Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கவின் கொலை வழக்கில் வரும் 15ம் தேதி விசாரணை
    தமிழ்நாடு

    கவின் கொலை வழக்கில் வரும் 15ம் தேதி விசாரணை

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kavin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காதல் விவகாரத்தில் ஆணவ கொலை செய்யப்பட்ட மென்பொருள் பொறியாளர் கவின் கொலை வழக்கில் கைதான எஸ்.ஐ. ஜாமீன் கோரி மனு மீதான விசாரணை வரும் 15ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த ஜூலை 27-ம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் காதல் விவகாரம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் சுர்ஜித்தின் உறவினரான தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயபால் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, டிஎஸ்பி ராஜ்குமார் மற்றும் ஆய்வாளர் திருமதி உலகராணி ஆகியோர் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட மூவரையும் காவலில் எடுத்து விசாரித்த பின்னர், அவர்கள் மீண்டும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் சரவணன், சுர்ஜித், ஜெயபால் ஆகிய மூவரின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் (வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம்) காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமா, மூவரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

    இதனிடையே, சரவணன் தரப்பில் அவரது வழக்கறிஞர் சிவசூர்ய நாராயணன், திருநெல்வேலி 2வது கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அரசு மற்றும் சரவணன் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன்வைப்பார்கள். அதன் அடிப்படையில், சரவணனுக்கு ஜாமீன் வழங்குவதா அல்லது ரத்து செய்வதா என நீதிபதி உத்தரவிடுவார்.

    kavin kavin case kavin murder case thoothukudi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிறுமியை கடித்து குதறிய தெரு நாய் – பகீர் சிசிடிவி காட்சி
    Next Article திருச்சியில் ‘உங்கள் விஜய்’… முதல் மக்கள் சந்திப்பை இன்று தொடங்குகிறார்…
    Editor TN Talks

    Related Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.