Author: Editor TN Talks

3,60,000 மேற்பட்டோர் நாய் கடியால் பாதித்து உள்ளதாகவும் தமிழக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 3,60,000 மேற்பட்டோர் நாய் கடியால் பாதித்து உள்ளதா நிலையில், இதுவரை 22 பேர் ரேப்பிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பாக, தமிழகத்தில், தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன இதனால், ஏற்படும் ரேபிஸ் தொற்றில் இருந்து, செல்ல பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்கு தடுப்பூசி தீர்வாக உள்ளது நாய்க்குட்டி பிறந்த முதலாண்டில், இரு முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் தொடர்ந்து, ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும் ஆனால், தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும், தடுப்பூசி முறையாக செலுத்தப்படுவதில்லை இவ்வாறு தடுப்பூசி போடாத நாய்கள், மனிதர்களை கடிக்கும் போது, ரேபிஸ் தொற்று பரவி, இரு தரப்புக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது தமிழகத்தில் 2336 அரசு ஆரம்ப சுகாதார,…

Read More

பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்வார் என்று தெரிவித்த வழக்கறிஞர் பாலு, தேர்தல் ஆணையம் அங்கீகரித்த கடிதத்தையும் வெளியிட்டார். பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்து இருந்தார். மேலும், அன்புமணி தேவைப்பட்டால் தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம் என்றும் கட்சியை உரிமை கோர யாருக்கும் உரிமையில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ராமதாஸின் அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது என்றும் பாமக கட்சியை கட்டுப்படுத்தாது என்றும் தேர்தல் ஆணையம் கொடுத்த கடிதத்தை விரைவில் உரிய நேரத்தில் வெளியிடுவோம் என அன்புமணி ஆதரவாளரும், வழக்கறிஞரமான பாலு தெரிவித்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான பாலு, “கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கியுள்ளது. இந்த கடிதத்தின் வாயிலாக பாமக தலைவராக மருத்துவர் அன்புமணி…

Read More

“பணத்துக்காக அரசியலுக்கு வரவில்லை..” என கூறும் வுஜய்க்கு தொண்டர்கள் மைண்ட் வாய்ஸாக சில கேள்விகளல்ள்! தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஒருவழியாக தனது முதல் வீக் என்ட் தேர்தல் பிரசார பயணத்தை கடந்த வாரம் தொடங்கிவிட்டார். விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளில் விஜய்யின் பேச்சும், தவெக தொண்டர்களாக அறியப்படும் அவரது ரசிகர்களின் கொண்டாட்ட மனநிலையும் ஒன்றை மட்டும் உறுதியாக வெளிப்படுத்தியது. அது ஒட்டுமொத்த தவெகவும் இன்னும் தீவிர சினிமாத்தனத்துடன் இயங்குவதையும், அவர்கள் சிறிதேனும் அடிப்படை அரசியல் கட்டமைப்புக்குள் வரவில்லை என்பதையும் பார்க்க முடிந்தது. முக்கியமாக விஜய்யால் தனது ரசிகர்களை இப்போதுவரை அரசியல்படுத்த முடியவில்லை என்பது பொதுமக்களின் விமர்சனமாக உள்ளது. இந்த நிலையில்தான் தவெக தலைவர் விஜய் தனது முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் இருந்து ஆரவாரமாக தொடங்கியுள்ளார். மாநாட்டு நிகழ்வுகளில் அவரது ரசிகர்களிடம் காணப்பட்ட கும்பல் மனநிலை இந்த பிரசார களத்தில் மாறிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆங்கில ஊடகங்கத்தைச் சேர்ந்த…

Read More

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக் குடும்பத்தினரும் சேர்ந்து, “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என உறுதி ஏற்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளான இன்று, தமிழ்நாடு அரசின் சார்பில் திமுக தலைவரும், தமிழ்நாடு  முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள  பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்குக் கீழ் வைக்கப்பட்ட அண்ணா அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், மாதவரம் சுதர்சனம், வேற்றியழகன் உள்ளிட்டோர், மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார், திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதில் “நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.…

Read More

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று செங்கோட்டையன் மீண்டும் கூறியுள்ளார். கடந்த 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியை தெரிவித்ததோடு, அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். மேலும் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய 10 நாட்கள் கெடு விதிக்கப்பட்டது. இந்த கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில், இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது நோக்கம். அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே மனம் திறந்து பேசினேன். மக்கள் மற்றும் தொண்டர்களின் கருத்தையே நான் பிரதிபலித்தேன். அண்ணாவின் பெயரால் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை கட்டுக்கோப்பாக கட்டி காத்தனர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்று அண்ணா கூறியுள்ளார். இதற்கிடையே கடந்த…

