Author: Editor TN Talks
சட்டத்திற்கு புறம்பாக போதைப் பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது போதைப் பொருள் புழக்கம் தான். நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் கோலிவுட்டில் மிகப்பெரிய பேசுப் பொருளாக இருந்து வருகிறது. இதுகுறித்து மூத்த நடிகர்களும் திரைப்பிரபலங்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இன்னும் பல நட்சத்திரங்கள் இந்த சிக்கலில் மாட்டுவார்கள் என விவரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், யார் போதைப் பொருட்கள் பயன்படுத்தினாலும் தவறு தான் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். சித்தார்த், சரத்குமார், தேவையானி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 3பி.எச்.கே. இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் மாரி…
நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் தேர் திருவிழாவில் சாதிய அடையாளங்களை பறைசாற்றும் வண்ண ரிப்பன்கள், வாண வேடிக்கைகள் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது.. சாதி ரீதியான படுகொலை திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பொது இடங்களில் சாதி ரீதியான அடையாளங்களை வெளிப்படுத்துவது தான் மூல காரணமாக இருந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் தேர் திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது இந்த திருவிழா வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் கலந்து கொள்கின்றனர். இந்த திருவிழாவில் வருடா வருடம் சாதிரீதியான வண்ணங்களை கொண்ட பட்டாசுகள் வெடிக்க செய்வதும், பல்வேறு சமுதாய தலைவர்களை வாழ்க வாழ்க…
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சில முக்கிய சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில், வனத்துறையின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பில்லர் ராக் (Pillar Rock), குணா குகை (Guna Cave), பைன் பாரஸ்ட் (Pine Forest), மோயர் பாயிண்ட் (Moir Point), பேரிஜம் ஏரி (Berijam Lake) ஆகிய இடங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை விளக்கமளித்துள்ளது. யானைகளின் நடமாட்டம் சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்த ஆட்டோ இருந்தால் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் என்று கோரிக்கை வைத்த பெண்ணுக்கு சொந்த ஆட்டோ வாங்கி தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி. கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த அமலா என்ற பெண் ஆட்டோ ஓட்டுநர் தான் வாடகை ஆட்டோ ஓட்டி பிழைப்பதாகவும், தன்னைப்போன்ற பலரும் அதேபோன்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இதை கவனித்த ஆளுநர் அந்த பெண்ணின் கோரிக்கையை பரிசீலித்து தனது நிதியிலிருந்து ஒரு ஆட்டோ வழங்க உத்தரவிட்டார். இன்று அந்த பெண்ணை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்த ஆர்.என்.ரவி, ஆட்டோவை ஆளுநர் வழங்கினார். அதுமட்டுமல்லாது அந்த ஆட்டோவில் பள்ளி மாணவ மாணவிகளுடன் அவர் சிறிது தூரம் பயணித்தார். ஒரு பெண் வைத்த சாதாரண கோரிக்கை என்று கடந்து செல்லாமல், தமிழில் பேசியதைகூட கவனித்து தன்னை…
வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தத் திட்டம் உழவர்களை மேலும் துயரங்களுக்கு ஆளாக்கும் என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நீர்வளத்துறை, இந்தியா முழுவதும் வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. உழவர்களின் துயரங்களையும், நெருக்கடிகளையும் புரிந்துகொள்ளாமல் இத்திட்டத்தை செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். திட்டத்தின் விவரங்கள்: நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தின்படி, மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நீர் பயன்பாட்டாளர்கள் அமைப்புகளின் மூலம் நிலத்தடி நீர் மையப்படுத்தப்பட்ட பகுதிகளில் சேமித்து வைக்கப்படும். அந்த நீர் அழுத்தத்தைப் பயன்படுத்தி உழவர்களின் வேளாண் பயன்பாட்டுக்காக அனுப்பப்படும்…
காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய சம்பவத்தில் பூவை ஜெகன் மூர்த்தி தான் மூளையாக செயல்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் காளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று, பின்னர் இரவு பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தனுஷின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே வி குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்தனர். இந்த நிலையில், தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என…
விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு தனி வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிலத்தடி நீர் வீணாவதையும்,தவறாகபயன்படுத்துவதையும் குறைக்க, மத்திய அரசு விவசாய நோக்கங்களுக்காக நீர் பயன்பாட்டிற்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு விரைவில் பல்வேறு மாநிலங்களில் 22 முன்னோடித் திட்டங்களைத் தொடங்கவுள்ளது. இந்த முயற்சியின் கீழ், விவசாயிகள் போதுமான தண்ணீரைப் பெறுவார்கள், மேலும் அதன் பயன்பாட்டின் அடிப்படையில் வரி விதிக்கப்படும்.
சினிமாத் துறையில் உலக அளவில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது விழா. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமாக இவ்விழா நடைபெறும். அந்த வகையில், 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்தாண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும். நிகழ்ச்சியை கோனன் ஓ பிரையன் தொகுத்து வழங்குவார் எனவும், விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி 22-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள இந்திய திரைத்துறையில் இருந்து நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றிய 534 கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா, கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரன்வீர்தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்பட இயக்குநர் பாயல் கபாடியா ஆகியோருக்கும் இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டை ஒட்டிய யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட நிலையில் இதுவரை 16 முறை சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இதுவரை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை. இந்நிலையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி டெல்லி ஜந்தர் மந்திரில் புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் நேரு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வரங்கப்படவில்லை என்றால் போராட்டத்தை தீவுரப்படுத்தப்போவதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர் அதேபோல, மாநில அந்தஸ்து விவகாரம் தொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த ஒரு லட்சம் மக்களிடம் கையெழுத்து பெற்றுள்ள…
கோவையில் சரக்கு ஆட்டோமோதி 13 வயது பள்ளி சிறுமி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை அறிவொளி நகரை சேர்ந்தவர்கள் பாலன் -சாவித்ரி தம்பதி. சாவித்ரி தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது 13-வது மகள் சௌமியா, கோவை செம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதற்காக அதே பகுதியில் உள்ள அவரது பாட்டி சரோஜினி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார் சௌமியா. வழக்கம் போல பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்கு சென்றவர், அங்கிருந்து தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ சிறுமி மீது மோதியது. அத்தோடு சிறுமியை சிறிது தூரம் இழுத்து சென்று அருகேயுள்ள கல்லில் மோதியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பெரியகடைவீதி போலிசார் சிறுமியின் உடலை மீட்டு கோவை அரசு…