Author: Editor TN Talks
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் தொடரில் பும்ரா இல்லாவிடிலும் இந்திய அணி ஜெயிக்கலாம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்கவுள்ளது. தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இந்த முக்கியமான போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? என கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இந்த தொடரின் 3-வது போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதல் மற்றும் 3-வது போட்டிகளில் அவர் விளையாடி விட்டதால் மீதமுள்ள 2…
ஆம் ஆத்மியை சேர்ந்த எம்.எல்.ஏ அன்மொல் கஹன் மான் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் ஹரர் தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அன்மொல் கஹன் மான். 35 வயதான இவர் 2020-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். பாடகியான இவர், 2022-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அன்மொல் சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். ஆனால் 2024-ம் ஆண்டு அன்மொல் அமைச்சர் சபையில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அன்மொல் கஹன் மான் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும், அரசியலை விட்டு விலகுவதாகவும் அன்மொல் அறிவித்துள்ளார். இதற்கான காரணம் குறித்து அவர் தெரிவிக்கவில்லை. பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான அரசில் அங்கீகாரம் இல்லாததால் அன்மொல் அரசியலை விட்டு விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மசோதாவுக்களுக்கு ஒப்புதல் கொடுப்பதில் முடிவு எடுக்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க அரசியல் சாசனம் அதிகாரம் அளித்துள்ளதா? உள்ளிட்ட 14 கேள்விகள் தொடர்பாக வரும் 22-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு நிறைவேற்றி அனுப்பிய பல மசோதக்களுகு ஆளுநர் ரவி ஒப்புதல் தராமலும், திருப்பி அனுப்பாமலும் வைத்திருந்தார். வேண்டுமென்றே ஆளுநர் இழுத்தடிப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்தது. கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி விசாரித்த நீபதிகள், மாநில அரசுகள் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் நீதிபதிகள் காலக்கெடு விதித்தனர். இந்தத் தீர்ப்பு பரபரப்பையும், நாடு முழுவதும் அரசியல் அதிர்வையும் உண்டாக்கியது. இதனை தொடர்ந்து அரசியல்சாசனத்தின் 143(1) பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி குடியரசுத் தலைவர் நீதிமன்றத்திடம் சில விளக்கங்களை கேட்டார். அதன்படி ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும்…
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் ஓவர்கள் மழையால் குறைக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய மகளிர் கிரிகெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி முதல்முறையாக வென்ற நிலையில், தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநால் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சவுத்தம்டனில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டி லண்டனின் லார்ட்சில் இன்று மாலை 3.30மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் அங்கு மழை பெய்ததால் ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில், இந்த ஆட்டம் தலா 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படவுள்ளது.
இன்றைய சூழலில் ஒரு படத்தை கசியவிடாமல் படப்பிடிப்பு நடத்தி, அதனை திரையில் வெளியிடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. முன்பெல்லாம் தியேட்டருக்கு வந்த பிறகே அப்படம் இணையத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக வெளியாகும். ஆனால் இன்று அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதால், படப்பிடிப்பு தளத்திலேயே வீடியோக்களை எடுத்து இணையத்தில் கசிய விட்டு விடுகின்றனர். அந்த வகையில், நடிகை நயன்தாராவின் படப்பிடிப்பு காட்சிகள் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இருவரும் புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் பதிவில், ”படப்பிடிப்பு தளங்களிலிருந்து கசிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.மேலும், இவ்வாறு பதிவு செய்தல் மற்றும் அதை பரப்புதல்…
ஆந்திராவில் பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த லிவ் இன் டூ கெதரில் இருந்த காதலியை, காதலன் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கொனசீமா மாவட்டம் சவரம் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பா என்ற இளம்பெண். 22 வயதான இவருக்கு திருமணமாகி 4 வயதில் மகன் உள்ளான். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்தார் புஷ்பா. அதனால் சவரம் கிராமத்தில் தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். வேலைத்தேடி கடந்தாண்டு விஜயவாடா சென்றுள்ளார் புஷ்பா. அங்கு ஷேக் ஷமி என்ற 22 வயது இளைஞருடன் புஷ்பாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரின் நட்பும் காதலாக மாற, இருவரும் சவரம் கிராமத்திற்கு அருகே ரசோலி என்ற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ் இன் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த புஷ்பாவின் தாய் மற்றும் சகோதரர், அவர்களது காதலை ஏற்றுக் கொண்டதால்,…
வத்தலகுண்டு வனத்துறைகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தாண்டிக்குடி மலைப்பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற, 3 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதியை சேர்ந்த சிலர் யானை தந்தத்தை விற்பனை செய்ய முற்படுவதாக, வத்தலகுண்டு வனத்துறையினருக்கு கிடைத்த தகவல் கிடைத்தது. வத்தலகுண்டு வனத்துறை வனசரகர் காசிலிங்கம், தாண்டிக்குடி பிரிவு வனவர் முத்துக்குமார், வத்தலகுண்டு வனவர் ரமேஷ் மற்றும் வனத்துறை தனிப்படை பிரிவினர், வியாபாரி போல் பேசி தாண்டிக்குடி அடுத்த மங்களம்கொம்பையைச் சேர்ந்த சுருளிவேல் (38), பண்ணைக்காடு ராதாகிருஷ்ணன் (44) தாண்டிக்குடி பட்லங்காடு பாஸ்கரன் (42) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த யானைத் தந்தத்தை பறிமுதல் செய்தனர். அந்த தந்தத்தை யாரிடமாவது வாங்கினார்களா? அல்லது யானையை கொன்று தந்தத்தை எடுத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுருளிவேல், பாஸ்கரன், ராதாகிருஷ்ணன் ஆகிய 3 வரை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில்…
கேரளாவில் இன்றும் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழையானது 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளாவில் முன்கூட்டியே பெய்யத் தொடங்கியுள்ளது. கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்து அணைகள் நிரம்பி வருகின்றன. வானிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ”கேரளாவின் கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளது. இந்த 5 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது.” கனமழையை அடுத்து, கண்ணூர், வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர். கோழிக்கோட்டின் வடகரை தாலுகாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு…
மதுரையில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய தலைமை காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதி காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் பூபாலன். இவர் தேனியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தனது கணவர் மற்றும் மாமனார் ஆகியோர் நாள்தோறும் கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை படுத்துவதாக அப்பெண் புகார் தெரிவித்தார். அந்த புகாரில், திருமணத்தின் போது 60 சவரண் நகை, இருசக்கர வாகனம், சீர்வரிசை உள்ளிட்ட பொருட்களை வழங்கினோம். ஆனால் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் பூபாலன் தன்னை கடுமையாக தாக்கியதாக கூறியிருக்கிறார். கணவர் தாக்கியதில் காயமடைந்த அந்த ஆசிரியை, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஆசிரியையின் பெற்றோரும் திருப்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமார் உள்ளிட்ட 4…
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து (77) உடல்நலக்குறைவால் காலமானார். கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதிக்கும் இவருக்கும் பிறந்த மு.க.முத்து, தமிழ் திரையுலகில் ஒரு நடிகராக அறிமுகமானவர். 1970களில் “பூக்காரி”, “பிள்ளையோ பிள்ளை”, “அணையா விளக்கு”, “சமையல்காரன்” போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். அவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த மு.க.முத்து, சென்னையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவு திமுகவினர் மத்தியிலும், திரைத்துறையினர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.