Close Menu
    What's Hot

    ‘தி ஒடிஸி’ பிரீமியர் விழா! மும்பை வந்த கிறிஸ்டோபர் நோலன்!

    2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை!. உடலில் மின்சாரத்தை செலுத்தி விபரீத முடிவு!.

    “தமிழகத்திற்குப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது” – மீண்டும் திட்டவட்டமாகக் கூறிய கர்நாடகா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»கதை திருட்டு வழக்கு.. நடிகர் நானிக்கு நோட்டீஸ்
    சினிமா

    கதை திருட்டு வழக்கு.. நடிகர் நானிக்கு நோட்டீஸ்

    Editor TN TalksBy Editor TN TalksJune 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1500x900 1830207 nani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தனது கதையை திருடி “ஹிட் 3” திரைப்படம் தயாரித்துள்ளதாக விமல் என்பவர் தொடர்ந்த வழக்கில் நடிகர் நானி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தென்காசியை சேர்ந்த கே. விமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2022ம் ஆண்டு தனது “ஏஜென்ட் 11” என்ற கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளார்.

    சைக்கோ கில்லர் கதையை மையமாக வைத்து திரைப்படமாக எடுக்க பிரபல நடிகர் நானியின் நிறுவனத்துக்கு 2022ம் ஆண்டு கதையை ஈமெயில் மூலம் அனுப்பியுள்ளார். பின்னர், அதே ஆண்டு கதையை “ஏஜென்ட் வி” என்ற பெயரில் நாவலாகவும் வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில் இயக்குநர் சைலேஷ் கொலனு, நடிகர் நானியை நாயகனாக வைத்து “ஹிட் 3” என்ற சைக்கோ கில்லர் கதையை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க இருப்பதாக 2022ம் ஆண்டு அறிவித்தார்.

    இந்நிலையில், ஹிட் 3 திரைப்படம் 2025 மே மாதம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியானது. திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வருமானம் 100 கோடியை எட்டியுள்ளது. முதல் நாள் காட்சி மூலம் 43 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. நெட்பிலிக்ஸ் ஓ.டி.டி தளத்திலும் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

    தன்னுடைய கதையை மையமாக வைத்து ஹிட் 3 திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனால், தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும். திரைப்படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 20 சதவிதிதத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஹிட் 3 படத்தின் நாயகன் நானி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நெட்பிலிக்‌ஷ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 07ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை.. முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு…
    Next Article வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு
    Editor TN Talks

    Related Posts

    ‘தி ஒடிஸி’ பிரீமியர் விழா! மும்பை வந்த கிறிஸ்டோபர் நோலன்!

    July 10, 2026

    இரா. செழியன்: எதார்த்த சினிமாவின் தனித்துவ அடையாளம்!

    July 10, 2026

    தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா.செழியன் காலமானார்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!

    July 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘தி ஒடிஸி’ பிரீமியர் விழா! மும்பை வந்த கிறிஸ்டோபர் நோலன்!

    2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை!. உடலில் மின்சாரத்தை செலுத்தி விபரீத முடிவு!.

    “தமிழகத்திற்குப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது” – மீண்டும் திட்டவட்டமாகக் கூறிய கர்நாடகா!

    40 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றுப் பயணம்: நியூசிலாந்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

    அரசுப் பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை!- பள்ளித் தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.