Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பெங்களூருவில் 3 புதிய வந்தே பாரத் ரயில் சேவை… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…
    இந்தியா

    பெங்களூருவில் 3 புதிய வந்தே பாரத் ரயில் சேவை… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 10, 2025Updated:August 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெங்களூருவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 3புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்காக இன்று காலை 10.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு சென்ற அவர், 3 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். ”பெங்களூரு-பெலகாவி, அமிர்தசரஸ்-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் – புனே” ஆகிய வழித்தடங்களில் இந்த புதிய ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

    பெங்களூருவில் சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை ஊதா நிறப்பாதையிலும், சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை பசுமை நிறப்பாதையிலும் 76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பசுமை நிறப்பாதையில் உள்ள ஆர்.வி.ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மஞ்சள் நிறப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி பச்சை கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்துள்ளார். இதன்பின்னர், ரயிலின் உள்ளே சென்று பிரதமர் மோடி பார்வையிட்டவர், ரயிலில் அமர்ந்திருந்த மாணவ மாணவிகளுடன் சிறிது நேரம் உரையாடினார். இதனை தொடர்ந்து,

    ஜே.பி.நகர் 4-வது பிளாக்கில் இருந்து கடபுகெரே வரையிலான 3-வது கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையை ஒட்டி, பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசனீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
    Next Article 10 நாட்களாக தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்… 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி…
    Editor TN Talks

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.