Author: Editor TN Talks
குடியரசு தலைவர், ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுத்த காலநிர்ணயம் செய்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் விசாரணை நான்காவது நாளாக நடந்துவருகிறது . இன்றைய தினம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு காலநிர்ணயம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதத்துக்கு என்ன பதில் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி இரண்டாவதாக ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அதனை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியுமா? ஆளுநருக்கு வீடோ அதிகாரம் உள்ளதா? நீதிபதிகள் கேள்வி மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்ப இயலுமா? அதன் விளைவுகள் என்ன? என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குழும குத்தகை பாகையில் 20 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு உடனடியாக செலுத்துமாறு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது! திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம் குழுமம் ஹோட்டல் நடத்தி வந்தது. குறிப்பிட்ட இடத்திற்கான குத்தகை காலம் முடிவடைந்து விட்டதால், அந்த இடத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து எஸ்.ஆர்.எம் குழுமம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் ஆஜராகி, எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் குத்தகை காலம் கடந்த 2024ம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது என்பதால் அவர்கள் அந்த இடத்திற்கு உரிமை கோர முடியாது என வாதிட்டனர். மேலும் அந்த நிறுவனம் குத்தகை பாகியாக 38 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது என்றும் தெரிவித்தனர். இதனை…
குஜராத்தில் தயாரிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் பணியை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி! அரசு முறை பயணமாக குஜராத் மாநிலம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சுசுகி நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு தொழிற்சாலைக்கு சென்றார். அங்கு சுசுகி நிறுவனம் தயாரித்து உள்ள “இ-விதாரா சுசுகி” எனும் மின்சார வாகனங்களின் ஏற்றுமதியை பிரதமர் கொடியசைத்து செய்து தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி இன்று அகமதாபாத் ஹன்சல்பூரில் உள்ள சுசுகி தொழிற்சாலையில் இருந்து கொடியசைத்து ஏற்றுமதியை தொடங்கி வைத்துள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து சுமார் மேற்பட்ட நாடுகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்களை சுசுகி நிறுவனம் ஏற்றுமதி செய்ய உள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்றைய தினம் சுமார் 5,400 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
காலையுணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை மட்டும் விரிவுபடுத்துவது பெரிதாக பலனளிக்காது! – என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் அறிக்கை: காலையுணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை மட்டும் விரிவுபடுத்துவது பெரிதாக பலனளிக்காது! தேசிய கல்விக் கொள்கையின் (NEP) அங்கமான காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கும் முதல்வர் திரு. @mkstalin அவர்களுக்கு வாழ்த்துகளைத்… https://t.co/tKpczqin2T — Nainar Nagenthiran (@NainarBJP) August 26, 2025 தேசிய கல்விக் கொள்கையின் (NEP) அங்கமான காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கும் முதல்வர் திரு. @mkstalin அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தங்கள் மனதுக்கு நிறைவான இந்நன்னாளில், சமீபத்தில் தாராபுரம் அரசுப் பள்ளியிலும் திருவாரூர் பூனாயிருப்பு அரசுத் தொடக்கப் பள்ளியிலும் வழங்கப்பட்ட காலையுணவில் பல்லி விழுந்து கிடந்ததை, நியாபகப்படுத்த விரும்புகிறேன். இவை வெறும் எடுத்துக்காட்டுச் சம்பவங்களே. காலையுணவில்…
சேலம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து இலவசமாக வழங்கப்படும் உலர் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என்பது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்துக்கு சொந்தமான திருவள்ளூர், துாத்துக்குடி, சேலம் உள்பட ஐந்து அனல் மின் நிலையங்களில் வெளியாகும் உலர் சாம்பலில், 10 சதவீதம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மீதம் மற்ற நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. சேலம் அனல் மின் நிலையத்தில் உலர் சாம்பல் சிறு, குறு நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படாமல், மாவட்டத்தில் உள்ள முத்துகுமார் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்துக்கு, சட்டவிரோதமாக வழங்கப்படுகிறது எனவும், இந்த உலர் சாம்பல், அந்த நிறுவனம் வெளிசந்தையில் அதிக விலைக்கு விற்பதாகவும், இந்த முறைகேடு குறித்து, கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனருக்கு அளித்த…
