Author: Editor TN Talks
சில தினங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் மூலம் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கியதும், பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, ஜூலை 7-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் ஜாமின் கோரி மனு தாக்கல் அளித்த நிலையில், இருவரது மனுவையும் விசாரித்த சிறப்பு நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், மற்றும் கிருஷ்ணாவுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்த வழக்கில் அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகிய மேலும் 2 பேரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் சப்ளையர் கெவினின் கூட்டாளிகள் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட படங்கள் குடும்ப வாழ்க்கையோடு ஒன்றினைவதாக இருக்கும். சாதாரண ஒரு குடும்பமும் அதில் வரும் பிரச்னைகளை குடும்பத் தலைவர் எப்படி சரி செய்வார் என்பதுமான கதைக் களங்கள் அதிகம். அப்படி 2015-ம் ஆண்டு கமல்ஹாசன், கௌதமி உட்பட பலர் நடிப்பில் வெளியாகி குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப் படமாக இருந்தது பாபநாசம். மலையாளத்தில் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம் திரிஷியம். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் ரீமெக் செய்யப்பட்டது. அப்படி தமிழில் வெளியானது தான் பாபநாசம். இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இந்த நிலையில், திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் முதலில் ரஜினிகாந்த்தை தான் தேர்வு செய்ததாக இயக்குநர் ஜித்து ஜோசப் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, “பாபநாசம் படத்திற்கு ரஜினிகாந்த்தான் முதல் தேர்வாக இருந்தார், ஆனால்…
இந்தியாவுக்கும் டிரினிடாட் & டொபாகோவுக்கும் இடையிலான நட்பு, இரு நாடுகளின் இதயங்களை இணைக்கும் ஆழமான பிணைப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். போர்ட் ஆஃப் ஸ்பெயினில் அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்குப் பிறகு, இந்த நட்பு “நம்பிக்கையின் புதிய அத்தியாயம்” என அவர் வர்ணித்தார். வரலாற்றுப் பிணைப்பும், கலாச்சாரப் பெருமையும் “நமது இந்த நட்பு, காலத்தால் அழியாதது,” என்று பிரதமர் மோடி தனது செய்தியில் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து கடல் கடந்து டிரினிடாட் & டொபாகோ மண்ணில் வேரூன்றி, தங்கள் உழைப்பாலும் கலாச்சாரப் பங்களிப்பாலும் அந்த நாட்டை செழிப்பாக்கிய முன்னோர்களின் தியாகமே இந்த ஆழமான நட்பின் ஆதாரம் என்றும் அவர் பெருமிதம் கொண்டார். May the friendship between India-Trinidad & Tobago flourish in the times to come! Highlights from a special welcome in Port of Spain… pic.twitter.com/yUprg1LyB4 — Narendra Modi…
சென்னையில் உள்ள பரங்கிமலை புனித தோமையார் திருத்தலம், தற்போது உலகப் புகழ்பெற்ற பசிலிக்கா திருத்தலமாக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பையொட்டி நடைபெற்ற விழாவில் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் பொதுமக்கள் சுதந்திரமாகச் சென்றுவர முடிகிறது எனப் பெருமிதம் தெரிவித்தார். பரங்கிமலை திருத்தலத்தின் வரலாற்றுப் பின்னணி இயேசுவின் சீடர்களில் ஒருவரான தோமா, கி.பி. 72-ல் சென்னை பரங்கிமலையில் உள்ள தற்போதைய புனித தோமையார் மலையில் உயிர் நீத்ததாக மரபு வழிச் செய்தி கூறுகிறது. இந்தியாவில் கிறிஸ்தவ சமயத்தை முதன்முதலில் பரப்பிய இவர், கேரளாவில் தனது மதப் பணிகளைத் தொடங்கினார். பரங்கிமலையில் 300 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையின் மீது, 1523-ல் போர்த்துக்கீசிய மறைப்பணியாளர்கள் ஒரு சிறிய கோவிலை முதலில் கட்டினர். பின்னர் அது பெரிய தேவாலயமாக விரிவாக்கப்பட்டது. பசிலிக்காவாக உயர்வு மற்றும் விழா நிகழ்வுகள் தற்போது, இந்த புனித தோமையார் மலை…
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித் குமாரின் (27) மரணம் தொடர்பாகப் புகாரளித்த நிகிதா, கைது அச்சத்தில் கோவை மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கோவையில் உள்ள ஒரு பிரபல தேநீர் விடுதியில் காணப்பட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. அஜித் குமார் மரணம்: சம்பவம் ஒரு பார்வை கடந்த ஜூன் 27-ம் தேதி, மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா தனது தாயாருடன் திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார். தனது காரை ‘பார்க்கிங்’ செய்யும்படி அஜித் குமாரிடம் சாவியைக் கொடுத்திருக்கிறார். அஜித் குமாருக்கு கார் ஓட்டத் தெரியாததால், மற்றொருவரின் உதவியுடன் காரைப் பார்க்கிங் செய்துவிட்டு, சாவியை நிகிதாவிடம் திருப்பி அளித்துள்ளார். சாமி கும்பிட்டுவிட்டு, நிகிதா காரில் ஏறியபோது, தனது பையில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.2,200 காணாமல் போனதைக் கண்டார். இதுகுறித்து நிகிதா அளித்த…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் லாக்-அப் மரணங்கள், வரதட்சணை கொடுமைகள், மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தனது கவலைகளைத் தெரிவித்தார். இந்த