Author: Editor TN Talks
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். வருகிற ஜுலை மாதம் இந்த மக்கள் சந்திப்பு தொடங்கும் என்று பனையூர் வட்டார தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி தவெக என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார் நடிகர் விஜய். தொடர்ந்து விக்கிரவாண்டியில் கொள்கை அறிவிப்பு மாநாட்டை நடத்திக் காண்பித்தார். மேலும் கோவையில் வாக்குச்சாவடி முகவர் கருத்தரங்கு மாநாட்டை நடத்தினார். தொடர்ந்து திருச்சி, மதுரை, வேலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இதேபோன்ற மாநாடுகளை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதனிடையே தான் கடைசியாக நடித்த ஜனநாயகன் திரைப்படத்தையும் நடித்து முடித்துக் கொடுத்து விட்டார். இனி முழுநேர அரசியலில் விஜய் களமிறங்க உள்ளார். இதன்ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாராம். ஜுலை 2-வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த சுற்றுப்பயணத்தை தொடங்க…
தமிழ்நாட்டை சுரண்டி எடுக்கப்படும் பல லட்சம் டன் கனிமங்கள் கேரளா, கர்நாடகாவுக்கு தினமும் செல்கின்றன. இவற்றை தடுக்காமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் உரையாற்றினால் போதுமா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக மாணவரணி மாநிலச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுபற்றி தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு… தமிழ்நாட்டில், 26 மணல் குவாரிகளை திமுக அரசு புதிதாக திறக்க உள்ளது, குவாரிகளுக்கான குத்தகைக் காலத்தை 30 ஆண்டுகளாக நீட்டித்துள்ளது. ரூ.6000 கோடி வரை குவாரிகளில் கனிம ஊழல் நடப்பதாக திருப்பூர் குவாரி வழக்கில் மே மாதம் மதுரை உயர்நீதிமன்றம் சாடியுள்ளது, தமிழ்நாட்டில் உள்ள 12000… pic.twitter.com/mzFtkfTIMx — Singai G Ramachandran (@RamaAIADMK) June 6, 2025 தமிழ்நாட்டில், 26 மணல் குவாரிகளை திமுக அரசு புதிதாக திறக்க உள்ளது, குவாரிகளுக்கான குத்தகைக் காலத்தை 30 ஆண்டுகளாக நீட்டித்துள்ளது. ரூ.6000 கோடி…
கிரானைட் முறைகேடு வழக்கு தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து, இன்று காணொலி காட்சி மூலம் சாட்சியம் அளிக்க உள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது சம்பந்தமான வழக்குகள், மதுரையில் உள்ள கனிம வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. இந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து, ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை அளித்த மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம், இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்க சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பிய போது, தனது பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை என அவர் விளக்கம் அளித்திருந்தார். அவர் சாட்சியம் அளிக்க போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் வசித்து வரும் சகாயம்,…
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் 1,315 மீட்டர் நீளத்தில் இந்த ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்வதாக இருந்தது. ஆனால் அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பிறகு சிந்தூர் ஆபரேஷன் நடவடிக்கைகளில் பிரதமர் தீவிரம் காட்டினார். இப்போது அங்கு அமைதி திரும்பி உள்ள நிலையில், பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம். நில அதிர்வு மற்றும் பலத்த சூறாவளிக் காற்று சூழலை தாங்கும் வகையில்…
பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையில் ஜாக் பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கோவை, குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா மஹால் வளாகத்தில் ஜாக் அமைப்பின் சார்பில் நடைபெறும் சிறப்பு தொழுகையில் ஆயிரகணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு. இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இந்த தொழுகையின் போது இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து , ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஆடு,மாடு ஆகியவற்றை பலியிட்டு அவற்றை 3 பங்காக பிரித்து அதில் ஒரு பங்கை நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும், 3-வது பங்கை தங்களுக்கும் பகிர்ந்து உற்சாகமாக பக்ரீத் பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர். பெரும்பான்மை இஸ்லாமியர்களான சுன்னத் ஜமாத் சார்பில் நாளைய தினம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது…
தேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்த சப்னா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், ” அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழுவை மாற்றி அமைக்கவும், பள்ளி மாணவர்களிடையே போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தவும் உத்தரவிட வேண்டும்” என பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பெட்டியில் குழந்தைகள் தங்களின் புகார்களை போடலாம். அந்த கடிதங்கள் படிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 14417 என்ற இலவச எண் உள்ளது அதோடு 1098 என்ற எண் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரை தொடர்பு கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. மார்ச் 26…
மதுரையில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்களை சாலையோரங்களில் நட்டு வைப்பதற்கும், கம்பத்தின் உயரத்தை அதிகரிப்பதற்கும் அனுமதி கேட்டு அந்த கட்சியினர் மதுரை ஐகோர்ட்டில் சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சாலையோரங்களில் உள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த கொடிக்கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்தநிலையில் இந்த விவகாரத்தில் மதுரை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் இருந்து தங்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் , இந்த வழக்கில்கட்சியை மனுதாரராக சேர்க்காமலேயே, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.…
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் இருந்து ஒரே நேரத்தில் அதிகபடியான வாகனங்கள் தென் மாவட்டங்களுக்கு செல்வதால் சென்னையின் நுழைவாயிலாக இருக்ககூடிய பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாளை மறுநாள் பக்ரித் என்பதாலும் வார விடுமுறை என்பதாலும் சென்னையில் இருந்து கார், வேன், கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், தனியார் நிறுவன பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து ஆமைபோல் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது
போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் நேற்றிரவு முதல் விடியும் வரை தங்கள் ஊர்களுக்குச் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே காத்திருந்து போராட்டம் நடத்திய மக்களின் வேதனைகள் தமிழக அரசிற்கும் மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் புரிய வாய்ப்பில்லை என்ற தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு… நேற்றிரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் சென்னையிலிருந்து தங்கள் ஊர்களுக்குச் செல்லவிருந்த மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் திராவிட மாடல் அரசின் நிர்வாகக் குளறுபடிகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. அதுகுறித்து பேருந்து நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால் மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி போராட்டங்களாலும் பற்றாக்குறைகளாலும் பொதுமக்களை வாட்டி வதைப்பதற்குப் பெயர் தான் “நாடு போற்றும் நல்லாட்சியா?”…
சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிரான வேட்டையை மத்திய அரசு மிக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்கா அருகே அமைந்திருக்கும் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ரிசர்வ் காவல் படை, சத்தீஷ்கார் காவல்துறை, சிறப்பு படைப்பிரிவு வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் இணைந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மாவோயிஸ்ட் அமைப்பினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களிடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் மூத்த மாவோயிஸ்ட் தலைவர் கவுதம் என்ற சுதாகர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன்பு பஸ்தான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் நம்பலா கேஷவ் என்ற பசவராஜு சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.