Close Menu
    What's Hot

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    ”மானம் இல்லாத அமெரிக்கா…” டிரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் பதிலடி

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வேளாண் பல்கலை. துணைவேந்தரை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு
    தமிழ்நாடு

    வேளாண் பல்கலை. துணைவேந்தரை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2025Updated:July 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1360577
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்ததில் 2 கோடியே 77 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கில் இருந்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

    கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2009 ம் ஆண்டு முதல் 2012 ம் ஆண்டு வரை துணைவேந்தராக பதவி வகித்தவர் முருகேச பூபதி. இவர், தனது பதவிக்காலத்தில் கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டது.

    நிபுணர்கள் அறிவுரையை மீறி, இந்த இயந்திரங்கள் கொள்முதல் செய்ததன் மூலம், தனியார் நிறுவனம் 2 கோடியே 77 லட்சம் ரூபாய் லாபமடையச் செய்ததாகவும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, முன்னாள் துணைவேந்தர் முருகேச பூபதி தாக்கல் செய்த மனுவை கோவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு ஊழியராக இருந்த முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக வழக்கு தொடர அரசு ஒப்புதல் பெறாததால், இந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என துணைவேந்தர் தரப்பில் வாதிடப்பட்டது.

    இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பல்கலைக்கழக சட்டப்படி துணைவேந்தரை பணி நீக்கம் செய்ய அரசின் முன் அனுமதி தேவையில்லை என்பதால், முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக வழக்கு தொடர அரசின் முன் அனுமதியும் தேவையில்லை எனக் கூறி, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    மேலும், கடந்த 2012 ம் ஆண்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என கோவை சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபரந்தூர் விமானநிலையம் – பத்திரப்பதிவு தொடக்கம்
    Next Article பெண் குழந்தைகள் காப்பகத்தில் இளம் நடிகை திவ்யா துரைசாமி கலக்கல் நடனம்..
    Editor TN Talks

    Related Posts

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    July 5, 2026

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    July 5, 2026

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    ”மானம் இல்லாத அமெரிக்கா…” டிரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் பதிலடி

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.