Close Menu
    What's Hot

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது சட்டசபை!! தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்!!

    ஒரே கிளிக்கில் டாஸ்மாக் மதுபானம்.. புதிய இணையதளம் மூலம் நாளை முதல் சேவை!

    6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மாற்றம்.. ஒரே புத்தக முறையை கொண்டு வரும் பள்ளிக்கல்வித்துறை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பெரியகோயில்களில் ஏன் தேவஸ்தானம் அமைக்கக் கூடாது? – அரசுக்கு நீதிமன்றம் யோசனை
    தமிழ்நாடு

    பெரியகோயில்களில் ஏன் தேவஸ்தானம் அமைக்கக் கூடாது? – அரசுக்கு நீதிமன்றம் யோசனை

    Editor TN TalksBy Editor TN TalksAugust 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG Madras High Court Bu 2 1 HEDS3NUB
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களை பராமரிப்பது, பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்துவதற்காக, தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கோபுரம் முன்பு, 6 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்ட அறநிலையத் துறை அனுமதியளித்து, 2023ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    ராஜகோபுரத்தின் முன் வணிக வளாகம் கட்டுவது, கோவிலின் விழாக்களுக்கு இடையூறாக அமையும் எனவும், விழா காலங்களில் பக்தர்கள் பங்கேற்க தடையாக இருக்கும் எனவும் கூறி, இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

    வணிக வளாகம் கட்டும் திட்டத்தை மறு பரிசீலை செய்ய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

    இந்த நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, வணிகவளாகம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படப் போவதில்லை என அறநிலையத் துறை ஏற்கனவே உத்தரவாதம் அளித்திருந்த நிலையில், ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது குறித்த மாற்றுத் திட்டம் சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அறநிலையத் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதை ஏற்று இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அருணாச்சலேஸ்வரர் கோவிலை விட்டு தொலைவில் அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்கிறதா என கண்டறிந்து தெரிவித்தால் அங்கு வணிக வளாகம் கட்டலாம் என்றனர்.

    கோவிலுக்கு அருகில் கோவில் நிலமாக இருந்தாலும் சரி, அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும் சரி, எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

    மேலும், தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களை பராமரிப்பது, பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்துவது போன்றவற்றுக்காக, தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என, இந்து சமய அறநிலையத் துறைக்கு அறிவுறித்திய நீதிபதிகள், திருப்பதி கோவில் பராமரிப்பை உதாரணமாக சுட்டிக்காட்டினர்.

    பின்னர் இந்த வழக்குகளின் விசாரணையை நீதிபதிகள், செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜிப்மருக்கு புதிய தலைவராக சித்ரா சர்க்கார் நியமனம்
    Next Article ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு – விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
    Editor TN Talks

    Related Posts

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது சட்டசபை!! தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்!!

    August 5, 2026

    ஒரே கிளிக்கில் டாஸ்மாக் மதுபானம்.. புதிய இணையதளம் மூலம் நாளை முதல் சேவை!

    August 5, 2026

    6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மாற்றம்.. ஒரே புத்தக முறையை கொண்டு வரும் பள்ளிக்கல்வித்துறை!

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது சட்டசபை!! தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்!!

    ஒரே கிளிக்கில் டாஸ்மாக் மதுபானம்.. புதிய இணையதளம் மூலம் நாளை முதல் சேவை!

    6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மாற்றம்.. ஒரே புத்தக முறையை கொண்டு வரும் பள்ளிக்கல்வித்துறை!

    விவசாயிகளின் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே தவெக அரசு தன்னை கைது செய்தது!- உதயநிதி

    ஆகஸ்ட் 11-ஐ சுதந்திர தினமாக அறிவித்தது பலுசிஸ்தான்: உலக நாடுகளின் அங்கீகாரத்தைக் கோரி பலுச் தலைவர்கள் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.