Author: Editor TN Talks
திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் உங்கள் வாக்கு எதையும் நிறைவேற்றாத திமுகவுக்கா என விஜய் கேட்கும்போது அங்கிருந்த தொண்டர்கள் இல்லை, கேட்கவில்லை என்று கூச்சலிட்டனர். தவெக எனும் கட்சியை தொடங்கிய விஜய், 2026 சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என கூறியிருந்தார். விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளை தொடர்ந்து மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதால் நடிகர் விஜய் கூறியிருந்தார். அதன்படி இன்று திருச்சி மரக்கடை மார்க்கெட்டில் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணிக்கு பேச விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், பிரச்சாரத்திற்கு விஜய் செல்லவே மதியம் 2 மணி ஆனது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் விஜய் பிரச்சார வாகனத்தின் மீது ஏறி பேச தொடங்கினார். அப்போது விஜய் பேசியது மைக் வேலை செய்யாததால் அது கேட்கவில்லை. சரியாக திமுக மற்றும் அமைச்சர்களை டார்கெட்…
Vijay: திருச்சியில் முதல் பிரச்சாரத்தை தொடங்கிய தவெக தலைவர் விஜய் பேச்சை கேட்க ஆசையாக இருந்த மக்கள் மைக் வேலை செய்யாததால் ஏமாற்றம் அடைந்தனர். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் பணிகளில் நடிகர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். மதுரை மாநாட்டை தொடர்ந்து திருச்சியில் மக்களை சந்தித்து பிரச்சாரம் நடத்த உள்ளதாக விஜய் தரப்பில் அறிவிக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே இன்று காலை 10.30 மணிக்கு மரக்கடை மார்க்கெட் பகுதியில் விஜய் பேச அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக காலையில் திருச்சி சென்ற விஜய்யை பார்க்க ஏராளமான மக்கள் கூட்டம் கூடியது. கட்டுக்கடங்காமல் குவிந்த மக்களால் விஜய் குறிப்பிட்ட நேரத்தில் மரக்கடை பகுதியை அடைந்து பேசுவதில் சிரமம் ஏற்பட்டது. காலையில் பேச திட்டமிட்ட நிலையில் மதியம் 2 மணியளவில் பிரச்சார வாகனத்தில் ஏறி விஜய் பேச தொடங்கினார். அப்போது மைக் சரியாக வேலை செய்யாததால் விஜய் பேசுவதை…
திருச்சி பிரச்சாரத்தில் 10.30 மணியில் இருந்து அரை மணி நேரம் மட்டுமே பேச அனுமதி அளித்த நிலையில், இதுவரை விஜய் பேசாததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை மாநாட்டை தொடர்ந்து திருச்சியில் தவெக தலைவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. திருச்சி சமத்துவபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டும் போலீசார் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு இறுதியாக மரக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. 23 நிபந்தனைகளுடன் காலை 10.30 மணியில் இருந்து 11 மணி வரை மட்டுமே விஜய் பேச வேண்டும் என காவ்லதுறை தரப்பில் அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் புறப்பட்ட விஜய், அங்கிருந்து பிரச்சாரம் நடைபெறும் மரக்கடை பகுதிக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்களும், தொண்டர்களும் விஜய்யை காண குவிந்ததால் திருச்சி மாநகரமே…
கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து கும்மாளம் போடும் இயக்கமல்ல திமுக என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அரசியலில் இறங்கியுள்ள தவெக தலைவர் விஜய் விக்கிரவாண்டி மற்றும் மதுரை மாநாடுகளை தொடர்ந்து திருச்சியில் முதல் முறையாக மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கட்சி தொடங்கியதில் இருந்தே திமுகவை அரசியல் எதிரியாக விமர்சித்து வரும் விஜய்க்கு எதிர்ப்பு குரல்களும் வலுத்து வருகின்றன. இன்று திருச்சியில் நடைபெறும் பிரச்சாரத்தில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், கரூரில் நடைபெற இருக்கும் முப்பெரும் விழாவுக்கு அழைப்பு விடுத்து தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது, ”உலகம் போற்றும் திராவிடத்தின் பெருமை தொடர்ந்திட, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நீடித்து நிலைத்திட, ஏழாவது முறையாகக் கழக ஆட்சி மலர்ந்திட கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா வெற்றிப்பாதையாக அமையட்டும். கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல தி.மு.கழகம்.…
மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் அரசியல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள நடிகர் விஜய்யின் வாகனத்தை, போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஏராளமான தொண்டர்கள் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார். இன்று முதல் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டம் பிரச்சாரங்களை நடத்த உள்ளார், அதன் தொடக்கப் பகுதியாக இன்று திருச்சியில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இந்த பிரசாரத்திற்கு 23 நிபந்தனைகளை திருச்சி காவல்துறை விதித்தது. இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் திருச்சி சென்றடைந்தார். பின்னர், தனது பிரசார வாகனம் மூலம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்டார். அப்போது, காவல்துறையினரால் போடப்பட்டிருந்த தடுப்புகளை மீறி, அவரது ரசிகர்களும், தொண்டர்களும் விஜய்யின் வாகனத்தை சூழ்ந்துகொண்டனர்.…
‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் அரசியல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள நடிகர் விஜய்யின் வாகனத்தை, ஏராளமான தொண்டர்கள் சூழ்ந்ததால் வாகனம் ஊர்ந்து செல்கிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார். இன்று முதல் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டம் பிரச்சாரங்களை நடத்த உள்ளார், அதன் தொடக்கப் பகுதியாக இன்று திருச்சியில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இந்த பிரசாரத்திற்கு 23 நிபந்தனைகளை திருச்சி காவல்துறை விதித்தது. இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் திருச்சி சென்றடைந்தார். பின்னர், தனது பிரசார வாகனம் மூலம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்டார். அப்போது, காவல்துறையினரால் போடப்பட்டிருந்த தடுப்புகளை மீறி, அவரது ரசிகர்களும், தொண்டர்களும் விஜய்யின் வாகனத்தை சூழ்ந்துகொண்டனர். மேலும், சாலைகளில் மக்கள்…
மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள, தவெக தலைவர் விஜய், திருச்சி செல்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல வியூகங்களை வகுத்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெர்மனி இங்கிலாந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதேபோல் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆடு, மாடு, மரங்கள் மாநாடு என தனிப்பாதையில் அரசியல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார். இன்று முதல் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு…
காதல் விவகாரத்தில் ஆணவ கொலை செய்யப்பட்ட மென்பொருள் பொறியாளர் கவின் கொலை வழக்கில் கைதான எஸ்.ஐ. ஜாமீன் கோரி மனு மீதான விசாரணை வரும் 15ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த ஜூலை 27-ம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் காதல் விவகாரம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் சுர்ஜித்தின் உறவினரான தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயபால் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, டிஎஸ்பி ராஜ்குமார் மற்றும் ஆய்வாளர் திருமதி உலகராணி ஆகியோர் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட மூவரையும் காவலில் எடுத்து விசாரித்த பின்னர், அவர்கள் மீண்டும் நீதிமன்ற…
புதுச்சேரியில் சிறுமியை தெரு நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அண்மை காலமாக தெரு நாய்கடியால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெருநாய்கடிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதுச்சேரியில் சிறுமியை தெருநாய் ஒன்றி கடித்த பகீர் வீடியோ வெளியாகியுள்ளது. புதுச்சேரி வீதிகளில் இரவும், பகலும் கட்டுப்பாடின்றி அலைந்து திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையும், அவற்றின் ஆபத்துகளும் அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளன. தெருக்களிலும், பேருந்து நிலையங்களிலும் சுற்றி திரியும் தெருநாய்கள், குழந்தைகள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், முதியவர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் என்று எவரையும் பாகுபாடின்றி துரத்திச் சென்று கடிக்கும் சம்பவங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி, விபத்துகள் ஏற்படுத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சொறிபிடித்த, வெறிபிடித்த நாய்களின் நடமாட்டம் சுகாதாரச் சீர்கேட்டிற்கும், மன உளைச்சலுக்கும் காரணமாக அமைகிறது. இந்நிலையில் நேற்று நகரின் மையப்பகுதியான எஸ்.வி.பட்டேல் சாலையில், நடைபாதையில் சென்ற சிறுமியை…
பொய்யான வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றி வரும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டதாக தவெக தலைவர் விஜய் அறிக்கை மூலம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தங்களுக்கென்றே உண்மையான தோழமை மற்றும் பாரபட்சமற்றத் தன்மையுடன் கூடிய ஓர் அரசு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மக்களின் மனமறிந்து அரசியல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம், மக்களுக்காக ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’யை அமைக்கும் உன்னத லட்சிய நோக்குடன் களமாடி வருகிறது.மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நா வரேன்” என்கிற நமது பயணம்தான் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம். நாளை (13.09.2025) காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்கி அடுத்தடுத்து, நமது மதுரை மாநாட்டில் சொன்னதுபோலவே, என் குடும்ப…