Author: Editor TN Talks

குமரி மாவட்ட பாதுகாக்கப்பட்ட தனியார் வன விதிகளை மீறும் வகையில் செயல்பட்ட கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர்கள் மீது துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கை முடித்து வைத்து மதுரை அமர்வு உத்தரவு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் தாஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் வன அலுவலர்களாக பணிபுரியும் ஆனந்த், ஷனவாஸ்கான், ஸ்ரீவள்சன் ஆகியோர், ” குமரி மாவட்டம், கடையல் வருவாய் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் சுமார் 4000 ரப்பர் மரங்களை வெட்ட அனுமதி வழங்கியுள்ளனர். ஆற்றுப் புறம்போக்கு பகுதியில் இருந்தும் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மரங்களை வேரோடு சாய்க்க ஜேசிபி, ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது சுற்றுச்சூழல் சமநிலையை பாதிக்கும். தனியார் வனமாக அறிவிக்கப்பட்ட பகுதியாயினும், அது முறையாக பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர்கள் தனி நபர்களை ரப்பர்…

Read More

சேலத்தில் மாநகர் மாவட்ட அதிமுகவிற்காக கட்டப்பட்ட புதிய அலுவலகத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சேலம் நெடுஞ்சாலை நகர் அருகே உள்ள கிருஷ்ணா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேலம் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து, குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். 2,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில், 150 பேர் அமரக்கூடிய அரங்கும், மாநகர மாவட்ட கழக செயலாளருக்கான தனி அறையும், தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கான அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிரொலி ஏற்படாமல் இருப்பதற்காக அரங்கு சுவர் முழுவதும் எதிரொலி தடுப்பு வழிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடம் முழுவதும் குளிரூட்டி வசதி செய்யப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் சிங்காரம், சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஏகேஎஸ்எம் பாலு, சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன்,…

Read More

திருப்பூரில் பள்ளியில் போதிய வகுப்பறை இன்றி வராண்டா, மொட்டைமாடியில் மாணவர்கள் கல்வி பயின்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜகவினர் பள்ளி முன்பு சாலை மறியல் மேற்கொண்டனர். அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1238 மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் 18 வகுப்பறைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது, மற்ற வகுப்பு மாணவர்கள் வராண்டா மொட்டை மாடி நடை பாதை உள்ளிட்ட இடங்களில் அமர்ந்து கல்வி பயின்று வரும் நிலை உள்ளது. இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியான நிலையில் பெற்றோர்களிடம் கருத்து கேட்டு கூட்டம் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நியாயம் கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர் இதனை தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. இதனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் பள்ளி…

Read More

பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், வன்னியர் சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் திமுக அரசு தாமதிப்பதாகக் குற்றம்சாட்டி, தனது தொண்டர்களுக்கு ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். இந்த தாமதத்தை “சமூக அநீதி” என்று கடுமையாக விமர்சித்துள்ள அவர், ஜூலை 20 அன்று விழுப்புரத்தில் மாபெரும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளார். திமுக அரசின் மீதான குற்றச்சாட்டுகள்: உச்ச நீதிமன்ற உத்தரவை அலட்சியம்: வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 1200 நாட்கள் ஆகியும், திமுக அரசு அதை நிறைவேற்றவில்லை. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தாமதம்: வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த பரிந்துரைகளை வழங்க தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட 30 மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையில், அரசு அறிக்கை கோராமல் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இதனை, பா.ம.க. “கூட்டு சதி” என்று குற்றம்சாட்டியுள்ளது. போலி சமூக நீதியாளர்கள்: அண்ணல் அம்பேத்கர் மற்றும் தந்தை…

Read More

கர்நாடகா, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் ஒரு முக்கிய நபராக இருந்த மூத்த நடிகை பி. சரோஜா தேவி, பெங்களூருவில் வயது மூப்பு தொடர்பான உடல்நலக்குறைவால் தனது 87வது வயதில் காலமானார். அவர் “அபிநய சரஸ்வதி” மற்றும் “கன்னடத்து பைங்கிளி” போன்ற புனைப்பெயர்களால் அறியப்பட்டவர். 1955 இல் கன்னடப் படமான ‘மகாகவி காளிதாசா’ மூலம் தனது திரையுலக பயணத்தைத் தொடங்கிய அவர், தமிழ் சினிமாவில் 1958 இல் எம்.ஜி.ஆர். நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இதையும் படிக்க: இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கனும்.. . கண்ணீர் விட்ட வனிதா விஜயகுமார்… சரோஜா தேவி தனது கலைப் பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ (1969) மற்றும் பத்ம பூஷன்…

