Author: Editor TN Talks
அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்று அதிமுக மூத்த நிர்வாகியான கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தி உள்ளார். 10 நாட்களுக்குள் இதற்கான நடவடிக்கைகளை தொடங்காவிட்டால் இதே மனநிலையுடன் உள்ளவர்களை ஒருங்கிணைத்து அதற்கான பணிகளை எடுக்க நேரிடும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது.. 1972-ல் அதிமுகவில் கிளைச்செயலாளராக பணியை தொடங்கினேன். 1975 கோவையில் அதிமுக பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதற்காக எம்ஜிஆரால் பாராட்டு வாங்கியவன். புரட்சித் தலைவர் எம்ஜிஆரை விட செல்வாக்கு மிக்கவர்கள் உண்டா?. அப்படிப்பட்ட அவரே கட்சியில் இருந்து எஸ்டிஎஸ், கோவை செழியன் போன்றவர்கள் வெளியேறியபோது அவர்களது வீட்டிற்கே சென்று அழைப்பு விடுத்தார். கட்சி நன்றாக இருக்க வேண்டும், தொண்டர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் அவ்வாறு செய்தார். அதனால் தான்…
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் பெரியார் குறித்து தமிழில் நீண்ட உரையாற்றினார். அதில், பல நூறு ஆண்டுகளாக, உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அரங்கத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர், தெற்காசிய அரசியலை புரட்டிப் போட்ட இயக்கமான திமுக தலைவர் என்ற தகுதியோட மட்டுமில்லாமல் பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்தோட நிற்கிறேன். பகுத்தறிவுப் பகலவன் – அறிவாசான் தந்தை பெரியாரின் உருவப்படத்தை இங்கு திறந்து வைத்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவோட அடையாளம் மட்டுமில்லாமல் மனித உரிமையின் அடையாளம், உலக அடையாளம். அப்படிப்பட்ட இந்த இடத்தில் பெரியார் படம் திறக்கப்பட்டிருப்பது உலகப் பெருமை. தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு என்று சொல்லிட்டு இருக்கும் நான் பலமுறை பெரியாரைப் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டில் நடைபெற்ற திருமணத்தை நடத்தி வைக்க தந்தை பெரியார் வந்தபோது, இந்தக் கையால அவருக்கு உணவு பரிமாறி இருக்கிறேன். இதை…
Sengottaiyan: இன்று மனம் திறந்து பேசப்போவதாக அதிமுக முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் பேசி இருப்பதால், அவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் கடந்த 1ம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செங்கோட்டையன் இன்று மனம் திறந்து பேச உள்ளதாக அறிவித்தார். இதனால் எடப்பாடியுடன் கருத்து மோதலில் இருந்த செங்கோட்டையன் அவருக்கு எதிராக ஏதாவது போர்க்கொடி தூக்குவாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையே, செங்கோட்டையுடன் பேச்சுவார்த்தை நடத்த குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் சென்றிருந்தார். அப்போது அரைமணி நேரம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இன்று காலை 9.15 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கும் செங்கோட்டையன், கட்சி தலைமையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியை…
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வெளிநாடுகளுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் ஜெர்மன் பயணத்தை முடித்து கொண்டு, இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு லண்டன் சென்றுள்ள அவரது முன்னிலையில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதனிடையே லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை வரலாற்று சிறப்புமிக்க சம்பவமான பெரியார் உருவப்படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து “The Dravidian Pathway” and “The Cambridge Companion to Periyar” என்ற நூலையும் வெளியிட்டார். தொடர்ந்து இந்நிகழ்வில் பேசிய அவர், பெரியாரின் மரபு மற்றும் திராவிட சிந்தனைகளின் ஆழமான தாக்கம் குறித்து எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். பெரியார் உருவப்படம் திறப்பு தொடர்பாக முதலமைச்சர் நெகிழ்ச்சி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில், ” பெரியார் தமிழர் தலைவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டு…
வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி வராண்டை வரும் 15 ம் தேதி செயல்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-11 ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த துரைமுருகன் 2007-2009 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதன் விசாரணையில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. இதனால் அமைச்சர் துரைமுருகன், அவரின் மனைவி ஆகியோரை நேரில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை நீதிமன்றம்…
