Close Menu
    What's Hot

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»யார் செய்தாலும் தப்பு தான்… மாரி செல்வராஜ் ஓபன் டாக்…
    சினிமா

    யார் செய்தாலும் தப்பு தான்… மாரி செல்வராஜ் ஓபன் டாக்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    14 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டத்திற்கு புறம்பாக போதைப் பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஒரு வாரமாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது போதைப் பொருள் புழக்கம் தான். நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் கோலிவுட்டில் மிகப்பெரிய பேசுப் பொருளாக இருந்து வருகிறது.

    இதுகுறித்து மூத்த நடிகர்களும் திரைப்பிரபலங்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இன்னும் பல நட்சத்திரங்கள் இந்த சிக்கலில் மாட்டுவார்கள் என விவரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், யார் போதைப் பொருட்கள் பயன்படுத்தினாலும் தவறு தான் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    சித்தார்த், சரத்குமார், தேவையானி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 3பி.எச்.கே. இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், போதைப்பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சிறிய பட்ஜெட் படங்கள் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, மக்களுக்கு கனெக்ட் ஆகும் படங்கள் கட்டாயம் ஓடும் என பதில் அளித்தார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், ‘மிஸ் யூ’ படத்தை தொடர்ந்து ‘3 பிஎச்கே’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது. மறுபுறம் மாரிசெல்வராஜ், நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் ‘பைசன்’ படத்தை இயக்கியுள்ளார். அடுத்ததாக தனுஷின் ”டி56” என்ற படத்தை இயக்க உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநெல்லையப்பர் கோயில் தேர் திருவிழா.. சாதிய அடையாளங்கள் கூடாது என நீதிமன்றம் உத்தரவு…
    Next Article மு.க.ஸ்டாலின் விழாவில் விஜய் படத்தை காண்பித்த மாணவர்கள்…
    Editor TN Talks

    Related Posts

    தனுஷின் அரசியல் வருகை.. திமுக, அதிமுகவின் எதிர்காலம் குறித்து பரபரப்பு கணிப்பு!

    July 29, 2026

    மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன்..!  சைக்கிள் வழங்கி நெகிழ்ச்சி..!

    July 29, 2026

    பூங்காவனம் நியாபகமிருக்கா..?? பிரபல ‘திருமதி செல்வம்’ சீரியல் நடிகர் ஜெயமணி காலமானார்..!!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!

    வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.