Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»மாவட்டம்»நெல்லை : மனைவியை கொன்றது ஏன்?.. கணவர் கூறிய காரணம்…
    மாவட்டம்

    நெல்லை : மனைவியை கொன்றது ஏன்?.. கணவர் கூறிய காரணம்…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நெல்லையில் காதல் மனைவியை கொலை செய்த கணவர், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

    நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் முத்துக்குமார். மினி பேருந்து ஓட்டுநரான இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தின மணியன்குடியை சேர்ந்த ஜாய்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி அதிகாலை திடீரென ஜாய்ஸ் தலையில் காயத்துடன் மயக்கமாகியுள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ஜாய்ஸ் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    தகவலறிந்து வந்த போலீசார், ஜாய்ஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பேரில் அவரது கணவர் முத்துக்குமாரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். முதலில் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக நாடகமாடிய முத்துக்குமார், முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்.

    பிறகு அவரிடம் நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில், மனைவியை அடித்துக் கொன்றதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது, காதல் திருமணம் செய்த எங்களது வாழ்க்கை சந்தோசமாக சென்று கொண்டிருந்தது. கடந்த சில மாதங்களாக அவளது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவளிடம் நான் கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பத்தன்றும், அவளது நடத்தை குறித்து நான் கேட்டதால் ஏற்பட்ட தகராறு முற்றியதில், பூரி கட்டையால் தலையில் தாக்கினேன்.

    இதில் அவளுக்கு தலையில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்தாள். அவள் மயக்கம் தெளியாமல் இருந்ததால் பயந்து போன நான், பின்னர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வரவழைத்தேன். அந்த ஆம்பலன்சில் மனைவியை ஏற்றி கொண்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து கொலையை மறைக்க முயற்சித்தேன். போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கி கொண்டேன், என தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுமா? தயாநிதி மாறன் கேள்வி
    Next Article ஜி.வி.பிரகாசுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது.. 3 தேசிய விருதுகளை வென்ற ஹரீஷ் கல்யாணின் பார்க்கிங் திரைப்படம்..
    Editor TN Talks

    Related Posts

    வேலூர் : கூட்டமாக வந்த காட்டு யானைகள்..! வெடி வெடித்து காட்டிற்குள் அனுப்பிய பொதுமக்கள்..!

    August 8, 2026

    திருப்பத்தூர் : ஓசியில் சிகரெட் கேட்டு டீ கடையில் தகராறு..! சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!

    August 8, 2026

    டெல்லி  டூ திருச்செந்தூர்… ஐந்தாண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட இளைஞர்!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.