Author: Editor TN Talks
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் என்பவர் மானாமதுரை போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் என்பவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்த அவர், தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்திருந்தார். இதன் அடிப்படையில் இன்றைய தினம் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு சிவகங்கை மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் காரைக்குடி டெக்னீஷியன் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கப்பட்டது. இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், நேரில் சென்று வழங்கினார். மேலும் தேளி வருவாய் கிராமத்தில் 3 சென்ட் என்ற அளவில் வீட்டு மனைப் பட்டாவானது, அஜித்குமாரின் தாயார் மாலதி வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி, மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர்…
திமுக ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி இருந்தார். இப்போது அந்த பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தியின் விவரம் வருமாறு.. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித் குமாரின் தாயிடம் “”சாரி மா” என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை? சரி, ஒருவேளை மனம் உவந்து தான் முதல்வர் மன்னிப்பு கேட்கிறார் என்றால், இதோ மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காவல்நிலையங்களிலும், காவல் துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்திற்குறிய வகையிலும் இறந்தவர்களின் பட்டியல்: 1. பிரபாகரன் (வயது 45) – நாமக்கல்…
சமூகவலைதளம் மூலம் சுமார் 30 பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து உல்லாசம் அணுபவித்த வடமாநில தொழிலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் 15 வயது சிறுமியின் ஆபாச புகைப்படம் ஒன்று, அச்சிறுமியின் தாயார் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு சமூக வலைதளம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் தாயார் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியின் புகைப்படத்தை பதிவிட்ட மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரகாஷ் நாயக் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், புதுச்சேரியில் இருந்து ஒஇசா தப்பிச் சென்று தப்பியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அந்த தனிப்படை போலீசார் ஒடிசா சென்றனர். அங்கு பாலாசூர் பகுதியில் மறைந்திருந்த பிரகாஷ் நாயக்கை கைது செய்து, அவரது செல்போனை ஆய்வு…
உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உரையாற்றி வருகிறார். தொகுதிக்குள் உள்ள பிரச்னைகள், உட்கட்சி மோதல்கள், மாற்றுக்கட்சியினரின் வலிமை, மக்களின் மனவோட்டம் ஆகியவை குறித்து நேரடியாக தகவல்களை பெற்று வருகிறார். அந்தவகையில் இன்றைய தினம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மீண்டும் இந்த நிர்வாகிகள் சந்திப்பை மேற்கொண்டார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை இந்த முறை கூட்டணிக்கு ஒதுக்க வேண்டாம் திமுகவினருக்கு வாய்ப்பு கொடுங்கள் முதலமைச்சரிடம் ஸ்ரீபெரும்புதூர் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இந்த நிலையில் இந்த முறை அந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு வழங்க கூடாது திமுகவிற்கே வழங்க வேண்டும் என்று கோரிக்கை…
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கிற்கு தடை விதிக்க கோரி சீமான் தாக்கல் மனு தாக்கல் செய்துள்ளார். வருண்குமாரின் குடும்பத்தை பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக வருண்குமார் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு உகந்தது என்று திருச்சி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது இன்று நீதிபதி விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி திருச்சியில் விசாரிக்கப்பட்டு வரும் வருண்குமார் வழக்கிற்கு இடைக்கால தடை தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார்.
2020-ம் ஆண்டு உலகையே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அலை ஒன்று அலை 2 என அலை, அலையாக பரவிய கொரொனா பெருந்தொற்று, அலை, அலையாக மக்களை கொண்டு சென்றது. இதற்காக உலகம் முழுவதும் பல ஆராய்ச்சியாளர்கள் இரவு பகலாக உழைத்து தடுப்பூசியை உருவாக்கினர். இந்தியாவை பொருத்தவரை, கோவேக்சின், கோவிசீல்டு என இருவகையான கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தடவையாக செலுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். தற்போது மீண்டும் கொரோனா பரவுவதாக தகவல்கள் வெளியனது மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தியது. இது கொரோனா அளவு வீரியம் கொண்டது அல்ல, வெறும் மைக்ரான் தான் என கூறப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் கொரோனா ஓய்ந்த பிறகு அடுத்தடுத்து மாரடைப்பால் பலர் உயிரிழந்தனர். இதற்கு காரணம் கொரோனா காலத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசி தான் எனக் கூறப்பட்டது. தற்போது மீண்டும் அதுபோன்ற தொடர் மரணங்கள்…
காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார்.. விசாரணையை தொடங்கினார் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்!
