Author: Editor TN Talks
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொடர்ந்த தேர்தல் வழக்கில் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து ஏற்கனவே அளிக்கப்பட்ட விலக்கை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தேர்தல் பத்திரத்தில் சில தரவுகளை சொல்ல மறந்ததாகவும், சில தரவுகளை தவறாக சொன்னதாகவும் தேர்தல் ஆணையத்தால் தொடரப்பட்ட வழக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றின் முன்னிலையில் விசாரணையில் உள்ளது. அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும், அந்த வழக்கு தவறான வழக்கு என்றும், அந்த வழக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தும், கே சி வீரமணி நேரில் ஆஜராவதில் இருந்து…
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் எந்த அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது? என அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் முறைகேடு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இந்நிலையில், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், சீலை அகற்ற வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் , வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், டாஸ்மாக் முறைகேட்டுக்கும்…
ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் அதிகாலை நடத்திய திடீர் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இந்நிலையில் இன்று அதிகாலை ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் திடீரென்று வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. இதில் கட்டிடங்கள் பல சேதமடைந்தன. அந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உயர் ஆலோசகர் அலி ஷம்கானியும் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் தங்களை தாக்கும் என்று உளவுத்துறை தகவல் கிடைத்தாகவும் அவ்வாறு இஸ்ரேல் தாக்கினால் அந்நாட்டின் ரகசிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அழிப்போம் என்றும் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) கடந்த திங்கள்கிழமை தெரிவித்தது. இந்த…
உலககோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளன. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 3 நாடுகளில் 16 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 48 நாடுகள் இதில் பங்கேற்க உள்ளன. இதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகிறது. போட்டியை நடத்தும் நாடுகள் தவிர எஞ்சிய நாடுகள் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்றே பங்கேற்க முடியும். இதுவரை நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் ஆசிய கண்டத்தில் இருந்து ஜப்பான், ஈரான், தென்கொரியா, உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் ஆகிய நாடுகள் தேர்வாகி உள்ளன. சவுதி அரேபியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் தேர்வாகி உள்ளது. அந்த கண்டத்தில் இருந்து நியூசிலாந்தும் உலக கோப்பையில் களம் காண்கிறது. தென்அமெரிக்க நாடுகளில் இருந்து நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, 5 முறை உலக கோப்பையை வென்றுள்ள பிரேசில், ஈகுவடார் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. உலக கோப்பை தொடரின் தொடக்கப் போட்டி உள்பட…
ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,295-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தையும், இந்தியர்களையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு இரண்டற கலந்த ஒன்று. தங்கள் சேமிப்பை தங்கமாக மாற்றும் பழக்கம், தொன்றுதொட்டு இருந்து வருகிறது. உலகின் வேறேந்த நாட்டை விடவும் அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது இந்தியா. அதனால் தான் இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இன்று தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,295-க்கு…
சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழக டி.ஜி.பி மற்றும் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதன்படி, பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தாமாக முன் வந்து எடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக டி.ஜி.பி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு வழக்கு தொடர்பான…
241 பேரை பலிகொண்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றடைந்தார். அகமதாபாத்தில் இருந்து லண்டனின் காட்விக் விமான நிலையத்திற்கு செல்ல இருந்த ஏர்இந்தியா 171 ரக விமானம் நேற்று நண்பகல் விபத்துக்குள்ளானது. சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நொடிகளிலேயே அருகில் உள்ள மேகானி என்ற குடியிருப்பில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. மேலும் அங்கிருந்த பி.ஜே.மருத்துவமனையின் உணவு விடுதி கட்டிடத்தின் மீது மோதி தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 12 விமான ஊழியர்கள், 168 இந்தியர்கள், 53 இங்கிலாந்து நாட்டினர், 7 போர்ச்சுக்கல் நாட்டினர், கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். என்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் – விஜய்…
காசாவில் உடனடி போர்நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யக் கோரும் தீர்மானம், ஐநா சபையில் நிறைவேறியது. இதில் 149 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இஸ்ரேல், அமெரிக்கா உட்பட 12 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் வாக்களிக்கவில்லை. பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக காசா பகுதியில் பச்சிளம் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் உணவின்றி வாடி வருகின்றனர். அவர்களுக்கு உதவ உலகநாடுகள் முன்வந்துள்ளன. இதையொட்டி ஐநா சபையில் போர்நிறுத்தம் தொடர்பாக தீர்மானம் நிறைவேறியது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு.. பொதுமக்கள் பட்டினி கிடக்க வைப்பது மற்றும் மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படுவது கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல், உடனடியாக முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும், அனைத்து எல்லை தடுப்புகளை திறக்கவும், பாலஸ்தீன பொதுமக்கள் அனைவருக்கும் உதவி உடனடியாகவும், பெரிய அளவிலும் சென்றடைவதை உறுதி செய்யவும் கோரப்பட்டுள்ளது. காசா பாலஸ்தீன அரசின்…
தன்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக பெற்றோர் – ஆசிரியர்கள் குறித்து பேசுங்கள் என்றும் மாணவர்களை நடிகரும் தவெக தலைவருமான விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதிவாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை நேரில் அழைத்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் பரிசு வழங்கி பாராட்டி வருகிறார். முதல்கட்டமாக கடந்த 30-ந் தேதியும், கடந்த 4-ந் தேதி இரண்டாம் கட்டமாகவும் இந்த விழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை அழைத்து பரிசு வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டு மதிய உணவு விருந்தளித்து பாராட்டினார். இதன் மூன்றாம் கட்ட விருது விழா, இன்று (13/6/25) மாமல்லபுரத்தில் ஷெரட்டன் ஓட்டலில் நடைபெறுகிறது. என்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் – விஜய் வேண்டுகோள்#VIJAYHonorsStudents#தமிழகவெற்றிக்கழகம் #thalapathyvijay #thalapathy…
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளின் திமுக நிர்வாகிகளை, தொகுதிவாரியாக சந்தித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். உடன்பிறப்பே வா என்ற பெயரில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கி சில வாரங்களுக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தொகுதிக்குள் இருக்கும் பிரச்னைகள், கட்சி நிர்வாகிகளுக்குள் இருக்கும் மனக்கசப்புகள், எதிர்கட்சிகளின் வியூகங்கள், கடந்த தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் நிலைமை போன்றவை குறித்து நேருக்கு நேராக கேட்டு அறிகிறார். ஒருவேளை சம்பந்தப்பட்ட தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யும்பட்சத்தில் சுணங்கி விடாமல் வெற்றிக்கனியை பறிக்க முழு முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். எதிர்வரும் தேர்தலில் 200 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வியூகங்களை வகுத்து செயலாற்றி…