Author: Editor TN Talks
முதலமைச்சரை அங்கிள் என்று விஜய் பேசியதில்லை தவறில்லை என்று பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார். மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி உள்ளது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று கூறியதுடன், தமிழ்நாட்டில் பெண்கள் யாருக்கும் பாதுகாப்பில்லை, சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அத்துடன் அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடம் சரிதானே என்று கேள்வி எழுப்பிய விஜய், அந்த சத்தம் கேட்கிறதா? என்றும் அதிர வைத்தார். அவரது பேச்சுக்கு தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதுகுறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,” நான் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு நிறைய முறை சென்று இருக்கிறேன். நானே வணக்கம் அங்கிள்.. வணக்கம் ஆண்ட்டி.. எப்படி இருக்கீங்க என்று…
ஆர்எஸ்எஸ் அதிமுகவை வழிநடத்தினால் என்ன தவறு என்று பேசுமளவுக்கு இடம் கொடுப்பதை பார்க்கும்போது அதிமுகவை நினைத்து பரிதாபமாக உள்ளதாக விடுதலை சிறுத்கைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆர்எஸ்எஸ் பாசறையில் வாழ்ந்தவர். அவர் அப்படி கருத்து கூறுவதில் எந்த வியப்பும் இல்லை. அதிமுக பெரியார் பாசறையில் வளர்ந்த ஒரு அரசியல் இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற சக்திகள் இங்கே வளர்வதற்கு இடம் தரவில்லை என்கிற கருத்து இங்கே வலுவாக உண்டு. ஆனால், அவர்களை பின்பற்றக்கூடிய இன்றைய தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள், ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளுக்கு ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்பது அளிப்பது அதிர்ச்சிக்குரியது. அந்த துணிச்சலில்தான் ஆர்எஸ்எஸ் வழி நடத்தினால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பக்கூடிய நிலையும் உருவாகி இருக்கிறது. இது அதிமுகவின் நிலை எவ்வளவு பரிதாபமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. விஜய்க்கும் அவர்கள் வேண்டுகோள்…
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி, 28ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் “ஏ” பிரிவில் இந்தியா, ஓமன், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம் பிடித்துள்ளன. “பி” பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன. 8 அணிகளும் தொடருக்கு தயாராகி வருகின்றன. இந்த போட்டிக்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கின்றன. இத்தொடர் நாளை தொடங்கி 7ஆம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். போட்டிகள் அனைத்தும் சார்ஜாவில் நடத்தப்பட இருக்கின்றன. முத்தரப்பு தொடர் நாளை தொடங்கும் நிலையில், மூன்று அணிகளின் கேப்டன்களான முகமது வாசீம், சல்மான் ஆகா, ரஷித் கான் ஆகியோர் கோப்பையுடன் போஸ் கொடுத்துள்ளனர்.
இணையத்தில் பரவிய பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோக்கள் முடக்கப்பட்டாலும், தமிழகத்தில் மட்டும் எப்படி மீண்டும் மீண்டும் பரவி வருகிறது என சைபர் கிரைம் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இணையதளங்கள், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை அகற்றக் கோரி பெண் வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விடியோக்களை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் வழிக்காட்டு நெறிமுறைகளை வகுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் தரப்பில், இணையதளத்தில் வீடியோக்கள் முடக்கப்பட்ட போதிலும், தமிழகத்தில் 3 இணைதளங்களில் பரவி வருவதாகவும், புதிதாக ஒரு லிங்க் மூலமும் வீடியோ பகிரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வீடியோக்களை நீக்க உத்தரவிட்டும் பின்னர் மும்பை, டெல்லி போன்ற…
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கோடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த வழக்கை தற்போது விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்-கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும், வழக்கை சிபிஐ- க்கு மாற்றக் கோரி புதிய மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை காவல்துறை முறையாக விசாரணை நடத்தாததால் விசாரணையை சிபிஐக்கு…
தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களை பராமரிப்பது, பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்துவதற்காக, தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கோபுரம் முன்பு, 6 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்ட அறநிலையத் துறை அனுமதியளித்து, 2023ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ராஜகோபுரத்தின் முன் வணிக வளாகம் கட்டுவது, கோவிலின் விழாக்களுக்கு இடையூறாக அமையும் எனவும், விழா காலங்களில் பக்தர்கள் பங்கேற்க தடையாக இருக்கும் எனவும் கூறி, இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வணிக வளாகம் கட்டும் திட்டத்தை மறு பரிசீலை செய்ய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, வணிகவளாகம்…
புதுச்சேரியின் புகழ்பெற்ற ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் சித்ரா சர்க்கார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அளவில் தரமான மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனையில் முக்கிய இடம் பிடித்துள்ளது புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை ஆகும். மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதன் வளாகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் ஆண்டுதோறும் 250 இளங்கலை மருத்துவர்களும், 200 முதுகலை மருத்துவர்களும் தேர்வாகின்றனர். இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் சித்ரா சர்க்கார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், மருத்துவராக மட்டுமின்றி விஞ்ஞானியாகவும் உள்ளார். கல்வி மற்றும் ஆராய்ச்சியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர். சிறந்த நோயியல் நிபுணர். நரம்பியல் நோயியல் துறையில் சர்வதேச அளவில் பங்களித்துள்ளார். கடந்த 2019ல் பெங்களூருவில் உள்ள இந்திய அளவியல் அகாடமி வெளியிட்ட 100 புகழ்பெற்ற இந்தியாவில் அறிவியலில் பெண்கள் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. புதிய தலைவராக அவர்…
கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 7 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக ஆஜராகினர். மறு விசாரணை வரும் அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும் என நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார். 150 பக்க குற்றப்பத்திரிகையின் நகல் முன்னாள் அமைச்சர் கையில் வழங்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே நாளில் விஜய் நல்லதம்பி…
தூங்குபவர்களை எழுப்பி விடலாம் தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது என அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி தந்துள்ளார். தமிழகத்தில் ஓடாமல் இருந்த பல திருத்தேர்களை ஓட வைத்த பெருமை திமுக அரசை சேரும் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் புதிதாக கட்டப்பட உள்ள அன்னதான கூடம் அடிக்கல் நாட்டும் விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கோயில் வளாகத்தை சுற்றி வந்த அமைச்சர் சேகர்பாபு, வளாகத்தில் பல பணிகள் நடைபெறாமல் இருப்பது கண்டு கோபமடைந்த அவர் அதிகாரிகளை கடிந்து கொண்டார். மேலும் கோயில் வளாகத்தை சுற்றி குப்பைகள் அதிக அளவில் இருந்ததால் தனக்கு திருப்தி இல்லை என்றும் முறையாக பணிகளை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து…
தேனி மாவட்டம் கம்பம் அருகே கல்குவாரி பிரச்சினை காரணமாக வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் கடந்த 26 ஆம் தேதி இரவு சதீஷ்குமார் என்ற சசி கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்து கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ராயப்பன்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கல்குவாரி சம்பந்தமாக இருந்த முன் விரோதம் காரணமாக வாலிபர் சதீஷ்குமார் என்ற சசி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கொலை சம்பந்தமாக பத்துக்கும் மேற்பட்ட கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த போலீசார் கொலை சம்பவம் மற்றும் கொலை செய்ய தூண்டியவர்…