Close Menu
    What's Hot

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்…. ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 இலட்சம் வழங்கிய முதலமைச்சர்

    நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது; மக்களை விட்டு அல்ல…! கண்ணீர் மல்க பேசிய ஷேக் ஹசீனா

    அசாம் வெள்ளப் பாதிப்பு: சேதங்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு – விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
    தமிழ்நாடு

    ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு – விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

    Editor TN TalksBy Editor TN TalksAugust 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1200 675 22639801 thumbnail 16x9 armstrong
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கோடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த வழக்கை தற்போது விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்-கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும், வழக்கை சிபிஐ- க்கு மாற்றக் கோரி புதிய மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை காவல்துறை முறையாக விசாரணை நடத்தாததால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, இதே கோரிக்கையுடன் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    இதையடுத்து, கீனோஷ் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தீர்ப்பு வரும் வரை இந்த மனு விசாரிக்க முடியாது என தெரிவித்த நீதிபதி, கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரியகோயில்களில் ஏன் தேவஸ்தானம் அமைக்கக் கூடாது? – அரசுக்கு நீதிமன்றம் யோசனை
    Next Article முடக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் மீண்டும் பரவுவது எப்படி? நீதிமன்றம் கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்…. ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 இலட்சம் வழங்கிய முதலமைச்சர்

    August 5, 2026

    தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை தான்..! சீமான் விமர்சனம்..!

    August 5, 2026

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்… மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வரும் … அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்…. ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 இலட்சம் வழங்கிய முதலமைச்சர்

    நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது; மக்களை விட்டு அல்ல…! கண்ணீர் மல்க பேசிய ஷேக் ஹசீனா

    அசாம் வெள்ளப் பாதிப்பு: சேதங்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

    தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை தான்..! சீமான் விமர்சனம்..!

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்… மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வரும் … அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.