Author: Editor TN Talks
தமிழ்நாடு மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், ஜூலை 25-ஆம் தேதி திருப்போரூரில் இருந்து “தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்” என்ற 100 நாள் பயணத்தைத் தொடங்கவுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்கள் விரோதமாகவும், சமூக நீதிக்கு எதிராகவும் செயல்படுவதாக குற்றம் சாட்டி, இந்தப் பயணம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பயணத்தின் முக்கிய நோக்கங்கள்: 10 உரிமைகளை மீட்டெடுத்தல் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு 10 அத்தியாவசிய உரிமைகளை மீட்டெடுப்பதாகும். அவை: சமூக நீதிக்கான உரிமை வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை வேலைக்கான உரிமை விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை வளர்ச்சிக்கான உரிமை நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை கல்வி, நலவாழ்வுக்கான உரிமை மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை நீடித்திருக்கும்…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அசோக்குமார் இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அசோக்குமாருக்கு ஒன்பது முறை சம்மன் அனுப்பியும் அவர் ஒருமுறை கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும், ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அசோக்குமார் அமெரிக்காவில் மேற்கொள்ளவிருக்கும் சிகிச்சையை இந்தியாவிலேயே மேற்கொள்ள முடியும் என்றும் அமலாக்கத்துறை வாதிட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் முடக்கப்பட்ட சொத்துகள் அமெரிக்காவில் ஏதேனும் உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, அப்படி எதுவும் இல்லை என்று அமலாக்கத்துறை…
மகாராஷ்டிராவில், தகாத உறவால் தனது கணவரை திரைப்பட பாணியில் பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே நலசோப்ரா என்ற பகுதியை சேர்ந்தவர்கள் விஜய் சவான் – கோமல் சவான் தம்பதி. இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். கோமலுக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவாரான மனு என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் தகாத உறவாகவும் மாறியுள்ளது. வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் மனுவுடன் வெளியே செல்வதும், உல்லாசமாக இருப்பதுமாக இருந்து வந்துள்ளார் கோமல். இது குறித்து அக்கம் பக்கத்தினர் விஜய் சவானிடம் தெரிவிக்க, அவரோ மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. விஜய் சவானை மீறி மனுவுடனான உறவை நீடித்து வந்துள்ளார் கோமல். கணவர் உயிருடன் இருக்கும் வரை தனது உறவுக்கு அவர் இடையூறாக இருப்பார் என்பதால், விஜய்…
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் நடப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு இன்று (ஜூலை 22, 2025) ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கொடிக் கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். வழக்கு பின்னணி பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் 2025 ஜனவரி 27ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி நிஷாபானு தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதிசெய்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்முறையீடு இந்த…
தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு விளக்கமளிக்கும் விதமாக அமைச்சர் சிவசங்கர், அரியலூரில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பேருந்து கட்டண உயர்வு என்பது வதந்தி. பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து எவ்வித திட்டமும் இல்லை. தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கான சூழ்நிலை ஏற்பட்டபோதும், கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்காமல் அரசே ஏற்று போக்குவரத்து கழகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் இருக்காது” என்றார்.
மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் இணைந்துள்ளது போன்ற போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தினர் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் புதிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த ஓர் அதிமுக நிர்வாகி ஒட்டிய போஸ்டரில், எடப்பாடி பழனிசாமியும் விஜய்யும் தோள் மேல் கை போட்டபடி இருக்கும் படத்துடன், “2026-ல் சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாசுடா…! எதிர்த்து நின்றவன் எவனும் தூசுடா…!” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டர் அதிமுக மற்றும் தவெக இடையே கூட்டணி அமையலாம் என்ற யூகங்களை ஏற்படுத்தியது. இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, செங்கல்பட்டு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர், “தமிழக மக்கள் எங்களோடு துணை இருக்க, பாசிசமும் வேண்டாம், பாயாசமும் வேண்டாம்” என்ற வாசகங்கள் அடங்கிய…
மடப்புரம் கோயில் காவலர் அஜித் குமார் காவல் துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தக் கொலை வழக்கு தற்போது சிபிஐ வசம் உள்ளது. முன்னதாக, தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட அஜித் குமார் குடும்பத்திற்கு என்னென்ன உதவிகள் செய்துள்ளது என்பது குறித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இன்று (ஜூலை 22, 2025), நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் மரியா கிளாட் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும், அஜித் குமார் குடும்பத்திற்கு…
தக்காளி விளைச்சல் குறைவு மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக திண்டுக்கல் காந்தி காய்கறி சந்தையில் தக்காளியின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி ₹40 முதல் ₹50 வரை விற்பனையாகிறது. வழக்கமாக திண்டுக்கல் சந்தைக்கு ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், தேனி, பழனி போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால், தற்போது போதிய மழையின்மை காரணமாக இந்தப் பகுதிகளில் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. தினசரி 40 டன் தக்காளி வர வேண்டிய நிலையில், தற்போது வெறும் 10 டன் மட்டுமே சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் பெய்து வரும் மழையால் அங்கிருந்து வரும் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. வடமாநிலங்களில் தக்காளியின் தேவை அதிகரித்துள்ளதால், தமிழகத்திலிருந்து தக்காளி ஏற்றுமதியாவது திண்டுக்கல்லில் விலையேற்றத்திற்கு மேலும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. கடந்த வாரம்…
ரயில்வே பாதுகாப்பு பணியை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து ரயில்வே அமைச்சகம் கூறுகையில், ரயில் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்த இந்திய ரயில்வே ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்க உள்ளது. ரயில் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பை தனியார் கைகளிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரயில்களில் சட்ட விரோத பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு விரும்புகிறது. விமான நிலையங்களில் உள்ளதை போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில் நிலையங்களிலும் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதிகரிக்கும் கடத்தலை தடுக்க., ரயில்கள் வழியாக கடத்தலைத் தடுக்கவும், பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தவும் இந்திய ரயில்வே, சோதனை அடிப்படையில் இரண்டு நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகர், லக்னோ கோமதி நகர் ரயில் நிலையங்கள் உட்பட இரண்டு நிலையங்களில் தனியார் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.…
தமிழ் திரைத்துறையில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டும் படங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் ’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படமும் வசூல் சாதனை படைத்துள்ளது. இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை வாய்ந்தவர் சசிகுமார். இவருடன் சிம்ரன், யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. ரூ.7கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.90கோடி அதாவது முதலீட்டு தொகையை விட 1200 சதவீதம் அதிக லாபம் ஈட்டியுள்ளது. 2025-ம் ஆண்டு இந்திய திரைப்பட வரலாற்றில், எந்த ஒரு படமும் இப்படி ஒரு வசூல் சாதனையை படைத்தது இல்லை எனக் கூறப்படுகிறது. அபினேஷ் ஜீவித் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி படம் வெளியானது. அப்போது வெளியான சூர்யாவின் ரெட்ரோ படத்தை ஓரம் கட்டி அதிக திரையரங்குகளை கைப்பற்றியது டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்.