Author: Editor TN Talks
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி இன்று காலை காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ரேணுகா தேவி. கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரேணுகா தேவியின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலுவுக்கு திமுக கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்தமாதம் 24-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 2-ம் தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி திருப்பதி தேவஸ்தானமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நேற்று மாலை திருமலை அன்னமய பவனில் ஆய்வுக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில், கோயில் கைங்கர்யங்கள், வாகன சேவைகள், என்ஜினீயரிங் பணிகள், விடுதி வசதிகள், கல்யாணக் கட்டா, அன்னப்பிரசாதம், தூய்மைப்பணி, தோட்டக்கலைப்பிரிவு அலங்காரங்கள், ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், காவல் உதவி மையங்கள், பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், தேவஸ்தானம் மற்றும் அரசு போக்குவரத்து வசதிகள், வாகன நிறுத்துமிட ஏற்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, ஆட்சியர் வெங்கடேஸ்வர், போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷவர்தன் ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மும்பையில் வரலாறு காணாத கனமழையால், நகரம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. மகாராஷ்டிராவில் முன் எப்போதும் இல்லாத அளவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக தொடர்ந்து மழை பெய்து கொண்டே வருகிறது. இதனால் வ்ர்த்தக நகரமான மும்பை வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. பல்வேறு பகுதிகளில் 100 மில்லி மீட்டரை கடந்து மழை பொழிவு பதிவாகியுள்ளது. கடந்த 8 மணி நேரத்தில் மட்டும் 177 மிமீ மழை பதிவாகியிருக்கிறது. இது கடந்த 100 ஆண்டுகளில் மும்பையில் இல்லாத மழை அளவாகும். கனமழை எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாதர் நகரம், கிங் சர்கிள் மேம்பாலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான சேவைகளும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராய்காட், ரத்னகிரி, சத்தாரா, கோல்ஹாபுர், புனே உள்ளிட்ட நகர்களுக்கு…
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுபடவுள்ளனர். 61 நாட்கள் தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 55-க்கும் மேற்பட்ட மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுபடகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் பிரச்சனை இன்றி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தங்கச்சி மடத்தில் இன்று அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் மிகப்பெரிய அளவில் ரயில் மறியல் போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளனர். மாலை…
துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல் நிலைக் காரணமாக பதவி விலகுவதாக அறிவித்தார். அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்ட நிலையில், அடுத்த துணை குடியரசுத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதிய துணை குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. புதிய துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மாலை 5 மணிக்கு மேல் வாக்குகள் எண்ணப்பட்டு, உடனே முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்காக பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். ’இந்தியா’ கூட்டணி சார்பில் வேட்பாளர் யார் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர்.…
தனியார்மயப்படுத்தலை எதிர்த்து சென்னை மண்டல தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததே அமைச்சர் சேகர்பாபு-வுக்கு சொந்தமான அறக்கட்டளை தான் என்ற பகீர் தகவலை அதிமுக அம்பலப்படுத்தி உள்ளது. பணிநிரந்தரம் கோரியும், தனியார் மயப்படுத்தலைக் கண்டித்து சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 2 மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ரிப்பன் மாளிகைக்கு எதிரே அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கே.என்.நேரு, சேகர்பாபு போன்ற அமைச்சர்கள் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து வந்தனர். இந்நிலையில் தனியார் அறக்கட்டளை ஒன்று குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடைபெறுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர்களை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த 12-ந் தேதி இரவு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை, போலீசார் குண்டுகட்டாக தூக்கியும், விரட்டி – விரட்டியும் கைது செய்தனர்.…
பாகிஸ்தான் ராணுவத்தில் புதிய படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 26 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த சம்பவம். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் பதிலடியை சமாளிக்க முடியாத பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் கெஞ்சியது. இதனையடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது. இருப்பினும் தங்களது சேதங்களை மறைத்து, தாக்குதலில் நாங்கள் தான் வெற்றி அடைந்தோம் என பாகிஸ்தான் பெருமைபட்டுக் கொண்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, அந்நாட்டு…
நடிகை கஸ்தூரி அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்துள்ளார். இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நடிகை திருமதி.க ஸ்தூரி அவர்களும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், Namis South Queen India நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்து அவர்களும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா அவர்களின் முன்னிலையில், பாஜகவில் இன்று இணைந்தனர். சமூக செயல்பாட்டாளரான திருமதி.கஸ்தூரி அவர்களும் நமீதா மாரிமுத்து அவர்களும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் தமிழ்நாடு பாஜகவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.” என கூறியிருக்கிறார்.
கோழிக்கோடுக்கு சென்று கொண்டிருந்த தனியார் விமானம் ஒன்று நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 166 பயணிகளுடன் கோழிக்கோடு நோக்கி தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டுபிடித்த விமானி, இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இருப்பினும் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நள்ளிரவு 12.10 மணியளவில் விமானத்தை அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டட்னர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று மாலை விமானம் கோழிக்கோடு புறப்படும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
தனது 50 ஆண்டுகால திரையுலகப் பயணத்தை நிறைவு செய்யும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 1975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதனை தொடர்ந்து, வில்லன், ஹீரோ என சமீபத்தில் வெளியான கூலி வரை, கிட்டத்தட்ட 50 ஆண்டு காலத்தில் 171 படங்கள் நடித்து சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தன்னிடத்தே வைத்துள்ளார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் 50 ஆண்டு காலத்தை நிறைவு செய்யும் ரஜினிகாந்திற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அனைவருக்கும் 79வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…