Author: Editor TN Talks

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ம் வகுப்பு தேர்வை இனி மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 2026-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்து இருந்தது. இந்த நிலையில், மாணவர்களின் பயத்தைப் போக்கும் வகையில், புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 2026-27-ம் கல்வி ஆண்டு முதல் 9-ம் வகுப்புக்கு, இந்த முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளை மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுதலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், 2023ம் ஆண்டு முதல் சோதனை முறையில், பொதுத்தேர்வு தவிர்த்து, மற்ற தேர்வுகளை, 9ம் வகுப்பு…

Read More

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலி தன்னை வாக்களிக்க விடவில்லை என நடிகை ரவீனா வருத்தம் தெரிவித்துள்ளார். சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தேர்தல் சென்னை விருகம்பாக்கத்தில் இன்று தொடங்கியது. இதில் சுமார் 2,000 உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர். தினேஷ், பரத், சிவ சீனிவாசன் ஆகிய 3 பேர் தலைமையில் 3 அணிகள் போட்டியிடுகின்றனர். அதேப் போல தலைவர் பதவிக்கு சுயேட்சையாக ஆர்த்தி கணேஷ் போட்டியிருகிறார். காலை முதலே சங்கத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ரவீனா தாஹா, தன்னை வாக்களிக்க விடவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ரெட் கார்ட்’ வழங்கப் பட்டிருப்பதால் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் என்னை வாக்களிக்க விடவில்லை. `ரெட் கார்ட்’ இருந்தால் போட்டியிடதான் முடியாது, வாக்களிக்கலாம் என்று சொன்னார்கள், ஆனால் இப்போது என்னுடைய வாக்குரிமையும் பறிக்கப்பட்டது” என்றார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவிலும், சின்னத்திரையிலும் அறிமுகமானவர் ரவீனா தாஹா.…

Read More

அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டம் செல்லாது என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமக கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று காலை தொடங்கி மதியம் வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், திமுகவை வீழ்த்த உறுதியேற்பது, வன்னியர் இடஒதுக்கீடு தரவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் உட்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதேப்போல், இந்தக் கூட்டத்தில் அரசியல் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. அதில், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் அனைத்து தரப்பு மக்களாலும் மிகவும் வெறுக்கப்படும் ஆட்சி என்றால் அது தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி தான் என்பதே அனைத்து தரப்பினரின் பொதுக்கருத்தாக உள்ளது. அந்த அளவுக்கு அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. அரசால் அனைத்து வகைகளிலும் மிக கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இன்றைய தமிழக அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் பெரும் கோபம் கொந்தளிக்கின்றனர். இந்த அரசு அகற்றப்பட வேண்டும் என…

Read More

சென்னையில், தூய்மை பணியாளர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் வழங்கியதைக் கண்டித்து உழைப்பவா் உரிமை இயக்கம் சாா்பில் அந்த மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணிப்பாதுகாப்பு, ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு 10-வது நாளாக தூய்மை பணியாளர்கள் தொடர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், அது பலனளிக்கவில்லை. இந்த நிலையில், போராட்டக் குழுவுடன், 7-ம் கட்டமாக அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆகையால் மீண்டும் தூய்மை பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்வார்கள் எனக் கூறப்படுகிறது.

Read More

பெங்களூருவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 3புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்காக இன்று காலை 10.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு சென்ற அவர், 3 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். ”பெங்களூரு-பெலகாவி, அமிர்தசரஸ்-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் – புனே” ஆகிய வழித்தடங்களில் இந்த புதிய ரயில்கள் இயக்கப்படவுள்ளன. பெங்களூருவில் சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை ஊதா நிறப்பாதையிலும், சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை பசுமை நிறப்பாதையிலும் 76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பசுமை நிறப்பாதையில் உள்ள ஆர்.வி.ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர்…

