Author: Editor TN Talks

விஜய்யிடம் என்ன மாறுபட்ட கொள்கை உள்ளது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழகத்தை மீட்போம், ஓரணியில் திரள்வோம் என்று சொல்கிறார்கள். தமிழகத்தை யாரிடம் அடமானத்தில் வைத்திருந்தார்கள்?. ஓரணியில் எதற்கு திரள வேண்டும்? நீட் தேர்வை ரத்து செய்வதற்கா? ஜி.எஸ்.டி. வரியை எதிர்ப்பதற்கா? தொகுதி மறுவரை என்ற பெயரில் தொகுதியை சீரழித்ததே கருணாநிதி தான். தேர்தல் வரும்போது பாசம், வேஷம் போட்டு நடிப்பார்கள். எனக்கு வயிற்றுப்பசி இல்லை. எனக்கு இருப்பது சுதந்திரப் பசி. சட்டமன்றத்தில் என் குரல் ஒலிக்க வேண்டும் என்றால் மக்கள் எனக்கு வாக்களித்து அனுப்ப வேண்டும். தற்காலிக தோல்விக்காக நான் நிரந்தர வெற்றியை இழக்க விரும்பவில்லை. நான் நம்பர் ஒன் பார்ட்டியாக வேண்டியவன். எந்த சித்தாந்தத்தை காப்பாற்ற நீங்கள் அனைவரும் கட்சியை ஆரம்பித்தீர்கள். என்னை விட்டு விடுங்கள். யார் அடித்தாலும் தாங்குவதற்கு ஒருவர் வேண்டும். எனவே என்னை…

Read More

வரும் 14-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் 14-ம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் முக்கிய திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேப் போல, எதிர்வரும் மழைக்காலத்தை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்ஹ்தில் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Read More

உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு கிராமமே மூழ்கிய நிலையில் இதுவரை 17 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகேயுள்ள தாராலி என்ற கிராமத்தில் திடீரென மேகவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் அங்கு உள்ள கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில், அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் அடித்து செல்லப்பட்டதாகவும், மண்ணில் புதையுண்டதாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார், எஸ்.டி.ஆர்.எஃப் ராணுவம் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். இந்த வெள்ளம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாய்ந்து வரும் வெள்ளத்தில் சிக்கி கட்டடங்கள் அடித்து செல்லப்படும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. ஒரு கிராமமே இந்த வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், இதுவரை 17 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read More

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா போராடி சமன் செய்த நிலையில், இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் பாராட்டு தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதலாவது மற்ரும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் இங்கிலாந்து 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,…

Read More

உண்மையான இந்தியர் யார் என நீதிமன்றம் தீர்மானிப்பதில்லை எனவும், அது அவர்களின் வேலை இல்லை எனவும் பிரியங்கா காந்தி எம்.பி., கூறியுள்ளார். நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கடந்த 2022-ம் ஆண்டு மேற்கொண்ட பாரத் ஜோடா யாத்ரா நிகழ்ச்சியில், எல்லையில் சீனப்படைகளுடனான மோதல் பற்றி குறிப்பிட்டார். அப்போது அவர் இந்திய ராணுவம் பற்றி தரம் தாழ்ந்து பேசியதாக உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா என்பவர் லக்னோ நீதிமன்றத்தில் ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ராகுல்காந்திக்கு லக்னோ கோர்ட்டு சம்மன் அனுப்பியது. சம்மன் உத்தரவையும், புகாரையும் ரத்து செய்யக்கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ராகுல்காந்தி மனுவை தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் திபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.…

Read More

வங்கி கடன் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜராகினார். இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரரும், பிரபல தொழிலதிபருமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை யெஸ் வங்கியிடம் வாங்கிய ரூ.3,000கோடி கடனை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பிரதிபலனாக யெஸ் வங்கி அதிகாரிகளுக்கு ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி முதல் டெல்லி அமலாக்கத்துறையினர் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் குழும அலுவலகங்கள், அதிகாரிகள் தொடர்புடைய 35-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். 3 நாட்கள் நீடித்த இந்த சோதனையின் போது முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதேப்போல மேலும் சில வங்கிகள், நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது. இந்த கடன் தொகை…

