Close Menu
    What's Hot

    காஞ்சிபுரம் : தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி தணிகா..! பாதுகாப்புடன் சிறையில் அடைப்பு..! 

    டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»இயக்குநர் மணி கார்த்திக், பாடகர் மூக்குத்தி முருகன் ஏமாற்றி விட்டனர்..
    சினிமா

    இயக்குநர் மணி கார்த்திக், பாடகர் மூக்குத்தி முருகன் ஏமாற்றி விட்டனர்..

    Editor TN TalksBy Editor TN TalksJune 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 06 07 at 12.18.49 PM 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆர்ட் ரைடக்டர் மணி கார்த்திக் என்பவரும், விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூக்குத்தி முருகனும் இணைந்து தன்னை 33 லட்ச ரூபாய் ஏமாற்றி விட்டதாக சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    அதன் விவரம் வருமாறு..

    என்னுடைய பெயர் செல்வம்.நான் சென்னை பெரம்பூர் பக்கத்தில் உள்ள கன்னிகாபுரத்தில் வசிக்கிறேன்.என் எதிர்வீட்ல இருக்கிற ராஜி என்கிற தம்பியிடம் சினிமா பற்றி நிறைய பேசுவேன்.

    அவர் என்னை தேடி ஓருவர் வருவார்.நீங்கள் கூட பார்த்து உள்ளீர்களே… .அவர் பெயர் மணி கார்த்திக். படம் எடுக்கிறதா இருக்காரு. அவர் Art Director இருந்து இயக்குனராக ஆசைப்படுறாரு. ஓரு நாள் அவரை வரவழைத்து பேச வைக்கிறேன் என சொன்னார். ஓரு நாள் வர வைச்சார். சினிமா கதைகள் பேசினோம். என்னிடம் ஓரு கதை இருக்கு.அதை நாம் பண்ணலாம் என சொன்னார்.

    சொல்லும்போது என்னிடம் பணம் அவ்வளவாக இல்லை என்றேன். நாலு லட்சம் கையில் உள்ளது என்றேன்.அவர் வீடு சொந்த வீடு இருக்கே அதை விற்று சொந்தமாக படம் பண்ணி இதை விட பெரிய பங்களா நானே வாங்கித் தருகிறேன் என்றார்.அவரே வீடு விற்கும் முயற்சியில் உதவினார். 29 லட்சத்துக்கு வீட்டை விற்றோம். குறைந்த பட்ஜெட்டில் படம் என்பதால் அவர் சொல்லுகிற ஆட்களுக்கு எல்லாம் காசு கொடுத்தேன். எனக்கு இருந்த சினிமா ஆர்வத்தை பயன்படுத்திக்கொண்டு நயவஞ்சக வலையில் வீழ்த்தினார்.

    மயில்சாமி மகன் அன்புவை ஹீரோவாக வைத்து முணு கழுத வயசு என்ற படத்தின் படப்பிடிப்பு அரக்கோணம் அருகே அதனை சுற்றியுள்ள பகுதியில் தொடங்கியது. என்னிடம் பணத்தை வாங்குவதிலே குறியாக இருந்தார் இயக்குனர் மணி கார்த்திக். பணம் தண்ணீராக செலவான போதும் உங்களுக்கு பெரிய பங்களா வரப்போகுதோ என சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கறந்தார். நானும் நம்பிக்கையில் கொடுத்தேன்.

    விஜய் டிவி பிரபலம் முக்குத்தி முருகனும் இதற்கு உடந்தை. அவர் சொல்கிற ஆளுக்கு பணத்தை கொடுத்தேன். எப்படியெல்லாம் நயமாக பேசி பணம் பிடுங்க முடியுமோ இருவரும் கூட்டு போட்டு என்னிடம் பணத்தை பெற்றனர்.

    ஓரு நாள் எனக்குத் தெரியாமலே என்னிடம் சொல்லாமலே பட உரிமைகள் அனைத்தையும் இயக்குனர் மணி கார்த்திக் தன்னுடைய மனைவி ராஜாமணி பெயரில் மாற்றிக்கொண்டார். நான் கேட்ட போது படத்துக்கு இன்னும் நிறைய செலவாகும். KGS group என ஓரு குருப் உள்ளது.அவர்கள் தான் படத்தை மீதி எடுப்பார்கள்.. அவர்களிடம் இருந்து வாங்கி நான் உங்களுக்குக் தருகிறேன் என்றார். கணக்கு கொடுக்கனும் என சொல்லி என்னுடைய செலவு விபரத்தை KGS group தரணும் என பெற்றுக்கொண்டார். மீண்டும் படம் தொடங்குவதற்குள் 25 லட்சம் கொடுக்க வேண்டும். மீதி பணத்தை படம் முடித்து பெறுவது என அக்ரிமெண்ட் நானும் இயக்குனரும் போட்டுக்கொண்டோம்.

    திடிரென ஓரு நாள் ஜனவரி 8, 2023 அவ்வை ஹால், தர்மபூரியில் ஆடியோ பங்ஷன் த்தார்கள். படத்திற்காக இவ்வளவு செலவழித்தும் எனக்கு உரிய மரியாதை கொடுக்கப்படலை. ஆடியோ பங்ஷன் அன்று அவமதிக்கப்பட்டேன்.

    யாரோ ஓருவர் தயாரிப்பாளர் எங்க என கேட்டதால் மட்டுமே நான் மேடை ஏற்றப்பட்டேன். அன்று 5 லட்சம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார் இயக்குனர் மணி கார்த்திக். KGS group தரல .நான் ஓரு வாரத்தில் வாங்கித் தருகிறேன் என்றார் மணி கார்த்திக். மீதி பணமும் வரல அது வந்து விடும் என்றார். காலங்கள் மட்டுமே சென்றன.எ னக்கு நம்பிக்கையான வாக்குறுதிகள் மட்டுமே தரப்பட்டது. ஓரு ஸ்டேஜில் உன்னால முடிஞ்சத பாத்துகோ என்றார்.இப்போது சொந்த வீடு இல்லாமல் நடுரோட்டில் அநாதையாக நிற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை சட்டவிரோத குவாரிக்கு ரூ.32 கோடி அபராதம்: மோசடி அதிகாரிகள் மீது லஞ்சஒழிப்புத்துறை நடவடிக்கை!
    Next Article 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்… கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தவறிய திமுக அரசு..
    Editor TN Talks

    Related Posts

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    July 20, 2026

    ‘ஜனநாயகன்’ புதிய ப்ரோமோ ரிலீஸ்..!! விஜய்யின் தரமான ‘கை’ செய்கை..!! கவனிச்சீங்களா..??

    July 20, 2026

    தனுஷ் கட்சித் தொடங்குவாரா?… என்ன சொல்கிறார் ஹபீபி யூசுப் கஸ்தூரி ராஜா!

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காஞ்சிபுரம் : தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி தணிகா..! பாதுகாப்புடன் சிறையில் அடைப்பு..! 

    டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.