Author: Editor TN Talks

தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக உறுப்பினர்களின் பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி 10 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாநகராட்சி முழுவதும் மக்களின் அத்தியாவசிய அனைத்து அடிப்படை பிரச்சனைகளும் தலை விரித்து ஆடுவதாக அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்தனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதி உற்று வருவதாகவும் இது குறித்து ஒப்பந்த நிறுவனத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மாமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அதிமுக மாமன்ற உறுப்பினர்களின் 10 வார்டுகளில் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் கூட்டத்தில் பேசியபோது, அவரை பேச விடாமல் திமுக உறுப்பினர்கள் அவையில் கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட தோழமை உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து 10 உறுப்பினர்களும்…

Read More

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் கொகைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆப்ரிக்க நாடான கயானாவை சேர்ந்த ஜான் என்பவர் பிரதீப் குமாருக்கு கொகைன் விற்பனை செய்தது தெரியவந்தது. ஒசூரில் வைத்து ஜானை கைது செய்த போலீசார், சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த பட்டியலில் நடிகர் ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார். இதனையடுத்து நேற்று (23.05.2025) ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என ஸ்ரீகாந்த் வாதம் செய்துள்ளார். சந்தேகத்தின் பேரில், சாலிகிராமத்தில் உள்ள ஸ்ரீகாந்தின் வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் எவ்வித போதைப் பொருளும் சிக்கவில்லை. ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட போது, அதில்…

Read More

கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் ஆகிய இருவரையும் ஒன்றாகக் காவலில் எடுத்து விசாரிக்க நுங்கம்பாக்கம் போலீசார் முடிவு செய்துள்ளனர். முக்கிய தகவல்கள்: ஸ்ரீகாந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரசாத் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். போலீஸ் விசாரணையில், பிரசாத் மூலமாகத்தான் ஸ்ரீகாந்திற்கு கொகைன் போதைப்பொருள் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது. பிரசாத், ஸ்ரீகாந்திற்கு 8 முறை கொகைன் சப்ளை செய்துள்ளதாகவும், இருவருக்கும் இடையே பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரையும் ஒன்றாக வைத்து விசாரிப்பதன் மூலம் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் போலீசார், ஸ்ரீகாந்த் மற்றும் பிரசாத் ஆகியோரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான மனுவை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.

Read More

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக கவன்ட்ரி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதற்கு முன்னதாக 12 ஆண்டுகள் பணியாற்றிய ஜெர்மனியை சேர்ந்த தாமஸ் பாச் விலகியதை அடுத்து, புதிய தலைவருக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் முன்னாள் நீச்சல் வீராங்கனை கிறிஸ்டி கவன்ட்ரி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 131 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க நாட்டவர் என்ற மகத்தான பெருமையை 41 வயதான கவன்ட்ரி பெறுள்ளார். இந்த நிலையில், ஐ.ஓ.சி. அமைப்பு உருவாக்கப்பட்ட தினமான நேற்று, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக கவுன்ட்ரி முறைப்படி பொறுப்பு ஏற்றுக் கொண்டார். சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடந்த விழாவில் கோல்டன் சாவியை முன்னாள் தலைவர் தாமஸ் பாச் அவரிடம் வழங்கினார். ”ஐ.ஓ.சி. சிறந்தவரின் கைக்கு சென்று இருப்பதாகவும், அவர் நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் செயல்படுவார்” என்றும் முன்னாள் தலைவர் தாமஸ் பாச் கூறியுள்ளார்.

Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (ஜூன் 25) மற்றும் மறுநாள் (ஜூன் 26) வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்யும் வகையில் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். முதலமைச்சரின் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டப் பயணம்: முக்கிய அம்சங்கள் ஜூன் 25 (செவ்வாய்க்கிழமை): காட்பாடி வருகை: சென்னையில் இருந்து ரயில் மூலம் புறப்பட்டு காட்பாடி செல்கிறார். வேலூரில் புதிய மருத்துவமனை துவக்கம்: அங்கிருந்து சாலை மார்க்கமாக வேலூர் சென்று, புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையைத் திறந்து வைக்கிறார். கலைஞர் சிலை மற்றும் அறிவாலயம் திறப்பு: மாலை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலை மற்றும் கலைஞர் அறிவாலயத்தைத் திறந்து வைக்கிறார். திருப்பத்தூரில் ரோட் ஷோ: சாலை மார்க்கமாகத் திருப்பத்தூர் செல்லும் வழியில் ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில்…

Read More

தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழிகளை புறக்கணித்து சமஸ்கிருதத்திற்கு அதிக அளவில் மத்திய பாஜக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் அம்பலமாகியுள்ளது. 2014-15 நிதியாண்டு மற்றும் 2024-25க்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.2532.59 கோடியை செலவிட்டுள்ளது. இது மற்ற 5 பாரம்பரிய இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகியவற்றிற்கான மொத்த செலவான ரூ.147.56 கோடியைவிட 17 மடங்கு அதிகம் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது, சமஸ்கிருதத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ரூ.230.24 கோடியும், தமிழ் உள்ளிட்ட மற்ற ஐந்து மொழிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூ.13.41 கோடியும் செலவு செய்துள்ளது மத்திய அரசு. இதில் தமிழ், சமஸ்கிருதத்தின் மொத்த நிதியுதவியில் 5% க்கும் குறைவாகவும், கன்னடம் மற்றும் தெலுங்கு தலா 0.5% க்கும் குறைவாகவும், ஒடியா மற்றும் மலையாளம்…

Read More

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறைகள் குறித்து கூடுதல் விளக்கம் தேவைப்பட்டால் அதை விளக்குவதற்கு தயாராக உள்ளதாகவும், அதற்கான தேதி மற்றும் நேரத்தை நீங்களே தேர்வு செய்து கூற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல் ஆணைய குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்ட்ர மாநில சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில் முதலாவதாக தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவை மத்திய அரசு மாற்றி அமைத்தது குறித்து கேள்வி எழுப்பினார். இரண்டாவதாக போலியான வாக்காளர்களை சேர்த்தது. மூன்றாவதாக வாக்கு சதவிதம் அதிகமானது. நான்காவதாக போலி வாக்குகள் அதிகரித்தது என குற்றஞ்சாட்டி இருந்தார். குறிப்பாக மகாராஷ்டிரா வாக்குச் சாவடிகளில் இருந்து மாலை 5 மணிக்குப் பிறகு அனைத்து சிசிடிவி காட்சிகளையும் வெளியிட வேண்டும்…

Read More

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, ட்ரூத் சோஷியல் சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டதாக கூறியுள்ள ட்ரம்ப், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளும் முடிந்தவுடன், சுமார் ஆறு மணிநேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தைத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, 12 மணிநேரத்தில் இஸ்ரேலும் போர்நிறுத்தத்தைத் தொடங்கும் என்றும் அடுத்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் – ஈரான் இடையிலான 12 நாள் போரின் முடிவு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப்பின் மற்றொரு பதிவில், போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்துவிட்டது என்றும், தயவு செய்து யாரும் அதை மீற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று இரவு கத்தார், சிரியாவில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள்…

Read More

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்து வருகிறார்கள். குறிப்பாக வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இலவச தரிசனத்திற்காக இரண்டு நாட்கள் பக்தர்கள் காத்திருக்கும் சூழலும் ஏற்படும். திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும் தேவைப்படுவோர் காசு கொடுத்து லட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். சாமி தரிசனம் செய்ய எப்படி காத்திருக்க வேண்டுமோ, அதேப் போல லட்டினை வாங்கவும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பர். இதனால் பக்தர்கள் அவதியடைகின்றனர். லட்டு வாங்கும் நேரத்த குறைக்கும் பொருட்டு, நடவடிக்கை எடுக்க வெண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது லட்டு டோக்கன் பெற க்யூ ஆர் கோடு முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கான பிரத்யேக எந்திரத்தில் க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்து விரைவாக…

Read More

இஸ்ரேல் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேலில் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியது. இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தினால், ஈரானும் தனது ராணுவ பதிலடியை நிறுத்திவிடும் என்று முன்னதாக அறிவித்திருந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, உடனடியாக ஈரான் போர் நிறுத்தம் செய்வதாகத் தெரிவித்துள்ளது. இந்த திடீர் போர் நிறுத்த அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த பதற்றத்தை சற்றே தணித்துள்ளது.

Read More