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’கூலி’ திரைப்படத்தில் நான் தான் ஹீரோ என நடிகர் நாகர்ஜூனா தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் கூலி. அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தில் நாகர்ஜூனா, அமீர்கான், சத்யராஜ், சபின் ஷாஹிர், பகத் பாசில், சுருதிஹாசன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அத்தோடு படத்தின் டிரைலரும் இணையத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நாகர்ஜூனா, “கூலி படத்திற்காக இயக்குனர் லோகேஷ் என்னை அணுகிய போது நீங்க வில்லனாக நடிக்குறீங்களா என்று கேட்டார். இல்லையென்றால் டீ குடிச்சிட்டு சினிமா பத்தி பேசலாம்னு சொன்னார். இப்படத்தில் என் கதாபாத்திரம் (வில்லன்) பெரிதாக பேசப்படும் என நம்புகிறேன். இந்த படத்தில் ஹீரோ நான்தான். லோகேஷ் நெகடிவ் ரோல்…

Read More

தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் சுமார் 7 கோடி முட்டையின் கோழிகள் மூலம் தினசரி 5.50கோடி முட்டைகள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. நாமக்கல்லில் இருந்து ஏற்கனவே துபாய், பக்ரைன், கத்தார், ஓமன், ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு இடங்களுக்கு மாதந்தோறும் சுமார் 15 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா அரசு, இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்தது. முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டது. குளிர்சாதன வசதி கொண்ட 21 கன்டெய்னர்களில் தலா 4¾ லட்சம் முட்டைகள் என சுமார் ஒரு கோடி முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கன்டெய்னர் 30 நாட்களில் அமெரிக்கா சென்றடைந்தது. தொடர்ந்து அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி அதிகரிக்கும் என பண்ணையாளர்கள்…

Read More

மதுரையில் வரும் 21-ம் தேதி தவெக-வின் 2வது மாநாடு நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, தவெக என அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றன. முதன்முறையாக களத்தில் இறங்கவுள்ள விஜய்யின் தவெக-கட்சியின் 2-ம் மாநில மாநாடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி பகுதியில் உள்ள பாரபத்தி என்ற பகுதியில் மாநாட்டிற்கான பூமி பூஜை சமீபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு அனுமதி பெறுவதற்காக கட்சி நிர்வாகிகள் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தி சந்தித்து மனு அளித்தனர். மேலும், மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர். மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வரும் 25-ம் தேதியை தொடர்ந்து 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதாகவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க…

Read More

சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 1970-களில் சென்னையில் இரட்டை அடுக்கு பேருந்துகள் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. 10 ஆண்டுகள் சென்னையில் வெற்றிகரமாக இவ்வகை பேருந்துகள் இயக்கப்பட்டது. பிறகு 1980-களில் இரட்டை அடுக்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டு, பிறகு 1997- ஆண்டு மீண்டும் பேருந்துகள் சென்னையில் ஓடத் தொடங்கியது. 10 ஆண்டுகளுக்கு மேல், இரட்டை அடுக்கு பேருந்துகள் சென்னையில் பிரபலமாக ஓடியது. கடைசியாக உயர்நீதிமன்றம் – தாம்பரம் இடையேயான வழித்தடத்தில் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு இவ்வகை பேருந்துகள் நிறுத்தப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில், சென்னை நகரச் சாலைகளில் ஒரு காலத்தில் பயணிகள் மிகவும் விரும்பிப் பயணம் செய்த இரட்டை அடுக்கு பேருந்துகள் இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் இயக்கப்பட உள்ளன. இந்த முறை அவை தினசரிப் பயணத்துக்கு மட்டுமல்லாமல், சென்னை நகரச் சுற்றுலாவுக்கும் பயன்படுத்தப்பட உள்ளன.…

Read More