Author: Editor TN Talks

சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உள்ளிட்ட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில், வாதங்களை துவங்காததால், தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996 – 2001 ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் மருங்காபுரி திமுக எம்.எல்.ஏ.வாகவும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர், பி.எம்.செங்குட்டுவன். ஆட்சி மாற்றத்துக்குப் பின் அவர் அதிமுகவில் இணைந்தார். திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக 81 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, செங்குட்டுவன், அவரது மகன்கள் எஸ்.பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, மருமகன் ராஜலிங்கம், சகோதரரின் மகள் வள்ளி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. செங்குட்டுவன் மற்றும் அவரது…

Read More

ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் ஆறு மாதங்களுக்குப் பிறகு 100 நாள் வேலைக்கு அழைத்த நிலையில் வேலை வழங்காமல் அலைக்கழித்ததாக 100 நாள் வேலை பணியாளர்கள் ஆத்திரத்தில் சாலை மறியல் போராட்டம். கடந்த ஆறு மாதங்களாக 100 நாள் வேலைப் பணி முறையாக வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா ரெங்கசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து பணிபுரிந்து வரும் நிலையில்,கடந்த 6 மாதங்களாக இவர்களுக்கு 100 நாள் வேலைப்பணி முறையாக வழங்காமல் ஊராட்சி நிர்வாகம் அலைக்கழிப்பதாக பணியாளர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், 6 மாதங்களுக்கு பிறகு இன்று 100 நாள் வேலைக்கு ஊராட்சியில் பணிபுரியும் 100 நாள் வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளர் அழைத்த நிலையில், ரெங்கசமுத்திரம், ஜம்புலிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலை வேலைக்கு வந்த நிலையில்…

Read More

காரைக்காலில் இயங்கி வரும் தனியார் டைல்ஸ் தொழிற்சாலையில் திடீரென 36 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்த தனியார் டைல்ஸ் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழில் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பகுதியில் உள்ள பிரபல தனியார் டைல்ஸ் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் 36 தொழிலாளர்களை கட்டாய ஓய்வு என்கிற அடிப்படையில் பணிநீக்கம் செய்து தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களை வெளியேற்றியதால் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து 36 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த தனியார் டைல்ஸ் தொழிற்சாலை கண்டித்து 200க்கு மேற்பட்ட டைல்ஸ் தொழிற்சாலை ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் காரைக்கால் – கும்பகோணம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார்…

Read More

தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவிலில் திருக்கல்யாணம் விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சுரபி நதிக்கரையில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் ஆடி மாதங்களில் பிரம்மோற்சவ ஆடி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருட திருவிழாவில் முக்கிய நிகழ்வாக இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கும் நீலாதேவிக்கும் திருக்கல்யாணம் விழா மிக விமர்சையாக நடைபெற்றது. விழாவில் சனீஸ்வர பகவானின் மனைவி நீலாதேவிக்கும் உருவம் கிடையாது என்பதால் கும்பத்தில் நீலாதேவி உருவம் அமைத்து,பச்சை பட்டு உடுத்தி சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து கும்பத்திற்கு சனீஸ்வர பகவான் தாலிகட்டும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட நீலாதேவியின் உருவம் இன்றிலிருந்து சரியாக மூன்றாவது திங்கட்கிழமை அன்று சுரபி நதியில் கரைக்கப்படும். இந்த திருக்கல்யாண விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்தும்…

Read More

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2-1 என்ற கணக்கில் இந்தியா பின் தங்கியுள்ள நிலையில், கடைசி தொடரில் இந்தியா வெற்றி பெற்று போட்டியை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான கடைசி தொடர் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. லேசான மழை சாரல் காரணமாக டாஸ் நிகழ்வு 3 நிமிடங்கள் தாமதமானது. இதில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் போப், பீல்டிங் தேர்வு செய்திருந்தார். அதனால் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து திணறியது. கருண் நாயர் மட்டும் இத்தொடரில் தனது முதல் அரை சத்தை பதிவு செய்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 204/6 ரன் எடுத்திருந்தது. வாஷிங்டன்…

Read More

தமிழக அரசின் “சமூக நீதி விடுதி ” என்ற பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் அரசு கள்ளர் மாணவர் விடுதியில் பெயர்பலகையை கம்பி மீது ஏறி நின்று துடைப்பத்தால் வர்ணம் பூசி பிரமலைகள்ளர் சமூகத்தை சேர்ந்த கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி விடுதிக்கு முன்பாக நின்று சமூக நீதி என்ற பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதோடு, தமிழக அரசு சமூக நீதி பெயர் மாற்ற அரசாணையை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினர். தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் கள்ளர் மாணவ மாணவி விடுதிகளில் பெயரை சமூக நீதி என்ற பெயர் மாற்றத்திற்கு உத்தரவிட்ட தமிழக அரசைக் கண்டித்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி பகுதியில் செயல்படும் கள்ளர் சீரமைப்பு மாணவர் விடுதிக்கு சென்ற DNT மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த…

Read More

அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைபடத்தையோ பயன்படுத்த கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும், முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கவும் கோரி அதிமுக மக்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தரப்பில் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் பிறப்பித்த உத்தரவில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதல்வர் புகைப்படத்தையோ பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது எனத் தெரிவித்துள்ளது. அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அதேபோல, ஆளும் கட்சியின் பெயர்,…

Read More

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48, உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சட்டமன்ற கூட்ட தொடரின் போது தமிழ்நாடு சட்டமன்றத்தில், “உயர் மருத்துவ சேவைகள் வழங்க ரூ.12.78 கோடி செலவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்” என்று அறிவித்தார். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக நாளை “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்களை, சென்னை செயின்ட் பீட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தொடங்க வைக்க உள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு மருத்துவ முகாம்களில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிட வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒருமுகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு…

Read More

சென்னை பறக்கும் ரயில் – மெட்ரோ ரயில் இணைக்க கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது. சென்னை பறக்கும் ரயில் சேவை சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையில் செயல்பட்டு வருகிறது. மேலும், வேளச்சேரியையும் – பரங்கிமலையையும் இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயிலுடன் இணைப்பதற்கான பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றது. இதற்கிடையில், பறக்கும் ரயில் சேவையை மாநில அரசிடம் ஒப்படைக்குமாறு நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்து இருந்தார். இந்நிலையில், சென்னை பறக்கும் ரயில் – மெட்ரோ ரயில் இணைப்பு பணிகளை மேற்கொள்ள கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பணிகள் அடுத்த மூன்று மாதத்திற்குள் முடிக்க சென்னை பெருநகர் ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிட்டுள்ளது.…

Read More

நாட்டின் ஜூலை மாதத்திற்கான ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.96லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டு ஜூலை மாத வசூலை விட 7.5% அதிகமாகும். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,95,735 கோடி வசூல் ஆகி உள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக 7 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் – ஜூலை மாத்தை விட இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ஜிஎஸ்டி வருமானம் 10.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தாண்டு 3 மாதத்தில் மட்டும் ரூ.8,18,009 கோடி கிடைத்துள்ளது. 2025ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கான நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல் 6.20 சதவீதம் உயர்ந்து, 1.84 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி வரலாற்றில், கடந்த ஏப்ரல் அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலாகி சாதனை படைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More