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் காவலாளியாகப் பணிபுரிந்த 27 வயதான அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளை, மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த அஜித்குமார், கடந்த ஜூன் 27-ஆம் தேதி கோவில் வந்த ஒரு பெண்ணின் காரில் இருந்து 10 பவுன் நகைகள் காணாமல் போனது தொடர்பாக சந்தேகிக்கப்பட்டார். திருப்புவனம் போலீசார் அவரை விசாரித்தபோது, அவரது சகோதரர் நவீன் மற்றும் ஆட்டோ டிரைவர் அருண் ஆகியோரையும் விசாரித்துள்ளனர். விசாரணையின்போது அஜித்குமார் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, மிளகாய்ப் பொடி தூவி சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தார். விசாரணை மற்றும் வழக்குப்பதிவு: அஜித்குமார் உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் காவல்துறையைக் கண்டித்து போராட்டம் நடத்தின. இதைத் தொடர்ந்து, மடப்புரம் போலீசார் ராஜா, சங்கரமணிகண்டன்,…
சினிமாக்களில் அரசாங்க நிலம், மெரினா கடற்கரை என பொது சொத்தை, தனி நபருக்கு ஏமாற்றி விற்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவது உண்டு. இந்த நிகழ்வு பஞ்சாப்பில் நிஜமாகவே நடந்துள்ளது. விமானப்படை ஓடுதளத்தை விற்பனை செய்து மாட்டிக் கொண்டுள்ளனர் தாய்-மகன். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே பட்டுவல்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே தான் பாகிஸ்தான் எல்லை உள்ளது. இங்கு ஒரு விமானப்படை ஓடுதளம் உள்ளது. இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இந்த ஓடுதளம், 1962, 1965 மற்றும் 1971ம் ஆண்டுகளில் நிகழ்ந்த போர்களின் போது பயன்படுத்தப்பட்டவை ஆகும். இந்த இடத்தை, பஞ்சாப்பை சேர்ந்த உஷால் அன்சால் என்ற பெண்ணும், அவரது மகனான நவீன் சந்த் ஆகியோரும் விலை பேசி விற்றுள்ளனர். முன்னாள் வருவாய்த்துறை அதிகாரி நிஷான் சிங் என்பவர் இது குறித்து புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பான…
ராமயணத்தை தழுவி அவ்வப்போது பல்வேறு படங்கள் எடுக்கப்பட்டாலும், அதற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், தற்போது மீண்டும் ராமாயண படம் எடுக்கப்படுகிறது. பாலிவுட், டோலிவுட் என இந்திய சினிமாவின் பெரிய பெரிய நடிகர்கள் இணையும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், கன்னட நடிகர் யாஷ் மற்றும் பான் இந்தியா நடிகையான சாய் பல்லவி ஆகியோர் இணைந்து ராமயணம் படத்தில் நடித்து வருகின்றனர். நிதேஷ் திவாரி இயக்கும் இந்த திரைப்படத்தில், ராமராக ரன்பீரும், ராவணனாக யாஷும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர். இரண்டு பாகமாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் கசிந்து வைரலாகும். இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு நாளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு மாநாடு, பத்து தல, வெந்து தணிந்தது காடு என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் வெற்றியடையவில்லை என்றாலும் கூட, சிம்புவின் நடிப்பு பாராட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது 49-வது படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் இருவரது ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர். இயக்குநர் வெற்றிமாறனும் விடுதலை படத்திற்கு பிறகு அடுத்த படைப்பிற்கு தயாராகி வருகிறார். வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியதாக, புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் படத்தில், சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு அடுத்தவாரம்…