Author: Editor TN Talks
2023-ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்றதற்காக இயற்கைக்கும், தன்னை நம்பிய சக கலைஞர்களுக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. 71-வது தேசிய விருதுகள் பட்டியலில் வாத்தி திரைப்படத்திற்காக எனக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மிகுந்த நன்றியும், சந்தோஷமும்.. தேர்வுக்குழுவினருக்கும், நடுவர்களுக்கும் என் நன்றிகள். இப்படத்திற்காக என்னை தேர்வு செய்த என் சகோதரர் தனுசுக்கு மனமார்ந்த நன்றி. பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை மற்றும் வாத்தி, இட்லி கடை என என்னை தொடர்ந்து ஆதரித்து இருதரப்பினரும் மேன்மை பெற வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. என்னை நம்பி இப்பொறுப்பை வழங்கிய இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு மிகுந்த நன்றி. வாத்தி முதல் லக்கி பாஸ்கர் வரையிலும் மேலும் அடுத்த படத்திலும் இணைந்து பணியாற்றும் அட்லூரிக்கு அன்புநிறை நன்றி. என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் நாகவம்சி மற்றும் திரிவிக்ரம்…
2023-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மஸ்ஸே ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை ராணி முகர்ஜி தட்டிச் சென்றுள்ளார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்து ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டிய படம் ஜவான். இப்படத்திற்காக 2023-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை நடிகர் ஷாருக்கானுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் 12th Fail படத்திற்காக விக்ராந்த் மஸ்ஸே-வுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் சட்டதிட்டங்கள் புரியாமல் தன்னுடைய குழந்தையை காப்பாற்ற போராடும் தாயாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ராணி முகர்ஜிக்கு 2023-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக 12th Fail அறிவிக்கப்பட்டுள்ளது. படிப்பின் மேன்மையை கலைநயத்துடன் எடுத்துரைத்த இயக்குநர் விது வினோத் சோப்ரா இயக்கிய இப்படம் தேசிய விருது பெற்றுள்ளது. பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய கேரளா ஸ்டோரி…
2023-ம் ஆண்டுக்கான 71-வது தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி.பிரகாசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹரீஷ் கல்யாண் நடிப்பில், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய பார்க்கிங் திரைப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் 2023-ம் ஆண்டு வெளிவந்த படம் வாத்தி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. வெங்கி அட்லூரி இப்படத்தை எழுதி இயக்கி இருந்தார். இப்படத்தின் இசைக்காக 20223-ம் ஆண்டுக்கான தேசிய விருதினை தட்டிச் சென்றுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தில் இடம்பெற்ற வா வாத்தி படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய நிலையில் தேசிய விருதினை அள்ளி உள்ளார் ஜி.வி.பிரகாஷ்.. மேலும் சிறந்த பிராந்திய மொழி திரைப்படமாக தமிழ் பிரிவில் பார்க்கிங் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு வெளிவந்த பார்க்கிங் திரைப்படத்தை சுதன் சுந்தரம், சினீஷ் ஆகியோர் தயாரித்து இருந்தனர்.…
நெல்லையில் காதல் மனைவியை கொலை செய்த கணவர், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் முத்துக்குமார். மினி பேருந்து ஓட்டுநரான இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தின மணியன்குடியை சேர்ந்த ஜாய்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி அதிகாலை திடீரென ஜாய்ஸ் தலையில் காயத்துடன் மயக்கமாகியுள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ஜாய்ஸ் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், ஜாய்ஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பேரில் அவரது கணவர் முத்துக்குமாரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். முதலில்…
குறைந்த செலவில் சிறப்பாக செயல்படும் மருத்துவ சாதனங்களை அதிகளவில் கொள்முதல் செய்யப் போவது எப்போது என, நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு :- துறை சார்ந்த நிபுணத்துவம் மற்றும் விரைவான ஒப்புதல்களை பெற, மருந்துகளை மையமாகக் கொண்ட மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பைத் (CDSCO) தவிர்த்து, தனித்து இயங்கக்கூடிய மருத்துவ சாதன ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவது குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் திட்டமிட்டுள்ளதா? எனில் அதன் விவரங்கள் என்ன? என கேள்வி எழுப்பினார். பயனர்கள், உற்பத்தியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறித்து பொதுவெளியில் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், அமெரிக்க நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பில் (FDA) உள்ள, மருத்துவ சாதனங்கள் தொடர்பான அனுபவங்கள் பற்றிய