Close Menu
    What's Hot

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அமித் ஷா வருகை – மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
    தமிழ்நாடு

    அமித் ஷா வருகை – மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 7, 2025Updated:June 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    43970105 0
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தமிழக பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில், சட்டமன்ற தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெறும்வ ‘வகையில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேரடியாக தமிழ்நாட்டிற்குள் களமிறங்க உள்ளாராம். இதையொட்டி இன்றிரவு 8 மணியளவில் அமித் ஷா, மதுரைக்கு வரவுள்ளார். இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் போலீசாரின் தணிக்கைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விமான நிலையம் முழுவதும் நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இன்றிரவு மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கும் அமித் ஷா, நாளை காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க உள்ளார். பிற்பகல் 3 மணியளவில் பாஜக தென்மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

    தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற இன்னும் 10 மாதங்களே உள்ளன. இதனால் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டதாக அறிவித்து இருந்தார். சமீபத்தில் ஜுன் 1-ந் தேதி மதுரையில் மிக பிரம்மாண்டமாக திமுக பொதுக்குழுவை நடத்திக் காண்பித்தார். அதில் 200 தொகுதிகளில் வெல்வதே திமுகவின் இலக்கு என்று கூறியிருந்தார். மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் 30 சதவித வாக்காளர்களை கொண்டு வருவதே இலக்கு என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மறுபுறம் எதிர்க்கட்சியான அதிமுக, 2026 தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றி வருகிறது. இதற்காக பல்வேறு மனக்கசப்புகளைத் தாண்டி, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது. மேலும் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளை தங்கள் கூட்டணியில் தக்க வைக்க வியூகம் அமைத்து செயலாற்றி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.

    5 அடுக்கு பாதுகாப்பு Amit Shah Madurai visit amit shah tour BJP Tamil Nadu central minister visit madurai airport security tamilnadu bjp அமித் ஷா பாதுகாப்பு நடவடிக்கை மதுரை விமான நிலையம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
    Next Article கோவை சட்டவிரோத குவாரிக்கு ரூ.32 கோடி அபராதம்: மோசடி அதிகாரிகள் மீது லஞ்சஒழிப்புத்துறை நடவடிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    July 19, 2026

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    July 19, 2026

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.