தவெக தலைவர் விஜய் வரும் 13ம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுகவும், அதிமுகவும் தங்களின் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதேநேரம் தேர்தலுக்கு தயாராகி வரும் விஜய் பல கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி மக்களின் மனநிலை, தொகுதி நிலவரம் மற்றும் பிரச்சாரம் தொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். இதேநேரம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் கட்சி வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் மதுரை மாநாட்டை தொடர்ந்து கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. அந்த வகையில் வரும் 13ம் தேதியில் இருந்து திருச்சியில் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என கூறப்படுகிறது. விஜய் மேற்கொள்ளும் இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு “மக்கள் சந்திப்பு”என பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் இந்த முதல் சுற்றுப்பயணம் ஒருவாரம் அல்லது 10 நாட்களுக்கு நீடிக்கும் என்று…
பாஜக தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாஜக, அதிமுக கூட்டணியை உறுதி செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லியில் அமித்ஷா வீட்டில் பாஜக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலையை தவிர்த்து மற்ற 9 பேரும் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். இதற்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்ததால் பாஜக கூட்டணியில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் மாநில பொறுப்பில் இருந்து விலகி 4 மாதங்களாக எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாத அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பாஜக எந்தவித பொறுப்பும் தராததால் தன்னால் அரசியலில் துடிப்புடன் செயல்பட முடியவில்லை அண்ணாமலை கருதுவதாக கூறப்படுகிறது. மாநிலத் தலைமைப் பொறுப்பில் இருப்போர் சுதந்திரமாக செயல்பட்டால் மட்டுமே தேசியத் தலைமை எதிர்பார்க்கும் வெற்றியை பெற முடியும் என்பதே அண்ணாமலை நினைப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி தமிழகத்தில் 20…
ஓணம் பண்டிகையை ஒட்டி விமான கட்டணம் 3 மடங்கு அதிகரித்துள்ளது. கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு படை எடுக்கத் தொடங்கியுள்ளனர். ரயில்களில் முன்பதிவு முடிந்த நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரித்து காணப்படுகிறது. ஆகையால் பெரும்பாலான மக்கள் விமான சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், விமான கட்டணங்களும் அதிகரித்து வருகிறது. சென்னை-திருவனந்தபுரம் விமான கட்டணம் ரூ.4,359-ல் இருந்து ரூ.19,903ஆக அதிகரித்துள்ளது. சென்னை – கொச்சி இடையே விமான கட்டணம் ரூ.3,713ல் இருந்து ரூ.11,798ஆக அதிகரித்துள்ளது. அதைபோல சென்னை – கோழிக்கோடு இடையேயான விமான கட்டணம் ரூ.3,629ல் இருந்து ரூ.10,286ஆக உயர்ந்துள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் தோனி நேரில் கண்டு களித்தார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் மோதினர். இதில் ஜோகோவிச் 6-3, 7-5, 3-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் அவர் அல்காரஸுடன் மோதவுள்ளார். இந்த நிலையில், ஜோகோவிச் விளையாடிய காலிறுதி போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி நேரில் கண்டு களித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராணிப்பேட்டையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விளக்கமளித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சாத்தூர் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளிக்க வந்த முதியவரை போலீசார் தாக்கியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. போலீசாருக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த முகாமில் கலந்து கொண்ட சாத்தூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சாத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடபதி (வ/65) என்பவர் மனு சம்மந்தமாக வாக்குவாதம் செய்து திடீரென கிராம நிர்வாக அலுவலரை கையால் தாக்கியதுடன், அரசு பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான காணொளி பொது வெளியில் பகிரப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அங்கு பணியிலிருந்த உதவி ஆய்வாளர் பிரபாகரன் என்பவர் பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார். இதன்…