Read More

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கழிவு கலந்த தண்ணீர் விநியோகிப்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். புதுச்சேரியில் கடந்த வாரம் பொதுப்பணித்துறை மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் குழாய் மூலம் புதுச்சேரி முழுவதும் வழங்கப்பட்டு வரும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் புதுச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த உருளையன்பேட்டை கொசபாளையம், சக்தி நகர், காமராஜர் நகர், முத்தியால்பேட்டை, முதலியார் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் குடிநீரை பயன்படுத்தி வந்தனர். இதனால் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைக்கு பிறகு நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடு திரும்பிய நிலையில், அதிக பாதிப்புள்ளவர்களுக்கு மட்டும் ஒரு வார்த்திற்கு மேலாக  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குப்புசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொது மக்களை நேரில் சந்தித்து…

Read More

எதிர்கட்சிகளுக்கு சவாலாக விளங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்துள்ளார். இசைஞானி இளையராஜா திரையின் இசை உலகில் 50 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழக அரசு சார்பில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு 50’ என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நேறு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, “தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இந்திய அரசியலில் நட்சத்திரமாக, இந்திய நாட்டை ஆளும் கட்சியினருக்கு புதிய, பழைய எதிர்கட்சியினருக்கும் சவாலாக 2026 தேர்தலை பார்க்கலாம் என்று தனக்கே உரிய புன்னகையுடன் முதலமைச்சர் செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனது வணக்கத்தையும் கூறி கொண்டார். தவெக தலைவர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த சூழலில் எதிர்கட்சிகளுக்கு முதலமைச்சர் சவாலாக…

Read More

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் எதிகதற்ப எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. பஹல்காம் தாக்குதல், அதற்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் என இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் இருந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கிரிக்கெட் போட்டிகளில் கூட பாகிஸ்தான் அணியுடன் இந்திய வீரர்கள்  போட்டியிட மாட்டார்கள் என கூறப்பட்டது. இந்த சூழலில் தற்போது நடந்து வரும் ஆசிய கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகு துபாய் மைதானத்தில் இரு அணிகள் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வழக்கமாக இரு அணிகளும் மோதும் போட்டியில் இந்தியாவின் பேட்டர்களுக்கும், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும். ஆனால், இந்த முறை இரு அணிகளின் ஸ்பின்னர்களுக்கு இடையே பலப்பரீட்சை நடைபெற உள்ளது. இந்தியாவின் சார்பில் குல்தீப் யாதவ், வருண்…

Read More

திருச்சியில் விஜய் நடத்திய பிரச்சாரத்திற்கு அதிகளவில் மக்கள் கூடியதை தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். திருச்சி மரக்கடையில் நடந்த முதல் பிரச்சார கூட்டத்தில் கட்டுக்கடங்காத அளவுக்கு மக்கள் கூடியதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் விஜய் திணறினார். இது குறித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், விஜய்யின் பிரச்சாரத்தில் பெரிய அளாவில் கூட்டம் திரண்டது உண்மை தான். ஒரு நடிகருக்கு இந்த அளவுக்கு கூட்டம் கூடுவதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஆனால், இவ்வளவு கூட்டம் வரும் என தெரிந்து பாதுகாப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் தேவையாக இருந்திருக்க வேண்டும். மக்கள் மனம் நோகாதபடியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதப்படியும் கூட்டத்தை போலீசார் ஒழுங்குப்படுத்த வேண்டும். ஆளும் கட்சிக்கு போலீஸ் கொடுக்கும் பாதுகாப்பை மற்ற கட்சிகளுக்கும் கொடுக்க வேண்டும். விஜய்யின் திமுக எதிர்ப்பு ஆரோக்கியமானது. அதை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். விஜய் நடிகர் என்பதால் அவரை பார்க்க கூட்டம் கூடுவது வழக்கம். விஜய்யை பார்க்க வரும் கூட்டம் ஒட்டு மொத்தமாக…

Read More

திருச்சி பிரச்சாரத்தில் பேசிய விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விஜய் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார். விக்கிரவாண்டி, மதுரை மாநாட்டை தொடர்ந்து திருச்சியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அண்ணா 1956ல் தேர்தலில் நிற்க நினைத்தது திருச்சி தான். தொடர்ந்து 1974ல் முதல் மாநாட்டை நடத்தியதும் திருச்சியில் தான். பெரியார் வாழ்ந்த இடமும் திருச்சி தான். 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 505 வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள்? டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாதாந்திர மின் கட்டண கணக்கீடு, மாணவர்களின் கல்வி கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40 % இட ஒதுக்கீடு, பழைய ஓய்வூதிய திட்டம் என திமுக அளித்த வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆனது? நாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான், ஆனால் திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை. மகளிர் விடியல் பயணம்…

Read More