Close Menu
    What's Hot

    4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவில் சிபிஐ விசாரணை; வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு

    ரூ.75,000 கடன்கள் முழுமையாக தள்ளுபடி..! விவசாயிகளுக்கு குட் நீயூஸ் சொன்ன முதலமைச்சர்..!

    திமுக நகராட்சி கவுன்சிலர் அடாவடி; கணினி மையத்தில் தாக்குதல் ; பரபரப்பு சிசிடிவி காட்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»மாணவர் பாதுகாப்புக்குழு வழக்கு ஆகஸ்ட் 5க்கு ஒத்திவைப்பு
    தமிழ்நாடு

    மாணவர் பாதுகாப்புக்குழு வழக்கு ஆகஸ்ட் 5க்கு ஒத்திவைப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tamil samayam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்த சப்னா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், ” அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழுவை மாற்றி அமைக்கவும், பள்ளி மாணவர்களிடையே போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தவும் உத்தரவிட வேண்டும்” என பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    தமிழக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழுமம் அமைக்கப்பட்டுள்ளது.
    பாதுகாப்பு பெட்டியில் குழந்தைகள் தங்களின் புகார்களை போடலாம்.
    அந்த கடிதங்கள் படிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 14417 என்ற இலவச எண் உள்ளது அதோடு 1098 என்ற எண் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரை தொடர்பு கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. மார்ச் 26 ஆம் தேதி மாணவர்களின் உடல்நலம் மற்றும் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 7 லட்சத்து 25 ஆயிரத்து 432 ஆசிரியர் மற்றும் பெற்றோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். போக்சோ சட்டம் தொடர்பான வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த போட்டிகளில் 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். 11 மாவட்டங்களில் உள்ள 11,820 அரசு பள்ளிகளில் அறிவுரை குழுமம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில் மாற்றி அமைக்க 2 வார கால அவகாசம் வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள் பிற மாவட்டங்களிலும் விரைவாக குழுவை அமைக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகட்சிக் கொடி கம்பங்களை அகற்றக்கோரிய உத்தரவை ரத்து செய்க…
    Next Article பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..
    Editor TN Talks

    Related Posts

    4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவில் சிபிஐ விசாரணை; வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு

    June 16, 2026

    ரூ.75,000 கடன்கள் முழுமையாக தள்ளுபடி..! விவசாயிகளுக்கு குட் நீயூஸ் சொன்ன முதலமைச்சர்..!

    June 16, 2026

    திமுக நகராட்சி கவுன்சிலர் அடாவடி; கணினி மையத்தில் தாக்குதல் ; பரபரப்பு சிசிடிவி காட்சி

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவில் சிபிஐ விசாரணை; வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு

    ரூ.75,000 கடன்கள் முழுமையாக தள்ளுபடி..! விவசாயிகளுக்கு குட் நீயூஸ் சொன்ன முதலமைச்சர்..!

    திமுக நகராட்சி கவுன்சிலர் அடாவடி; கணினி மையத்தில் தாக்குதல் ; பரபரப்பு சிசிடிவி காட்சி

    தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை – இன்று மாலை வெளியாகிறது வெள்ளை அறிக்கை

    ”தவறாக புரிந்து கொண்டவர்கள் தற்குறிகள்”..! நடிகர் மகேந்திரன் விளக்கம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.