Author: Editor TN Talks
ரயிலில் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம்… மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.. ரயிலில் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. இந்திய இரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள இரயில் கட்டணங்களும் – குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது. மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் அவர்களையும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது… AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க…
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”வெறும் ஜாதி அரசியலையும், மத அரசியலையும், ஜாதி பெருமிதங்களையும், மத பெருமிதங்களையும் அரசியலாக இங்கு மக்கள் மத்தியில் அள்ளி இறைத்து கொண்டு இருப்பவர்கள் மத்தியில், இடதுசாரி பார்வை கொண்ட கருத்தியல், இந்த மண்ணுக்கு தேவை. தேசிய அளவில் அது வலிமை பெற வேண்டும். அதற்கு தேசிய பார்வையும் தேவை என்கிற அடிப்படையில் இயங்கும் இயக்கம் தான் விடுதலை சிறுத்தை கட்சி. அதனால் தான் எல்லோரும் தேர்தல் கணக்கு போடுகிற போது, நாம் தேசத்தின் பாதுகாப்பை பற்றி, கவலைப்பட்டு கொண்டு இருக்கிறோம். பேரணி நடத்தி கொண்டு இருக்கிறோம். எத்தனை இடங்களில் நீங்கள் போட்டியிட போகிறீர்கள் என்று திரும்ப, திரும்ப கேள்வி கேட்கிறார்கள். பாவம் அவர்களுக்கு இன்னும் சிறுத்தைகளை மதிப்பிட தெரியவில்லை. திருமாவளவனை மதிப்பிட செய்ய முடியவில்லை என்பது தான் என்னுடைய பார்வை. ஏதோ திருநீற்றை அழித்துவிட்டான் திருமாவளவன்…
சமீபகாலமாக படிப்பு என்றாலே மாணவர்களுக்கு அச்சம் அதிகரித்து வருகிறது. அத்தோடு படிக்கச் சொன்னாலோ, அல்லது செல்போனில் கேம் விளையாட வேண்டாம் என்றாலோ தற்கொலை செய்து கொள்வதும், விபரீத செயல்களில் ஈடுபடுவதாக பல சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் நெல்லையில் கல்லூரிக்கு போக சொன்ன தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தங்கப்பாண்டி(19) பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும், ஆகையால் கல்லூரிக்கு செல் என தங்கப்பாண்டியை மாரியப்பன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தங்கப்பாண்டி, தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத்ஹனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தங்கப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செக் குடியரசு நாட்டில் ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். இப்போட்டில் முதல் வாய்ப்பில் பவுல் செய்து அதிர்ச்சியளித்தார் நீரஜ். இரண்டாம் வாய்ப்பில் 83.45மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்தவர், மூன்றாவது வாய்ப்பில் 85.29மீட்டர் தூரமும், 4-வது வாய்ப்பில் 82.17மீட்டரும், 5-வது வாய்ப்பில் 81.01 மீட்டர் தூரமும் எறிந்தார். இறுதி வாய்ப்பிலும் பவுல் செய்தார் நீரஜ். இதன் மூலம் மற்றவர்களைவிட அதிகபட்சமாக அதிகபட்சமாக மூன்றாவது வாய்ப்பில் 85.29 மீட்டர் எறிந்த இவர், முதலிடம் பிடித்து தங்கம் வென்று அசத்தினார். அதே போல் 6 வாய்புகளில் 2 வாய்ப்புகளை தவறவிட்ட தென்ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த தவ் ஸ்மித் அதிகபட்சமாக 84.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். கிரெனடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் அனைத்து வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினார். இருப்பினும் 83.63…
தி. நகரில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் நேற்று இரவு பெட்ரோல் போட வந்த மருதம் கமாண்டோ ஃபோர்ஸ் படை காவலர் சக்திவேல் (27) மீது காரில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவலர் சக்திவேல் அரசு வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக வந்தபோது, ஷிஃப்ட் காரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், அவர்கள் போன் செய்து மற்றொரு நபரை வரவழைத்து, காவலர் சக்திவேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தான் காவல்துறை என்பதை சக்திவேல் தெரிவித்த போதிலும், மர்ம நபர்கள் அவரை கொடூரமாகத் தாக்கி, அவதூறாகப் பேசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவலர் சக்திவேல் அளித்த புகாரின் பேரில், பாண்டிபஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய மர்ம நபர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மதுபாட்டில் மீதும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு, காலி பாட்டில்களை வாடிக்கையாளர்கள் திரும்பக் கொண்டு வரும்போது அந்த 10 ரூபாய் திருப்பி அளிக்கப்படுகிறது. இந்த புதிய பணிகளுக்கு தற்போதுள்ள டாஸ்மாக் ஊழியர்களை நியமிக்காமல், தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும், காலி பாட்டில்களை சேகரிக்க தனி இடம் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.…
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 20-ம் தேதி லீட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 364 ரன்கள் எடுக்க, இங்கிலந்துக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 4-வது நாளில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில், இங்கிலாந்திற்கு 350 ரன்கள் தேவைப்பட்டது. இங்கிலாந்து வீரர்கள் பொறுமையாக ஆட, முடிவில் இங்கிலாந்து அணி 82 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து விரட்டிப்பிடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்டில் இரு அணிகளும்…
போதைப்பொருள் வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் நடிகர் கிருஷ்ணாவைக் கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் கிருஷ்ணாவின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதால், சைபர் கிரைம் நிபுணர்களின் உதவியுடன் அவரது இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தில், நடிகர் கிருஷ்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்ததையடுத்து, போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சீரடி அதிவேக விரைவு ரயிலில் வேலூர் காட்பாடிக்கு பயணம் மேற்கொண்டார். முதலமைச்சரின் வருகையை ஒட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டிடம் முதல் ரயில் நிலையம் வரை ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தளபதி வாழ்க என கோஷங்கள் எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும், திமுக கொடிகளை அசைத்தும் தொண்டர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். முதலமைச்சரை வழியனுப்ப அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர். மக்களவை உறுப்பினர் ஜெகத் ரட்சகன் உள்ளிட்டோர் முதலமைச்சருடன் காட்பாடி வரை ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் புறப்படும் முன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் இருந்து வெளியே வந்து தொண்டர்களை நோக்கி கை அசைத்தார்.…
இந்தி முன்னணி நடிகர் ஆமிர்கான் நடித்துள்ள புதிய படம் ‘சித்தாரே ஜமீன் பர்’, ஜூன் 20ஆம் தேதி வெளியானது. ஆர். எஸ். பிரசன்னா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெனிலியா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமஸ் மிஸ்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தி மொழியில் உருவாகிய இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மனவளர்ச்சி குறைபாடுள்ளோருக்கான கூடைப்பந்து பயிற்சியாளராக நீதிமன்றத்தின் ஆணைப்படி நியமிக்கப்படும் ஆமிர்கான் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ச்சிபூர்வமாக சொல்லும் கதையம்சம் இப்படத்திற்கு முக்கிய வலுவாக உள்ளது. இந்நிலையில், நடிகர் ஆமிர்கான் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படங்களை குடியரசுத் தலைவர் அலுவலகம் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது. ஆனால், அந்த சந்திப்பின் காரணம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.