Author: Editor TN Talks
நடிகை வனிதா இயக்கம் மற்றும் நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் நேற்று வெளியானது. வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ள இப்படத்தில் வனிதாவிற்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தில் இளையராஜாவின் ராத்திரி சிவராத்திரி என்ற பாடல் இடம்பிடித்துள்ளது. இதற்கு அனுமதி பெறாததால், இப்பாடலை படத்திலிருந்து நீக்குமாறு இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இது குறித்து வனிதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த அவர், ‛‛தெய்வமே இப்படி செய்யலாமா? நாங்க அந்த பாடலுக்கு முறைப்படி சோனி மியூசிக் நிறுவனத்திடம் பணம் கொடுத்து அனுமதி வாங்கினோம். அவர்களுக்கும், இளையராஜா தரப்பும் இன்னும் பிரச்னை. இவர்களும் எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறார்கள். நான் ஒரு வீடு வாங்குகிறேன். பில்டரிடம் பணம் கொடுக்கிறேன். அப்போது இன்னொருவர் இந்த மனை எங்களுடையது என வந்தால் என்ன செய்ய முடியும். நான் அமைதியாக இருக்கிறேன். இளையராஜா வீட்டில் அவர் மனைவி ஜீவா அம்மாவிடம்…
பாமகவில் உட்கட்சி பூசல் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு கட்சி பிளவுபடும் அளவுக்கு சென்றுள்ளது. ஒருபுறம் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ராதமாஸின் ஆதரவாளர்களை நீக்குவதுமாக குழப்பங்களுக்கு மத்தியில் தொண்டர்கள் உள்ளனர். இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் சமூகநீதியின் அடையாளமாகவும், அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாவலனாகவும் திகழும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ஆம் நாள் 36 ஆண்டுகளை நிறைவு செய்து, 37-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணத்தில் உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன என்கிற போதே, இந்த 36 ஆண்டுகளில் ஓர் அரசியல் கட்சியாக என்னென்ன நாம் சாதித்தோம்? என்ற வினாவை நீங்களும் எழுப்புவீர்கள், நானும் என்னை நோக்கி…
யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய சின்னங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டை இடம்பெற்றுள்ளது. யுனெஸ்கோ எனப்படும் ஐ.நா சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு, பாரம்பரிய சின்னத்தின் சரித்திர காலம், கலைபடைப்புத் தன்மை உள்ளிட்ட சிறப்புகளின் அடிப்படையில், சர்வதேச பாரம்பரிய நினைவு சின்னங்களுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது. அந்த வகையில், மஹாராஷ்டிராவில் உள்ள மராத்திய கோட்டைகள் கொண்ட நிலப்பரப்புகளில் உள்ள வரலாற்று இடங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த தகவலை யுனெஸ்கோ அமைப்பு நேற்று உறுதி செய்தது. இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ”யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் புதிய கல்வெட்டு: இந்தியாவின் மராத்திய ராணுவ நிலப்பரப்புகள்’ என, தெரிவித்துள்ளது. 2024 – 25ம் ஆண்டிற்கான பட்டியலில் மராத்திய கோட்டைகள் இடம்பெறுவது தொடர்பான முடிவு, ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசில் நடைபெற்று வரும் உலக பாரம்பரிய குழுவின் 47வது அமர்வின் போது எடுக்கப்பட்டது. இதன்படி, யுனெஸ்கோ உலக பாரம்பரிய…
டெல்லியில் நொடிப்பொழுதில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், 12 பேர் இடிபாடுகளில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியில் ஜனதா மஸ்தூர் காலனி உள்ளது. இங்குள்ள 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் 4 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியின் போது ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுவரை 12 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பார்கள் எனக் கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த கட்டட விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் வரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி முதன் முதலாக ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் பீனிக்ஸ். இப்படம் கடந்த 4-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாக படம் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் சூர்யாவின் நடிப்பும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா பபுல்காம் மென்று கொண்டே ரசிகர்களை சண்டித்தது பல்வேறு விமர்சனங்களை பெற்றது. இதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியிருந்தார். இந்த நிலையில், இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குநர் அனல் அரசு, ‘பீனிக்ஸ்’ படம் சூர்யாவுக்காக மட்டும் எடுக்கப்பட்டது கிடையாது. சூர்யா மீது குற்றச்சாட்டு கூறுவோருக்கும், அவரை விமர்சித்து டிரோல் செய்வோருக்கும் நான் சொல்லிக்கொள்வது, ‘நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை, இந்த படத்தின் மூலமாக புதிதாக சினிமாவில்…
தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான குபேரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்த இப்படத்தில், தனுஷ் தேவா என்ற கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருந்தார். ரூ.130கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் வரும் 18-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாகவுள்ள பண்னியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில், அந்தவகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற குரூப்-4 பணிகளில் 3,935 காலி இடங்கள் இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. இந்த இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு சமீபத்தில் ஹால்டிக்கெட்டையும் வெளியிட்டது. அதன்படி, 5,26,553 ஆண்கள், 8,63,068 பெண்கள், 117 திருநங்கைகள் என மொத்தம் 13,89,738 பேர் இன்று (சனிக்கிழமை) இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 314 மையங்களில் எழுதுகின்றனர். குறிப்பாக சென்னைய்ல் மட்டும் 94,848 பேர் எழுதுகின்றனர். இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும்…
கடந்த மாதம் 12-ம் தேதி உலகையே உலுக்கியது போன் நடந்தது ஏர் இந்தியா விமான விபத்து. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்டது ஏர் இந்தியா விமானம். ஓடுபாதையில் இருந்து மேல் எழும்பிய சிலமணி நிமிடங்களில் அங்கிருந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மீது விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் உட்பட, மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள், மருத்துவவிடுதியில் இருந்த மாணவர்கள் உட்பட மொத்தம் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த விமானத்தில் இந்திய பயணிகள் உட்பட பல நாடுகளை சேர்ந்த பயணிகளும் இருந்ததால், உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அந்த அமைச்சகம் முதற்கட்ட அறிக்கையை, மத்திய அரசிடம் கடந்த 8-ம் தேதி சமர்பித்தது. 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை இன்று வெளியானது.…
கோவை, செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் அமைந்து உள்ள இந்துக்கள் மயானம், கோவை மாநகராட்சியின் பராமரிப்பில் செயல்பட்டு வருகிறது. 15 க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இடத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மயானத்தில் கர்ம காரியங்களுக்கு மண்டபமும், தகன மேடையும் உள்ளன. ஆனால், சமீப காலமாக இந்த மயானம் சரியான பராமரிப்பின்றி உள்ளது. இதனால், அந்த இடம் சமூக விரோதிகள் தங்கும் கூடாரமாக மாறி உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. இதனை அடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு, இருவர் போதைப் பொருட்களுடன் இப்பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவமும் இதை உறுதி செய்கிறது. மேலும், மயானத்திற்குப் பக்கத்தில் உள்ள தனியார் நபர் ஒருவர் தனது நிலத்தை மனைகளாக விற்க முயற்சித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, மயானத்தின் சுற்றுச்சுவரை இடித்து, முன்னோர்களுக்கு அமைத்து இருந்த மூன்று ஜீவ சமாதிகளை இடித்து, மேலும் அங்கு இருந்த சமாதிகளை இடித்து,…
காதலியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மைனர் பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவையை சேர்ந்த மதன்குமார் என்பவருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் மதன்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2023 ம் ஆண்டு தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து மதன் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதன் குமார் தரப்பில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணும் மனுதாரரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அப்பெண்ணுக்கு 40 வயதுடைய உறவினரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததால் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இருவரும்…