Author: Editor TN Talks
சென்னை புறநகர் பேருந்து நிலையமான கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்கு போதிய வசதிகள் செய்து தரவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டி உள்ளார். இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு.. கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு. சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி செய்தார்களா என்றால், அதுவும் இல்லை! இன்று வரை “கிளாம்பாக்கம் பரிதாபங்கள்” ஓய்ந்த பாடில்லை. பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்கு தெரியாதா? அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்யக் கூட இந்த ஸ்டாலின் மாடல்…
தங்க நகைக்கடன் தொடர்பாகதான் வெளியிட்ட விதிமுறைகளில் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று மாற்றத்தை அறிவித்துள்ளது. இது இந்திய ரிசர்வு வங்கியின் வரலாற்றிலேயே இது வரை நிகழாத ஒன்று. தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிவிப்புகளை கடந்த மாதம் அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. வெங்கடேசன் தனது எக்ஸ தளத்தில் செய்தி ஒன்றை பதிவேற்றி உள்ளார். எங்களது பத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டது ரிசர்வு வங்கி. இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க வெற்றிக்கு நன்றி என்று கூறி அந்த 10 விவரங்களை பட்டியலிட்டுள்ளார். தங்க நகை கடன் தொடர்பாக சாமானிய மக்களுக்காக நான் எழுப்பிய கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. 1. இந்த விதிமுறைகள் உடனடியாக அமுக்கு வரும். அதிகபட்சமாக 2026 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பு இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும்…
சேலம் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை மூன்று வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதில் யுவராஜ் உள்பட எட்டு பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மற்ற இருவரின் தண்டனையைக் குறைத்து தீர்ப்பளித்தது. இந்த கொலை வழக்கில், மதுரை நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் நியமிக்கப்பட்டிருந்தார். உயர் நீதிமன்றத்திலும் அரசு வழக்கறிஞராக வாதங்களை முன் வைத்தார். சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியதற்கான கட்டணம், இதுவரை வழங்கப்படவில்லை…
மாவோயிஸ்ட் சந்தோஷ் குமார் அளித்த தகவலின் படி கோவையைச் சேர்ந்த மேலும் ஆறு பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அங்கலகுறிச்சியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். மாவோயிஸ் இயக்கத்தைச் சேர்ந்த இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பதுங்கி இருந்தார். இவரை தமிழக போலீசார் உதவியுடன் கடந்த பிப்ரவரியில் கேரள மாநிலம் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். சந்தோஷ் குமாரை என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் கூறும்போது :- சந்தோஷ் குமார் கேரள மாநிலம் கபினி தள மாவோயிஸ்ட் இயக்க தலைவராக செயல்பட்டு உள்ளார். கடந்த 2017 இல் வீட்டை விட்டு வெளியேறிய சந்தோஷ் குமாரை பொள்ளாச்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தான் மூளைச்சலவை செய்து மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்த்து விட்டு உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் தமிழக – கேரளா…
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் கடந்த ஐந்தாண்டுகளில் சேதமடைந்திருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களில் தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளைக் கூட ஏற்படுத்தாமல் ஆண்டுக்கு சுமார் ரூ.200 கோடி அளவுக்கு மக்கள் வரிப்பணத்தை தமிழக அரசு வீணடிப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் 2019-20ஆம் ஆண்டில் தொடங்கி 2023-24ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தலா 1.25 லட்சம் டன் வரை நெல்/அரிசி மூட்டைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்திருக்கின்றன என்று தெரியவந்துள்ளது. ஐந்தாண்டுகளில் இவ்வாறு சேதமடைந்த…
ஆர்ட் ரைடக்டர் மணி கார்த்திக் என்பவரும், விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூக்குத்தி முருகனும் இணைந்து தன்னை 33 லட்ச ரூபாய் ஏமாற்றி விட்டதாக சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு.. என்னுடைய பெயர் செல்வம்.நான் சென்னை பெரம்பூர் பக்கத்தில் உள்ள கன்னிகாபுரத்தில் வசிக்கிறேன்.என் எதிர்வீட்ல இருக்கிற ராஜி என்கிற தம்பியிடம் சினிமா பற்றி நிறைய பேசுவேன். அவர் என்னை தேடி ஓருவர் வருவார்.நீங்கள் கூட பார்த்து உள்ளீர்களே… .அவர் பெயர் மணி கார்த்திக். படம் எடுக்கிறதா இருக்காரு. அவர் Art Director இருந்து இயக்குனராக ஆசைப்படுறாரு. ஓரு நாள் அவரை வரவழைத்து பேச வைக்கிறேன் என சொன்னார். ஓரு நாள் வர வைச்சார். சினிமா கதைகள் பேசினோம். என்னிடம் ஓரு கதை இருக்கு.அதை நாம் பண்ணலாம் என சொன்னார். சொல்லும்போது என்னிடம் பணம் அவ்வளவாக இல்லை என்றேன். நாலு…
கோவையில் சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரிக்கு விதிக்கப்பட்ட 32 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரித்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், புரவிபாளையம் கிராமத்தில் பட்டா நிலங்களில் நடத்தி வரும் குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுத்ததாக கூறி செந்தாமரை என்பவருக்கு 32 கோடியே 29 லட்சத்து 77 ஆயிரத்து 792 ரூபாய் அபராதம் விதித்து கோவை உதவி ஆட்சியர் 2022-ம் ஆண்டு உத்தரவிட்டார். இதை எதிர்த்த மேல் முறையீட்டை விசாரித்த புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர், உதவி ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, அபராதத் தொகையை 2 கோடியே 48 லட்சத்து 9 ஆயிரத்து 119 ரூபாயாகக் குறைத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர், புவியியல்…
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில், சட்டமன்ற தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெறும்வ ‘வகையில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேரடியாக தமிழ்நாட்டிற்குள் களமிறங்க உள்ளாராம். இதையொட்டி இன்றிரவு 8 மணியளவில் அமித் ஷா, மதுரைக்கு வரவுள்ளார். இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் போலீசாரின் தணிக்கைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விமான நிலையம் முழுவதும் நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இன்றிரவு மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கும் அமித் ஷா, நாளை காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க உள்ளார். பிற்பகல் 3 மணியளவில் பாஜக…
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி உள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குறைந்தது 30 சதவித வாக்காளர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்ப்பது என்பது தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற முயற்சி. இதுபற்றி இன்றைய கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை வெல்வது இலக்காக கொண்டு கட்சிப் பணிகளை துரிதப்படுத்த மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்க உள்ளார். அதேபோன்று அதிமுக வலுவாக உள்ள மாவட்டங்களில் எத்தகைய முன்னெடுப்புகளை செய்ய வேண்டும் என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமியர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து செய்தி விடுத்துள்ளனர். பிரதமர் மோடி “பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும், நமது சமூகத்தில் அமைதியின் கட்டமைப்பை வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு கிடைக்க வாழ்த்துகிறேன்.” மு.க.ஸ்டாலின் தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடிடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவினை வறியவர்க்கு ஒரு பகுதியையும், நண்பர்களுக்கு ஒரு பகுதியையும் பகிர்ந்தளித்துக் கொண்டாடும் பெருநாள். இஸ்லாமிய மக்களுக்காக இடஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, நங்கநல்லூரில் ஹஜ் இல்லம் என அவர்களின் சமூக – கல்வி – பொருளாதார மேம்பாடு மற்றும் உரிமைகளுக்காக தொடர்ந்து பணியாற்றும் சகோதர உணர்வோடு அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எனது அன்பான பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் ,…