தரவுத்தளம் (MAUDE) போல் அல்லது ஐரோப்பிய மருத்துவ உபகரணங்கள் குறித்த தரவுதளம் (EUDAMED) போல் நமது நாட்டிற்கென ஒரு தரவுத்தளத்தை உருவாக்கவும், மருந்துகள் சந்தைக்கு…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டலில் தமிழ்நாடு முழுக்க வெற்றிகரமாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடந்து வருகின்றன. மக்கள் தங்களது குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகளைப் பெற்று வருகின்றனர். வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் மக்கள் மருத்துவ வசதிகளை அவர்கள் பகுதிகளிலேயேப் பெற உதவும் வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்களை தமிழ்நாடு முழுவதற்கும் நடத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். திராவிட மாடல் அரசின் இந்த முன்னெடுப்புகள் மக்களிடம் பெற்றுவரும் மகத்தான ஆதரவைப் பார்த்து வயிற்றெரிச்சலில் என்ன செய்வதென்று தெரியாமல் அற்ப வேலைகளில் இறங்கியிருக்கிறார் பழனிசாமி. நீதிமன்றத்தை நாடி இத்திட்டங்களில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தக் கூடாது தடைவிதிக்க வேண்டும் என சின்ன புத்தியோடு அரசியல் செய்து கொண்டிருக்கிறது அதிமுக. அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மினிக் கிளினிக் என ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடியவர்கள் இன்று மாண்புமிகு முதலமைச்சர் பெயரைக் கண்டு…
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த எம்.ஆனந்த கிருஷ்ணன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2015-2016 ஆம் ஆண்டில் பேராசிரியர் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளது. 6 க்கும் மேற்பட்ட பார்க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பல்வேறு விதிமுறைகளின் கீழ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் . பேராசிரியர் நியமனத்திற்கு உண்டான உண்டான யுஜிசி நெறிமுறைகளை பின்பற்றாமல் , உரிய அனுபவம் உள்ளிட்டவற்றை பின்பற்றாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பல முறை மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2015-2016 ஆம் ஆண்டில் பேராசிரியர் நியமனத்தில் நடந்து முறைகேடு குறித்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு வில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஸ் சந்திரா , பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான…
கன்னியாகுமரி மாவட்டம் கடுகுவிளை கிராமத்தைச் சேர்ந்த அல்போன்சாள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது தாயார் சூசைமரியாள். கடந்த ஜூலை 29ஆம் தேதி காலை 5 மணி அளவில் நான்கு காவலர்கள், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி, எனது அண்ணியின் மகன் சாகித் ஜெட்லியை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளனர். அவனை வலுக்கட்டாயமாக தாக்கி இழுத்துச் சென்ற நிலையில், எனது தாயாரும் சாகித்தின் தாயாரும் விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளனர். அப்போது என் தாயாரை காவலர்கள் தள்ளிவிட்டு காலால் தாக்கியுள்ளனர். இதனால் கீழே விழந்ததில், நினைவின்றி, அசைவற்றுக் கிடந்த எனது தாயாரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. காவல்துறையை சேர்ந்தவர்கள் தள்ளிவிட்டு காலால் தாக்கியதே எனது தாயார் உயிரிழக்க காரணம். ஆகவே இதில் தொடர்புடைய அனைத்து காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்வதோடு, எனது தாயாரின் மரணம்க் தொடர்பாக கொலை வழக்கு பதிவு…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த விஜிகே புரம் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி இயற்கையின் அழைப்புக்காக இரவில் வீட்டை விட்டு வெளியே வந்த போது, அச்சிறுமியை ஒரு மனித மிருகம் முள்புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. இரு வாரங்களுக்கு முன் திருவள்ளூரை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதட்டமும் குறைவதற்கு முன்பாகவே இப்படி ஒரு கொடூரம் நடந்திருப்பதைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, சுதந்திரமாக நடமாடவே முடியாதா? என்ற ஐயம் தான் எழுகிறது. இந்த கொடிய நிகழ்வு தொடர்பாக அப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எரோமல் அலி என்ற இளைஞரை ஊர்மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களால் பாலியல் குற்றங்கள் உள்பட பல்வேறு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில்,…
அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் சூர்யமூர்த்தி சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்து உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து, அதிமுக உறுப்பினர் எனக் கூறி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, உரிமையியல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சூரியமூர்த்தி, அதிமுக உறுப்பினரே அல்ல எனவும், உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு…