Author: Editor TN Talks
தேசிய புலனாய்வு முகமை (NIA) தமிழக அரபிக் கல்லூரிகளை குறிவைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அநீதியானதாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பதாகக் கூறி, அரபி மதரஸாக்கள் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வதாக என்ஐஏ மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவையைச் சேர்ந்த அரபிக் கல்லூரி முதல்வர் அகமது அலி, ஊழியர் ஜவஹர் சாதிக், சென்னை பாலவக்கத்தை சேர்ந்த ஷேக் தாவூத், திண்டுக்கல் பெரியகலையம்புத்தூரைச் சேர்ந்த ராஜா அப்துல்லா ஆகியோர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்தாண்டு இதே வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் மதரஸாக்களை குறிவைத்து என்ஐஏ அநீதமான முறையில் செயல்படுவதாக விமர்சனங்கள் எழுகின்றன. கைது செய்யப்பட்டவர்கள் கடந்த ஒரு வருடமாக என்ஐஏ விசாரணைக்கு…
சாலை மற்றும் மேம்பாலத் திட்டங்களில் தமிழ்நாடு புதிய வரலாற்றுப் படைக்கிறது. மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் பிரம்மாண்டமான சாலை மற்றும் மேம்பாலப் பணிகள், இந்தியாவின் நெடுஞ்சாலைத் துறையில் தமிழகத்தை ஒரு சிறந்த மாநிலமாக முன்னிறுத்துகின்றன. முக்கியத் திட்டங்கள் மற்றும் முதலீடுகள்: 9,620 கி.மீ. சாலைப் பணிகள்: ரூ.17,154 கோடி செலவில் 9,620 கி.மீ. நீளச் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டம்: இத்திட்டத்திற்காக ரூ.6,065 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றியச் சாலைகள்: 5,064.53 கி.மீ. நீளமுள்ள ஊராட்சி ஒன்றியச் சாலைகள் ரூ.4,907.17 கோடி செலவில் நிறைவு செய்யப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைப் பணிகள்: ரூ.4,061.71 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஓடுதளப் பாதைகள் மேம்பாடு: 6,805 கி.மீ. நீள ஓடுதளப் பாதைகள் ரூ.2,074 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. உயர்மட்டப் பாலங்கள்: 1,049 தரைப்பாலங்கள் ரூ.1,372 கோடி செலவில் உயர்மட்டப்…
கடந்த 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஹமாஸை அழிக்கும் வரை ஓயப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்த நிலையில், காசா மீது இஸ்ரேல் ஒரு வருடத்திற்கும் மேலாகப் போர் தொடுத்து வருகிறது. இந்தச் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காகக் கொண்டு 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசித் தாக்கியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. இதன்பின்னர் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணிந்திருந்த நிலையில், திடீரென “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த 13-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இது ஈரானின் அணு ஆயுதப் பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் என இஸ்ரேல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டதால், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. …
வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அய்யன் வள்ளுவர் அரங்கில் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கியமைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சின் முக்கிய அம்சங்கள்: உணர்ச்சிபூர்வமான நாள்: முதலமைச்சர் ஸ்டாலின், இந்த விழாவுக்காக மட்டுமல்லாமல், இந்த இடத்திற்காகவும் தனக்கு உணர்ச்சிபூர்வமான நாள் என்று கூறினார். மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்து பாராட்டு விழா நடத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். கலைஞருக்கும் வள்ளுவர் கோட்டத்திற்கும் அஞ்சலி: தனது தந்தை முத்தமிழறிஞர் கலைஞருக்குத் திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் தீராத காதல் இருந்ததை எடுத்துரைத்தார். பேருந்துகளில் திருக்குறளை இடம்பெறச் செய்தவர், 1971 ஆம் ஆண்டு முதலமைச்சரான போது தமிழறிஞர்கள் கணித்த திருவள்ளுவர் ஆண்டை அரசாணையாக வெளியிட்டவர், குமரி முனையில் சமத்துவத்தை வலியுறுத்தும் வள்ளுவருக்கு சிலை வைத்தவர் கலைஞர் எனப் பாராட்டினார்.…
சென்னை தி நகர் உள்ள சார் பிடி தியாகராயர் அரங்கில் சமூக நீதி பேரவை சார்பில் பெரியாரின் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். மருத்துவர் ராமதாஸ் மற்றும் வே.ஆனைமுத்து ஐயா அவர்கள் வி பி சிங்கை சந்தித்து வேலைவாய்ப்பில் OBC மக்கள் இட ஒதுக்கீடு காக்க பேசினர். அதன் அடிப்படையில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்தது. 2006 மத்தியில் கூட்டணி ஆட்சியில் பாமக அங்கமாக இருந்தோம் அதனால் தான் பட்டியலின மக்கள் கோரிக்கை நிறைவேற்ற முடிந்தது. தமிழகத்தில் எவ்வளவோ சிக்கல் உள்ளது. ஆட்சி அதிகாரம் கொடுத்தால் அன்றாடம் ஒரு கையெழுத்து போட்டு எவ்வளவோ சாதிக்க முடியும். தற்போது உள்ள ஆட்சியில் திமுக அரசிற்கு அதிகாரம் உள்ளது ஆனால் இல்லை என எஸ் ஜே சூர்யா திரைப்படத்தில் வந்தது போலதான் உள்ளது திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டி திமுகவில் விமர்சித்தார் பின்னர் தொடர்ந்து…
வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வால்பாறை தனித்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அமுல் கந்தசாமி. அதிமுக மீதும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும் மிகுந்த பற்று கொண்டவர். அதிமுகவில் ஓபிஎஸ் தலைமையில் ஒருசிலர் இபிஎஸ்-க்கு எதிராக நின்றபோது, அமுல் கந்தசாமி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டார். சட்டமன்றத்தில் ஒவ்வொரு முறையும் பேசத் தொடங்கும்போது வாழும் வழிகாட்டியே என்று இபிஎஸ்-ஐ குறிப்பிட்டு பேசுவது இவரது வழக்கம். தொகுதி மக்களுடன் இரண்டற கலந்து பழகும் குணம், உதவும் உள்ளம் என்று நல்ல பெயரை பெற்றிருந்தார் அமுல் கந்தசாமி. சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அமுல் கந்தசாமியின் உயிர் பிரிந்தது.
தனது கதையை திருடி “ஹிட் 3” திரைப்படம் தயாரித்துள்ளதாக விமல் என்பவர் தொடர்ந்த வழக்கில் நடிகர் நானி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியை சேர்ந்த கே. விமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2022ம் ஆண்டு தனது “ஏஜென்ட் 11” என்ற கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளார். சைக்கோ கில்லர் கதையை மையமாக வைத்து திரைப்படமாக எடுக்க பிரபல நடிகர் நானியின் நிறுவனத்துக்கு 2022ம் ஆண்டு கதையை ஈமெயில் மூலம் அனுப்பியுள்ளார். பின்னர், அதே ஆண்டு கதையை “ஏஜென்ட் வி” என்ற பெயரில் நாவலாகவும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இயக்குநர் சைலேஷ் கொலனு, நடிகர் நானியை நாயகனாக வைத்து “ஹிட் 3” என்ற சைக்கோ கில்லர் கதையை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க இருப்பதாக 2022ம் ஆண்டு அறிவித்தார். இந்நிலையில், ஹிட் 3 திரைப்படம்…
விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை.. முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு…
விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை என்றும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாழ்த்துகள் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு அமைப்பும் அவரவர் விருப்பப்படி தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை என்றார். அந்த அடிப்படையில் ஜனநாயக நாட்டில் அவரவர் விரும்புகின்ற கடவுள்களை இன்றைக்கு மாநாட்டின் மூலமாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மதுரையில் மாநாட்டை நடத்துகின்றனர். அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்றார். ஆங்கிலம் குறித்து அமித்ஷா அவருடைய கருத்தை சொல்லி உள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு, தாய்மொழி என்பது முக்கியம். அனைவருக்கும் தாய்மொழி என்பது முக்கியம். தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தி தான் இதனை சொல்லி உள்ளார் என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேல் ஈரான் இடையே தற்பொழுது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையை அங்குள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதற்காக புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24×7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதவி எண்கள் பின்வருமாறு: தொலைபேசி: 011 24193300 (Land line) கைப்பேசி எண்: 9289516712 (Mobile Number with Whatsapp) மின்னஞ்சல் : tnhouse@tn.gov.in, procofficetnh@gmail.com
தேர்தலுக்கு நிர்வாகிகளை தயார்ப்படுத்தும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி வருகிறார். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற ஒன் டூ ஒன் சந்திப்பு கூட்டத்தில் கிருஷ்ணகிரி, அணைக்கட்டு, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கட்சிப் பொறுப்புகளில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உழைப்பவர்களுக்கு அதற்கு ஏற்ற அதிகாரம் கட்சியில் நிச்சயம் கிடைக்கும். திமுக அரசின் மக்கள் நல திட்டங்களை பொதுமக்களிடம் அதிகம் எடுத்துச் செல்ல வேண்டும். ஒற்றுமையுடன் பணியாற்றி 200 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.