Close Menu
    What's Hot

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டம்: கைவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
    தமிழ்நாடு

    நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டம்: கைவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தத் திட்டம் உழவர்களை மேலும் துயரங்களுக்கு ஆளாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

     

    மத்திய அரசின் நீர்வளத்துறை, இந்தியா முழுவதும் வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. உழவர்களின் துயரங்களையும், நெருக்கடிகளையும் புரிந்துகொள்ளாமல் இத்திட்டத்தை செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

     

    திட்டத்தின் விவரங்கள்:

     

    நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தின்படி, மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நீர் பயன்பாட்டாளர்கள் அமைப்புகளின் மூலம் நிலத்தடி நீர் மையப்படுத்தப்பட்ட பகுதிகளில் சேமித்து வைக்கப்படும். அந்த நீர் அழுத்தத்தைப் பயன்படுத்தி உழவர்களின் வேளாண் பயன்பாட்டுக்காக அனுப்பப்படும் வசதிகள் செய்யப்படும். அங்கிருந்து உழவர்கள் தங்களுக்குத் தேவையான நிலத்தடி நீரைப் பெற்றுக்கொள்ளலாம். எவ்வளவு நீரை உழவர்கள் பெறுகிறார்களோ, அவ்வளவு நீருக்கு வரி விதிக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். இத்திட்டம் சோதனை அடிப்படையில் பல மாநிலங்களில் 22 இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    அடிப்படையிலேயே தவறான திட்டம்:

    “உழவர்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து எடுக்கும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படுமா? வரியின் அளவு எவ்வளவாக இருக்கும்? என்பதெல்லாம் தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும், நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் தத்துவம் அடிப்படையிலேயே தவறானது,” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    நிலத்தடி நீர் வீணாவதைத் தடுக்கும் வகையில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலளித்த அன்புமணி ராமதாஸ், “அரும்பாடு பட்டு நிலத்தடி நீரை எடுக்கும் எந்த உழவரும் அதை வீணாக்க மாட்டார்கள். நிலத்தடி நீர் வீணாவதைத் தடுக்க அரசு நினைத்தால், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், நிலத்தடி நீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் உழவர்களுக்கு வெகுமதிகளைக் கொடுத்து ஊக்குவிப்பதும் தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். வரி விதிப்பது சரியானதாக இருக்காது. அது ஏற்கனவே வாடிக்கொண்டிருக்கும் உழவர்களை மேலும் வாட்டும்,” என்று கூறியுள்ளார்.

    பாமகவின் தொடர் எதிர்ப்பு:

    நிலத்தடி நீர், குடிநீர் உள்ளிட்டவற்றுக்கு வரியும், கட்டணமும் விதிப்பதற்கான முயற்சிகள் கடந்த 15 ஆண்டுகளாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அன்புமணி ராமதாஸ் நினைவுபடுத்தினார். தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் 2012-ஆம் ஆண்டில் தண்ணீர் கொள்கை வெளியிடப்பட்டது. அப்போதே அதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது என்றும், பின்னர் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு 2018, 2022 ஆகிய ஆண்டுகளிலும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயன்ற போதும், ஒவ்வொரு முறையும் பாமக அதைத் தீவிரமாக எதிர்த்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இனியும் இதே நிலையே தொடரும் என்று உறுதிபடத் தெரிவித்த அன்புமணி ராமதாஸ், “விளைபொருள்களுக்கு போதிய விலை கிடைக்காதது, உரங்களின் விலை உயர்வு, சந்தை வசதிகள் இல்லாதது என ஏற்கனவே பல வகைகளில் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நிலையில் வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதித்து உழவர்களை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கக் கூடாது. அத்தகைய ஆபத்தான திட்டத்தை தொடக்க நிலையிலேயே மத்திய அரசு கைவிட வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.

    AIADMK alliance BJP Communist Parties congress dmdk DMK Elections Indian Politics Leaders MDMK Naam Tamilar Katchi PMK Tamil Nadu Politics அதிமுக இந்திய அரசியல் கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் திமுக தேமுதிக தேர்தல் நாம் தமிழர் கட்சி பாமக பாஜக மதிமுக
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிறுவன் கடத்தல் – ஜெகன் மூர்த்தி தான் மாஸ்டர் மைண்ட்..
    Next Article பெண் ஆட்டோ ஓட்டுநர் வைத்த கோரிக்கை… நிறைவேற்றிய ஆளுநர்…
    Editor TN Talks

    Related Posts

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    May 31, 2026

    ஆலங்குளம் தாக்குதல்: காவல்துறை மீது ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!

    May 31, 2026

    கோடை விடுமுறை முடிவு!. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!. பயணிகள் கடும் அதிர்ச்சி!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    “கடும் வெயில்; கவனமா இருங்க “- மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

    ஆலங்குளம் தாக்குதல்: காவல்துறை மீது ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026

    “கடும் வெயில்; கவனமா இருங்க “- மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.