Author: Editor TN Talks

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவையில் பேசியவர், இந்து சமய அறநிலைத்துறை நிதியிலிருந்து கல்லூரிகள் கட்டுவது குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் எடப்பாடி பழனிச்சாமி கருத்தை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆர்எஸ்எஸ் உடை அணிவித்தது மாதிரியான புகைப்படங்களை கையில் வைத்து மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது இந்து சமய அறநிலை துறை சார்பாக கல்லூரிகள் கட்டுவது சிறப்பான ஒன்று. பாஜகவின் அடிமையாகவே எடப்பாடி பழனிச்சாமி மாறி இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

Read More

விருதுநகர் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி நடக்கும் விபத்துக்கள் குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இரு குழுக்களை அமைத்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023 ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் உள்ள, கங்கர்செவல் கிராமத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியாகினர். இது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இந்த விவகாரத்தை தாமாக முன் வழக்கு விசாரணைக்கு எடுத்தது.இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யா நாராயாணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வானது , விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகள் நிகழ்ந்து தொழிலாளர்கள் பலியாவது மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்தனர். பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஆலைகள் செயல்படுவதற்கான பாதுகாப்பு விதிகள் குறித்து அறிந்திருக்கவில்லை என்பதையே விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து காட்டுகிறது என தெரிவித்த தீர்ப்பாய உறுப்பினர்கள், வெடிபொருட்களின் துணைத்…

Read More

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் கூலி. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்துள்ளார். இதன் முதல் பாடல் சிக்கிடுசிக்கா ஏற்கனவே வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்தது. சமீபத்தில் கூட அதன் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியானது. அதில் அனிருத், நடன இயக்குநர் சாண்டி, இயக்குநரும் நடிகருமான டி.ஆர்.ராஜேந்தர் ஆகியோர் ஆடி அதகளம் செய்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு ஜுலை 9-ந் தேதி மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி மோனிகா என்று தொடங்கும் பாடலின் 20 நொடிகள் வீடியோ சன் பிக்சர்ஸ்-ன் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியானது. அதிரடியான இசையோடு அட்டகாசமான நடனத்தோடு வெளிவந்திருக்கும் இந்த பாடல் ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த பாடலில் நடிகை பூஜா ஹெக்டே சிவப்பு நிற ஆடை அணிந்து…

Read More

மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கலையரசன். அதனை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேப் போல கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது கலையரசன் கதாநாயகனாக ’டிரெண்டிங்’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவராஜ் இயக்கியுள்ளார். கலையரசனுக்கு ஜோடியாக பிரியாலயா என்பவர் நடித்துள்ளார். இவர்களுடன் பிரேம் குமார் மற்றும் பெசண்ட் நகர் ரவி ஆகியோரும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கமர்ஷியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் 18-ம் தேதி வெளியாகவுள்ளது. அதனையொட்டி படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் ஆர்யா ஆகியோர் இப்படத்தின் டிரெய்லர் ஆகியவற்றை வெளியிட்டுள்ளனர்.

Read More

கடலூர் அருகே தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வாகனத்தை மஞ்சக்குப்பத்தை சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டி வந்துள்ளார். வழக்கம் போல தொண்டமாநத்தம், சின்னகாட்டு சாகை ஆகிய கிராமங்களுக்கு சென்று குழந்தைகளை ஏற்றி சென்றுள்ளார். கடலூர் முதுநகர் பகுதியில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு, காலை 7.30 மணியளவில் செம்மங்குப்பம் பகுதி அருகே வேன் வந்துள்ளது. அப்போது அங்கு ரயில்வே கேட் திறந்து இருந்துள்ளது. எப்போதும் போல சங்கர் வேனை ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முற்பட்டப் போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரயில், பள்ளி வேன் மீது மோதி இழுத்து சென்றுள்ளது. இதில் வேனில் இருந்த பள்ளி மாணவர்கள் தூக்கி வீசப்பட்டதில், 3 மாணவர்கள் பலியாகினர். இந்த கோர விபத்திற்கு கேட் கீப்பரான மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பங்கஜ் சர்மா தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.…

Read More

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இதன்ஒருபகுதியாக கோவையில் நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசும்போது கோயில்களில் உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கை என்பது கோயிலுக்கு சொந்தமானது, அதாவது இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று கூறியிருந்தார். மேலும் அந்த நிதியைக் கொண்டு கோயில்களைத் தான் மேம்படுத்த வேண்டுமே தவிர, அதனைக் கொண்டு கல்வி நிலையங்களை நடத்துவது தவறு என பொருள்பட பேசியிருந்தார். இந்த பேச்சு பெருவாரியான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரிகள் எவை எவை என்ற பட்டியலை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 6 கல்லூரிகள் இந்து சம அறநிலையத்துறையின் கீழ் இயங்குகிறது. அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக்கல்லூரி, பழநி, திண்டுக்கல் மாவட்டம் – ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு – 1963 அருள்மிகு பழனியாண்டவர்…

Read More

கோவை புதூரில் செயல்பட்டு வரும் “சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்டு” காப்பகத்துக்கு செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக, 36 பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் இந்த காப்பகத்தில் வசித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் “வாழை, ப்ளூ ஸ்டார், எதற்கும் துணிந்தவன்” உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை திவ்யா துரைசாமி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் செய்தார். கலைநிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுடன் திவ்யா துரைசாமி சினிமா பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடியது, குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கும், சிறப்பு குழந்தைகளுக்கும் பரிசிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பேசிய நடிகை திவ்யா துரைசாமி, “பெண் குழந்தைகளுடன் வைத்து செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. நமக்கு சிறிதாக தோன்றும் விடயம், மற்றவர்களுக்கு பெரும் உதவியாக கூட இருக்கலாம். எனவே, நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும். பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் உள்ளிட்ட…

Read More

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்ததில் 2 கோடியே 77 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கில் இருந்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2009 ம் ஆண்டு முதல் 2012 ம் ஆண்டு வரை துணைவேந்தராக பதவி வகித்தவர் முருகேச பூபதி. இவர், தனது பதவிக்காலத்தில் கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. நிபுணர்கள் அறிவுரையை மீறி, இந்த இயந்திரங்கள் கொள்முதல் செய்ததன் மூலம், தனியார் நிறுவனம் 2 கோடியே 77 லட்சம் ரூபாய் லாபமடையச் செய்ததாகவும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, முன்னாள் துணைவேந்தர் முருகேச பூபதி தாக்கல் செய்த மனுவை கோவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து…

Read More

பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்திற்கு தங்கள் நிலங்களை வழங்க ஒப்புதல் தெரிவித்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கான பத்திரப்பதிவு பணியினை தொடங்கி உள்ளனர். சென்னையின் 2வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மொத்தமாக பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளன. தொடர்ந்து பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மொத்தம் 3331.25 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு, ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல்…

Read More

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் கூலி. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்துள்ளார். இதன் முதல் பாடல் சிக்கிடுசிக்கா ஏற்கனவே வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்தது. சமீபத்தில் கூட அதன் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியானது. அதில் அனிருத், நடன இயக்குநர் சாண்டி, இயக்குநரும் நடிகருமான டி.ஆர்.ராஜேந்தர் ஆகியோர் ஆடி அதகளம் செய்திருந்தனர். It’s time to groove! 💃🏻😎 #Coolie Second Single Announcement Today 6 PM🥳#Coolie worldwide from August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @anbariv @girishganges @philoedit @ArtSathees @iamSandy_Off… pic.twitter.com/KHWfDz9gMt — Sun Pictures (@sunpictures) July 9, 2025 இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.…

Read More