Close Menu
    What's Hot

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணம்: கோவையில் பதுங்கியுள்ளாரா புகாரளித்த நிகிதா!
    தமிழ்நாடு

    திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணம்: கோவையில் பதுங்கியுள்ளாரா புகாரளித்த நிகிதா!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 4, 2025Updated:July 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250704 WA0005
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித் குமாரின் (27) மரணம் தொடர்பாகப் புகாரளித்த நிகிதா, கைது அச்சத்தில் கோவை மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கோவையில் உள்ள ஒரு பிரபல தேநீர் விடுதியில் காணப்பட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

    அஜித் குமார் மரணம்: சம்பவம் ஒரு பார்வை

    கடந்த ஜூன் 27-ம் தேதி, மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா தனது தாயாருடன் திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார். தனது காரை ‘பார்க்கிங்’ செய்யும்படி அஜித் குமாரிடம் சாவியைக் கொடுத்திருக்கிறார். அஜித் குமாருக்கு கார் ஓட்டத் தெரியாததால், மற்றொருவரின் உதவியுடன் காரைப் பார்க்கிங் செய்துவிட்டு, சாவியை நிகிதாவிடம் திருப்பி அளித்துள்ளார்.

    சாமி கும்பிட்டுவிட்டு, நிகிதா காரில் ஏறியபோது, தனது பையில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.2,200 காணாமல் போனதைக் கண்டார். இதுகுறித்து நிகிதா அளித்த புகாரின் பேரில், திருப்புவனம் போலீஸார் அஜித் குமார் உட்பட 5 பேரிடம் விசாரித்துள்ளனர். மற்றவர்களை விடுவித்த நிலையில், அஜித் குமாரை மட்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் வெளியே அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். ஜூன் 28-ம் தேதி, போலீஸார் தாக்கியதில் அஜித் குமார் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அஜித் குமாரைத் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் 5 போலீஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    நிகிதா மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் புதிய தகவல்கள்

    அஜித் குமார் மரணத்திற்கு நிகிதாதான் முக்கிய காரணம் என்றும், ஒரு உயர் அதிகாரியின் தூண்டுதலின் பேரில்தான் போலீஸார் தாக்கி அஜித் குமார் உயிரிழந்தார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இந்நிலையில், நிகிதா மீது பல்வேறு புகார்கள் காவல் நிலையத்தில் உள்ளதாகவும், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்து வருவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீஸார் தன்னைக் கைது செய்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில், நிகிதா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் எங்கும் ஓடவில்லை அல்லது ஒளியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    கோவையில் நிகிதா மற்றும் காவல்துறை அலட்சியம்?

    இன்று காலை, கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிரபல தேநீர் விடுதியில் நிகிதா தனது தாயார் மற்றும் கார் ஓட்டுநருடன் இருந்ததைக் கண்ட ஒருவர், தனது செல்போனில் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்து போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் சிறிதும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் அங்கு அமர்ந்திருந்த நிகிதா, பின்னர் கோவையை நோக்கி காரில் சென்றுள்ளதாகத் தெரிகிறது. தற்போது நிகிதா தேநீர் கடையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகின்றன

    Ajith Kumar Coimbatore Custodial death Dowry case Judicial custody Madurai Nikita police investigation Sivaganga Thiruppuvanam அஜித் குமார் காவல் மரணம் காவல்துறை விசாரணை கோவை சிவகங்கை திருப்புவனம் நிகிதா நீதிமன்றக் காவல் மதுரை வரதட்சணை வழக்கு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலாக் அப் மரணங்களுக்கு முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்.. நடிகை குஷ்பூ!
    Next Article பசிலிக்காவாக அறிவிக்கப்பட்ட பரங்கிமலை புனித தோமையார் திருத்தலம்: சபாநாயகர் அப்பாவு பெருமிதம்
    Editor TN Talks

    Related Posts

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    May 19, 2026

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    May 19, 2026

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.