Read More

பிரபல தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்த மூத்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ் இன்று காலமானார். அவருக்கு வயது 83. நடிப்புத் துறையில் அவரது பங்களிப்பு ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் பிறந்த கோட்டா சீனிவாச ராவ், 1978 ஆம் ஆண்டு ‘பிரானம் கரிது’ என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான அவரது நடிப்பு வாழ்க்கையில், சுமார் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் ஆழமான முத்திரையைப் பதித்தார். அவரது தனித்துவமான வசன உச்சரிப்பும், உடல்மொழியும் அவரை தென்னிந்திய திரையுலகின் முன்னணி வில்லன்களில் ஒருவராக நிலைநிறுத்தின. தெலுங்கு திரையுலகில் பெரும் நட்சத்திரமாக விளங்கிய அவர், தமிழில் ‘காக்க காக்க’, ‘தலைவா’, ‘சாமர்த்தியம்’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். விருதுகளும் அங்கீகாரமும் கோட்டா சீனிவாச ராவ் தனது நடிப்புத்…

Read More

பள்ளிகளில் மாணவர்களுக்கு மேஜைகள் வழங்கப்பட்ட பிறகு நேர் வரிசையாக அடுக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் அந்த கடைசி மேஜைகளில் யார் அமர்வது என்று சண்டையே வரும். குறிப்பாக கடைசி பெஞ்சில் அமரும் மாணவர்கள் சரிவர படிக்க மாட்டார்கள் என்ற கண்ணோட்டமும் உண்டு. பெற்றோருக்கு நமது குழந்தை முதல் பெஞ்சில் தான் அமர வேண்டும் என்ற ஆவலும் அதிகம். அப்படியிருக்க, இனி பள்ளியில் நேர் வரிசையாக மேஜைகள் அமைக்கப்படக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தற்போதைய வகுப்பறை அமைப்பின் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மாணவர்களால் சரிவர கவனிக்க முடியாத சுழல் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. எனவே, கற்பித்தலில் கவனச் சிதறலைத் தவிர்ப்பதற்காக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறை இருக்கைகளை ‘ப’ வடிவில்…

Read More

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. லண்டன் நகரில் லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்சில் அந்த அணி 112.3ஓவரில் 387 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். அத்தோடு இந்தியா தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 5 விக்கெட்களை எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 2-வது நாள் ஆட்டநேர முடிவில், 43 ஓவர்களில் 3 விக்கெட்க்கு, 145ரன்கள் அடித்திருந்தது. லோகேஷ் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த ஆட்டத்தின் போது, கே.எல்.ராகுல் – ரிஷப் பண்ட் ஜோடி, இங்கிலாந்து பந்துவீச்சை கவனத்துடன் எதிர்கொண்டது. சிறப்பாக விளையாடிய இந்த சோடி 141 ரன்களில் பிரிந்தது. ரிஷப் பண்ட்…

Read More

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் காவல்நிலையத்தில் அடித்து சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த விசாரணையின் இடைக்கால அரிக்கையை விசாரணை அதிகாரி கடந்த 8-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர் நீதிமன்றம், ஆக. 20 ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தமிழக காவல்துறையினரிடம் இருந்து அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், பிரிவு 103இன் கீழ் வழக்கு பதிவு செய்து…

Read More

ஹோட்டலுக்கு நேரடியாக சென்று உணவு வாக்குவதை தாண்டி தற்போது செல்போனில் ஆர்டர் செய்தால் வீடுதேடி உணவு வரும் அளவு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களில் பலருக்கு அதற்கு தேவையான உணவை தயார் செய்வதிலும், சரியாக கொடுப்பதில் பல குழப்பங்கள் நிலவும். அதிலும் வேலைக்கு செல்பவர்களால் சரியான நேரத்திற்கு சரியான உணவை கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். அவ்வாறு சிரமபடுபவர்களுக்காக கேரளாவில் புது ஸ்டார்ட் அப் உருவாக்கப்பட்டுள்ளது. கோட்டயத்தில் உள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்களுக்கு ஆர்டரின் பெயரில் வீட்டில் தயாரித்த சுவையான உணவை டோர் டெலிவரி செய்து வருகிறது. இந்த முயற்சி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ”கேஸ் டாக் புட்” என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நண்பர்களான சாரங் ஸ்ரீதர் மற்றும் கோவிந்த் ஆகியோரால் நிறுவப்பட்டுள்ளது. ஆர்டர்கள் வாட்ஸ் அப் வழியாக பெறப்பட்டு டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. அடுத்தக்கட்டமாக செயலி அறிமுகப்படுத்தி கொச்சி…

Read More