விவகாரங்களில் முதலமைச்சர் நேரடியாகப் பொறுப்பேற்றுப் பதிலளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். லாக்-அப் மரணங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு லாக்-அப் மரணங்கள் அதிகரித்து வருவது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதைக் காட்டுவதாக குஷ்பு தெரிவித்தார். பொதுமக்களுக்குக் காவல்துறை தரும் தொந்தரவுகளை முதலமைச்சர் நேரடியாகப் பார்க்க வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கு முதலமைச்சரின் கீழ் தான் வரும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சிபிஐ-க்கு வழக்குகள் மாற்றப்பட்ட பிறகும் இது போன்ற சம்பவங்கள் தொடர்வது திமுக அரசின் தோல்வியையே காட்டுவதாகவும், இதற்கு முதலமைச்சர் தான் பொறுப்பேற்றுப் பதிலளிக்க வேண்டும் என்றும் குஷ்பு வலியுறுத்தினார். வரதட்சணை கொடுமை மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு லாக்-அப் மரணங்கள் மட்டுமின்றி, வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும்…
அஜித் குமார் படுகொலை வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் மற்றும் வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட நபருக்கு தமிழக அரசு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். புகார்தாரர் சுமிதா மீதான சந்தேகம் புகார்தாரரான சுமிதா குறித்து சில சந்தேகங்களை திருமாவளவன் எழுப்பியுள்ளார். அவர் மருத்துவர் என்று கூறப்பட்ட நிலையில், பிஎச்டி பட்டம் பெற்றவர் என்பதும், அவர் குடும்பத்தினர் மீது ஏற்கனவே பண மோசடி வழக்குகள் இருப்பதும் தற்போது வெளிவந்துள்ளதால், இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சுமிதா கோவிலுக்கு நகை கொண்டு வந்தாரா என்பது குறித்தும் தனி வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சுமிதாவுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டாலும், நீதிமன்றத்தில் அது மறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி மற்றும் தமிழ்நாடு காப்போம் முன்னெடுப்பு அதிமுக மற்றும் பாஜக இணைந்து…
போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஶ்ரீகாந்த் ஜாமீன் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஶ்ரீகாந்த், கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, இதே வழக்கில் கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இருவரும் ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி, எஸ்.ஹெர்மிஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை விசாரணைக்கு அழைத்த போது தாம் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்ததாக கூறினார். மேலும், மருத்துவ பரிசோதனையில் தாம் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்ததாகவும் கிருஷ்ணாவின் கைது நடவடிக்கை அடிப்படை உரிமையை மீறிய செயல் என்றும் தெரிவித்தார்.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தி வருமாறு.. சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று (3.7.25) என்னை நேரில் சந்தித்து, தாங்கள் தங்கும் சட்டக் கல்லூரியில் போதிய விடுதி வசதியின்மை, மோசமான கழிவறை பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதியின்மை குறித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போரட்டத்தை நிறுத்தியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். ஆனால், அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், குறிப்பாக இந்தாண்டு சட்டத்துறை மானிய கோரிக்கையின்போது சுமார் 21.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விடுதி கட்டிடம் பல்கலைக்கழக வளாகத்திலேயே கட்டப்படும் என்று அறிவித்த நிலையில், இதுவரை எந்த முன்னெடுப்பு செய்யப்படவில்லை என்றும் என்னிடம் முறையிட்டனர். தற்போது அரசின் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்றில் மாணவர்களில் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், பல மாணவர்கள் தனியார் விடுதிகளில் தங்குவதாகவும், அவர்களால் அதிக வாடகை கொடுத்து தங்க முடியாத…
திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றியத்தின் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக இருக்கும் செல்வானந்தம். இவரது மனைவி முத்துபிரியா நவநாரி ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார். செல்வானந்தம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்காச்சோளம் தொழில் செய்து வந்தார். இதன் இடையில் தொழில் நஷ்டம் ஏற்பட்ட காரணமாக பணத்தை தாமதமாக செலுத்தி வந்து உள்ளார். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ பவித்ரா ட்ரேடர்ஸ் உரிமையாளர் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் செல்வானந்தம் 80 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று வீட்டில் வந்து மிரட்டியதாக செல்வானந்த மனைவி கூறுகிறார். அதனைத் தொடர்ந்து அந்த இருவருக்கும் தி.மு.க மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகியான மணிமாறன் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் முத்துக்குமார் என்பவர் செல்வானந்தத்தை மிரட்டி 40 லட்சம் ரூபாய் மற்றும் 45 லட்சம் ரூபாய் என மொத்தம் 85 லட்சம்…