Read More

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் பகவான் திருக்கோவிலில் ஆடி மாதம் நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் சுரபி நதிக்கரையில் சுயம்பு ஸ்ரீ சனீஸ்வரர் பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே சனி பகவானுக்கு என்று தனி கோவிலாக திருநள்ளாறிலும்,குச்சனூரிலும் மட்டும்தான் அமைந்துள்ளது. இந்த தளத்தில் சனி பகவான் மூலவராகவும் உற்சவர்ராகவும் காட்சியளிக்கிறார்.இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருட ஆடி திருவிழாவில் ஆடி மாதம் நான்காம் சனிக்கிழமையாகவும் இந்த மாதத்தில் கடைசி சனிக்கிழமையாகவும் உள்ள இன்று குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோவிலில் வழிபட ஏராளமான பக்தர்கள் குவியத் தொடங்கினர்.‌ சுரபி நதியில் புனித நீராடிய பக்தர்கள் எள் தீபம் வைத்தும் பொறி படைத்தும், காக்கை வடிவிலான…

Read More

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம், சேம நல நிதி உயர்வு, உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். போலி வழக்கறிஞர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும், விரைவில் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கூறியுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கறிஞர்கள் பணியை மேற்கொண்ட 30க்கும் மேற்பட்ட மூத்த வழக்கறிஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.மேலும் இந்த கூட்டத்தில் மத்திய மாநில அரசுகள் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் வழக்கறிஞர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், சேமநல நிதியை 10 லட்சத்தில் இருந்து உயர்த்தி தர வேண்டும், என மத்திய அரசிற்கும், தமிழக அரசு வழக்கறிஞர்களுக்கு…

Read More

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக புதிதாக 360 டிகிரி கோண முப்பரிமாண ரியாலிட்டி டோம் திரையரங்கம் தொடக்கம். புதிய அனுபவத்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செய்கின்றனர். மூணாறில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே அரசு தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது.இங்கு சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக புதிதாக 360 டிகிரி கோண முப்பரிமான ரியாலிட்டி டோம் திரையரங்கம் தொடங்கப்பட்டுள்ளது. 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரையரங்கத்தில் கண்ணாடி இல்லாமலேயே முப்பரிமாண காட்சிகளை கண்டு களிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆனால் ஐந்து நிமிட கட்சிக்கு 250…

Read More

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சித்தரவு கிராமம் உள்ளது. ஆத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும் ஐ. பெரியசாமி இருந்து வருகிறார். இந்த கிராமம் கொடைக்கானலில் கீழ் மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு 1வது வார்டு பகுதியில் உள்ள தெரு ஒன்றில் 30 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி 20க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்து வருகிறது. குறிப்பாக அந்த தெருவின் முன் பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர்களின் சிலர் செய்யும் இடையூறுகளால் அப்பகுதி மக்கள் 30 ஆண்டுகளாக கரண்ட் வசதி கொடுக்க முடியாமல் இருந்து வருகிறது. இதற்காக பலமுறை மாவட்ட ஆட்சியர், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் என மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த தெருவிற்கு செல்வதற்கு வரப்பு பாதை போல் 10 அடி நீளம் உள்ள பாதையே உள்ளது. இது குறித்து அப்பகுதி தமிழக வெற்றி…

Read More

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க “Round Trip” எனும் திட்டத்தில் டிக்கெட் புக் செய்யும் நடைமுறையை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. விமானங்களில் எப்படி ஒன் வே , டூ வே என புக் செய்யும் போது கட்டணங்களில் சலுகை கிடைக்குமோ இப்போது இந்திய ரயில்வேயிலும் இதே போன்ற முறையை அறிமுகம் செய்துள்ளனர். வரவிருக்கும் நாட்களில் தீபாவளி, சத் பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதை தவிர்க்கும் வகையில் “Round Trip” எனும் திட்டத்தை ரயில்வே தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முன் பதிவு செய்யும் போது , Return பயணசீட்டில் உள்ள மொத்தத் தொகையில் 20% தள்ளுபடி வழங்கப்படும் என இந்திய ரயில்வே கூறியுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் பயணிகள் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரையிலான டிக்கெட்களை…

Read More