Author: Editor TN Talks
கோவை, சின்னியம்பாளையம் பகுதியில் அவினாசி சாலையை ஒட்டிய இடத்தில் ’ஸ்ரீ பிளாக் மாரியம்மன்’ என்ற திருக்கோயில் அமைந்து உள்ளது. இன்று(18.06.2025) காலை கோயில் பூசாரி கோயிலை திறக்க வந்த போது கோயிலில் உள்ள விநாயகர், இராகு, கேது, எலி வாகனம் உள்ளிட்ட சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்தான தகவல் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பரவியது. இதனை அடுத்து ஏராளமான பொதுமக்கள் கோயிலில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன், சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார்கள். கோயிலை சுற்றி உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பாதுகாப்பிற்காக கோயிலில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் துறை சார்பான ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இன்று பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை, மனிதவள மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் கைத்தறித்துறை சார்பான ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை, செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஒவ்வொரு துறை சார்பான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது
தூத்துக்குடி தெற்கு அதிமுக பகுதிச் செயலாளர் S.P.S ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தெற்கு பகுதிக் கழகச் செயலளர் S.P.S.ராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” என கேட்டுக் கொள்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் தான்…
விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ”தளபதி விஜய் பயிலகம்” என்ற இரவு நேர பாட சாலை திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விஜய் உதவித் தொகை வழங்கி வருகிறார். 2023-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தளபதி விஜய் பயிலகம் தொடங்க, விஜய் மக்கள் இயக்கத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி தமிழ்நாடு முழுவதும் இரவு நேர பாடசாலை திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வடசென்னை கிழக்கு மாவட்ட ஆர்.கே.நகர் பகுதியில் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக தளபதி பயிலகம் செயல்பட்டு வருகிறது. இன்று(18.06.2025) காலை திமுக நிர்வாகிகள் மற்றும் போலீசார் அந்த பயிலகத்தை மூட முயற்சித்ததாக கூறப்படுகிறது. திமுக நிர்வாகி ஒருவரின் தூண்டுதலினால் தளபதி பயிலகத்தை மூட முயற்சிப்பதாக தவெக…
அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்குகள் விசாரணையை துவங்கும் முன் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு ஒன்றை முன் வைத்தார். அதில் அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் முடிவெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலளிக்குமாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாணையின் படி 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலிக்காததால் ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என சுட்டிக்காட்டினார். நாளை பொதுநல வழக்குகள் விசாரணைக்கு வரும் போது 30 நாட்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்கப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய்…
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் முதல் கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னையில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், அடிப்படையான குடிநீர் தேவையும் உயர்ந்து வருகிறது. தற்போதைய சூழலில் சென்னையில் தினசரி 1,100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. பொது மக்கள் பயன்பாட்டுக்கு லாரிகள் வழியாகவும், வீடுகளுக்கு குழாய் வழியாகவும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் முதல் கட்டமாக 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்களை சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் இணைந்து அமைத்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரி பகுதிகள், மார்க்கெட் பகுதிகள் என்று 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் அமைக்கும்…
திருத்தணி சிறுவன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஏ.டி.ஜி.பி ஜெயராமனைக் கைதுசெய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து நாளைய தினத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் காளம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் தனுஷ். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் பெற்றோர், மகேஸ்வரி என்பவரின் உதவியுடன் மகளை மீட்க முயற்சி மேற்கொண்டனர். இதற்கு ஆயுதப்படை ஏடிஜிபியான ஜெயராமனை மகேஸ்வரி தொடர்பு கொண்டுள்ளார். அவர் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கேவி குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தியை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். அவர் தனது வழக்கறிஞர் சரத் என்பவரை அனுப்பி உள்ளார். இவர்கள் அனைவரும் ஏடிஜிபியின் அதிகாரபூர்வ வாகனமான TN06 G 0606…
ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்றைய தினம் (18.06.2025) சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது எஞ்சின் சக்கரத்திலிருந்து பயங்கர சத்தம் கேட்டது. ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்துவதற்காக எஞ்சின் வேகத்தை வேகமாக கட்டுப்படுத்தினார். அப்போது ரயில் எஞ்சின் பழுதடைந்து. இதன் காரணமாக ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. ஓட்டுநர் ரயிலில் இருந்து இறங்கி பார்த்தபோது தண்டவாளத்தின் குறுக்கே பெரிய இரும்பு வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ரயில்வே போலீசார், மற்றும் பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரயில் எஞ்ஜினில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முயன்றனர். பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது சம்மந்தமாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு…
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக எர்ணாகுளம் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது. பல இடங்களில் நிலச்சரிவு, மண் சரிவு, மரங்கள் விழுவது, கட்டிடங்கள் இடிந்து விழுவது என தொடர்பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த நிலையில் எர்ணாகுளம் மாவட்டம் கண்ணமலை செல்லானம் பகுதியில் கனமழை காரணமாக கடல் சீற்றம் மற்றும் கடல் அலையால் ஏற்பட்ட அரிப்பால் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்தது. கண்ணமாலையில் மட்டும் சுமார் 50 வீடுகள் சேதமடைந்தன. ஒரு சில வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியது. வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம் அடைந்தன. பலர் உறவினர் வீடுகளுக்கும் வாடகை வீடுகளுக்கும் இடம்பெயர்ந்து உள்ளனர். வயதானவர்கள், நோயாளிகள் என…
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை இன்று அமெரிக்க அதிபர் சந்திக்க உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டதை விட முன்னதாகவே டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா திரும்பியதால் இவருடையேயான சந்திப்பு நடக்கவில்லை. இந்த நிலையில் 35 நிமிடம் இரண்டு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசியுள்ளனர். ஏப்ரல் 22 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளது. மே 6–7 இரவு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே இந்தியா குறிவைத்தது என்பதை பிரதமர் மோடி விளக்கியுள்ளார். இந்தியாவின் நடவடிக்கைகள் துல்லியமானவை எனவும், பாகிஸ்தானில் இருந்து வரும் எந்தவொரு துப்பாக்கிச் சூடும் இந்தியாவிலிருந்து வலுவான பதிலடி கொடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…