்துவம் என்பது எல்லோரையும் சமமாக நடத்துவது அல்ல , எல்லோர்க்கும் “சமவாய்ப்பு” அளிப்பது என்பது தான் இன்றும் அண்ணா வழி திராவிடமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

    எம்ஜிஆர் கூறியது போல், அரசியல் உலகில் அண்ணா நமக்கு அறிவூட்டும் கடவுள்” என்னுடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்றால் அது அண்ணா சுட்டிக்காட்டிய வழியில் நடந்து செல்வது, அண்ணாவின் குறிக்கோள்களுக்குச் செயல்வடிவம் தருவது, நிறைவேற்றப்படாத அண்ணாவின் திட்டங்களை நிறைவேற்றுவது என்பது தான் எனது குறிக்கோள் என்று கூறிச்சென்றார்.

    எனவே அண்ணா வழி திராவிடம் என்பது தமிழ் மக்களின் அரசியல்!

    தமிழினம் தன்னைத் தானே ஆண்டுகொள்ளும் கலையினை பழக்கிய ஒரு தலைவனின் வழி….

    அண்ணாவை, அவருடைய முக்கியத்துவத்தை, அவர் கண்ட திராவிட வழியை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் விதமாக “அண்ணா வழி திராவிடம்” என்கின்ற இந்த இதழ் துவங்கப்பட்டிருக்கின்றது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபகலில் மாணிக்கம்… இரவில் பாட்ஷா…. சென்னைவாசிகளை மிரட்டிய திடீர் மழை!
    Next Article நடிகர் ரோபோ சங்கர் காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்..!
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    August 7, 2026

    “கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக உள்ளது” – அமைச்சர் ஆனந்த்

    August 7, 2026

    ’மத்திய அரசிடம் தவெக அரசு சத்தமில்லாமல் சரணாகதி’

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.