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்துவதற்கான அறிவுரைகள் கூட்டுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது நியாயவிலை கடைகளில் உள்ள குடும்ப அட்டைகள் மற்றும் கள நிலவரத்தை பொறுத்து, பகுதிகளுக்கு ஏற்ப விநியோகம் செய்யப்படும் நாட்களை தீர்மானித்துக் கொள்ளலாம் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கு ஏதுவாக மண்டலங்களில் முதன்மை நியாய விலைக்கடைகள் தேர்வு செய்யப்பட வேண்டும். பொதுவிநியோகத்திட்டப் பொருட்களை கொண்டு செல்வதற்கு தேவையான வாகனங்களை உரிய அரசு விதிமுறைகளை பின்பற்றி அமர்த்தப்பட உத்தரவு வாகனங்களில் நியாயவிலைக்கடைப் பணியாளர்களுக்கு தேவையான உரிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும். தரமான கட்டுப்பாட்டுப் பொருட்களை சேதமின்றி வாகனத்தில் கொண்டு சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தல்
சேலத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட அதிக வீரியதன்மை கொண்ட இரண்டு டன் ஜெலட்டின் குச்சிகளை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து மதுக்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை வழியாக உரிய ஆவணங்கள் இன்றி வெடி பொருள்கள் கடத்தப்படுவதாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கேரளாவில் உள்ள கல்குவாரிகளில் பயன்படுத்துவதற்காக வெடிபொருள்கள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தமிழக கேரள எல்லை பகுதியில் சோதனையில் ஈடுபட்டு இருந்த போது , அந்த வழியாக வந்த பொலீரோ வாகனத்தை சோதனையிட்டனர். அதில் அதிக வீரியதன்மை கொண்ட 2 டன் ஜெலட்டின் குச்சிகள் உட்பட வெடிமருத்துகள் உரிய அனுமதி இல்லாமல் கேரளா கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது தீவிரவாத தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை… கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை இமெயில் வழியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததின் பெயரில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய்கள் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற படையினர் ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அலுவலகத்தின் பிரதான கட்டடங்கள், வாகன நிறுத்தும் இடங்கள், பதிவறைகள், கூட்டரங்குகள், பின்புற வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது, அந்த மிரட்டல் உண்மையா அல்லது தவறான தகவலா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இமெயில் அனுப்பிய நபரை கண்டறிவதற்காக சைபர் குற்றப்பிரிவு போலீசாரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.…
தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஆகஸ்ட் 30ம் தேதி முதலமைச்சர் லண்டன், ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்கிறார் தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வப்போது வெளிநாடுகளிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, அதில் பங்கேற்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழிலதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில், இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை முதல்வர் மேற்கொண்டுள்ளார். கடந்த 2022 மார்ச் மாதம் துபாய், ஐக்கிய அரபு நாடுகளில் ரூ.6,100 கோடி ஒப்பந்தங்கள், அதே ஆண்டில் சிங்கப்பூர், ஜப்பானில் ரூ.1,342 கோடி ஒப்பந்தங்கள், 2024 தொடக்கத்தில் ஸ்பெயினில் ரூ.3,440 கோடி ஒப்பந்தங்கள், அதே ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் அமெரிக்காவில் ரூ.7,616 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அடுத்து இங்கிலாந்து,…
சமூக நீதி குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு எந்த அருகதையும் கிடையாது திமுகவினர் துரோகிகள் சமுக நீதிக்கான விரோதிகள் தேர்தலின் போது கொடுத்த எந்த வாக்குறுதியும் திமுக நிறைவேற்றவில்லை என்பது தான் உண்மை – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு மழை வர உள்ளதால் சென்னை மக்கள் படகுகளுடன் தயாராக இருக்க வேண்டும் பொருட்களை எல்லாம் பத்திரமாக மொட்டை மாடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அட்வைஸ் 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த தேர்தல் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பான ஆவண தொகுப்பு விடியல் எங்கே என்ற தலைப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து மேடையில் பேசிய அன்புமணி, பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக 36 வாக்குறுதிகள் கொடுத்தார்கள் ஆனால் அதில் 14 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. பல வாக்குறுதிகள் அரைக்குறையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தில் 4 வயது…