Close Menu
    What's Hot

    மக்களின் இதயத்தில் இடம் பிடித்ததால் CM ஆனேன்..!! சட்டசபையில் முதல்வர் விஜய் தெறி பேச்சு..!!

    ஆசிரியர் தேர்வில் மோசடி..?? தமிழகம் முழுவதும் 18 இடங்களில் களமிறங்கிய அமலாக்கத்துறை..!!

    நிறைமாத நிலவே வா.. வா..!! விஜய் டிவி பிரியங்கா சொன்ன குட் நியூஸ்..!! குவியும் வாழ்த்துகள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருத்தணி அரசு மருத்துவமனை, மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது?
    தமிழ்நாடு

    திருத்தணி அரசு மருத்துவமனை, மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது?

    Editor TN TalksBy Editor TN TalksJune 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1890629 mkstalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி அரசு மருத்துவமனையை மக்கள் பயன்படுத்தும் வகையில் இயங்கச்செய்யாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

    கடந்த 2020ஆம் ஆண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, மாவட்ட மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படுவதாக அறிவித்த தமிழ்நாடு அரசு, அதே ஆண்டு சட்டப்பேரவையில் திருத்தணி அரசு பொது மருத்துவமனையைத் தரம் உயர்த்த 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தீர்மானமும் நிறைவேற்றி, ஒப்பந்தமும் விடப்பட்டது.

    இதற்கிடையே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு அமைந்த பிறகு கடந்த ஏப்ரல் மாதம் காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி மருத்துமனையைத் திறந்து வைத்தார். ஆனால், அதன்பிறகும் கடந்த இரு மாதங்களாக திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவ உபகரணங்கள் மற்றும் மின்வசதி இல்லாத காரணத்தால் இன்னும் திறக்கப்படவில்லை. மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாத மருத்துவமனை யாருக்காக? எதற்காக? தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு வழங்குவதாக அறிவித்த 45 கோடி என்னானது?

    தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகள், புதிதாகத் தொடங்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளை திமுக அரசு ஏற்படுத்தவில்லை என்பது நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகும். வெற்று விளம்பரத்திற்குத் தரம் உயர்த்துவதாக வெற்று அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, மருத்துவமனைகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளைக் கூடத் திமுக அரசு நிறைவு செய்யாதிருப்பது கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் உயிரோடும், உடல் நலனோடும் விளையாடும் கொடுஞ்செயலாகும்.

    குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதியோ, மருத்துவர்கள் நியமனமோ செய்யப்படாத காரணத்தால் பயிற்சி மருத்துவர்களைக் கொண்டு இயங்கி வருவது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அதன்காரணமாக விழுப்புரம் சுற்றுவட்டார மக்கள் பாண்டிச்சேரி மாநிலத்திலுள்ள ஜிப்மர் மருத்துவமனைக்குப் போகச்சொல்லி அலைகழிக்கப்படுவதும் அரங்கேறுகிறது. இதுகுறித்துப் பலமுறை பொதுமக்கள் புகாரளித்தும் திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையாகும்.

    தமிழ்நாட்டில் ஏற்கனவே இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரை போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை, மருந்துகள் இல்லை, மருத்துவ உபகரணங்கள் இல்லை, படுக்கை வசதி இல்லை என்பதால் தமிழக மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகிவரும் நிலையில், தரம் உயர்த்தப்பட்ட மருத்துமனைகளும் அதைவிட மிக மோசமான நிலையிலிருப்பது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும். இத்தனை மோசமான நிர்வாகத்தை வைத்துக்கொண்டு ‘இந்தியா வியக்கும் திராவிட மாடல், உலகம் வியக்கும் நான்காண்டு சாதனை’ என்று திமுக அரசு பேசுவது வெட்கக்கேடானது.

    ஆகவே, தமிழ்நாடு அரசு, தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி அரசு மருத்துவமனையில் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தந்து மக்கள் பயன்பாட்டிற்காக விரைந்து இயங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். மேலும், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக்கல்லூரிகள் வரை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் பற்றாக்குறையைப்போக்கி, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டு மக்களின் உயிர்காக்க உடனடி நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

    – செந்தமிழன் சீமான்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவேந்தோணி குறவர் மக்களை இடம்பெயர்க்கக் கூடாதென்று கோரி மனு – பரமக்குடியில் கலக்கமான நிலை!
    Next Article ஜாதி பேதம் பேசும் ஆசிரியர் மீது பள்ளி மாணவிகள் புகார் – கோவையில் பரபரப்பு!
    Editor TN Talks

    Related Posts

    மக்களின் இதயத்தில் இடம் பிடித்ததால் CM ஆனேன்..!! சட்டசபையில் முதல்வர் விஜய் தெறி பேச்சு..!!

    June 23, 2026

    ஆசிரியர் தேர்வில் மோசடி..?? தமிழகம் முழுவதும் 18 இடங்களில் களமிறங்கிய அமலாக்கத்துறை..!!

    June 23, 2026

    மேகதாது அணை: புதிய நடுவர் மன்றக் கோரிக்கை தமிழ்நாட்டிற்கு பாதகம்..!! வைகோ விளாசல்..!!

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மக்களின் இதயத்தில் இடம் பிடித்ததால் CM ஆனேன்..!! சட்டசபையில் முதல்வர் விஜய் தெறி பேச்சு..!!

    ஆசிரியர் தேர்வில் மோசடி..?? தமிழகம் முழுவதும் 18 இடங்களில் களமிறங்கிய அமலாக்கத்துறை..!!

    நிறைமாத நிலவே வா.. வா..!! விஜய் டிவி பிரியங்கா சொன்ன குட் நியூஸ்..!! குவியும் வாழ்த்துகள்..!!

    கத்தார் : எரிவாயு ஆலையில் விபத்து..! 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு..!

    CHATGPT மூலம் போலி நீட் வினாத்தாள்..! இன்ஸ்டாவில் விற்பனை..! சட்டக்கல்லூரி மாணவர் கைது..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.