Close Menu
    What's Hot

    மூடப்பட்ட பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளை..!! ஒருவருக்கு கத்திக்குத்து..!! சிக்கிய தவெகவினர்..!!

    61 நாட்களுக்குப் பிறகு.. கொத்து கொத்தாக கிடைத்த மீன்கள்..!! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!!

    பவிஷ் நாராயணின் புதிய அவதாரம்..! ’லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீடு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»கண்காட்சிக்காக கட்டப்பட்டதா கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி…
    தமிழ்நாடு

    கண்காட்சிக்காக கட்டப்பட்டதா கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி…

    Editor TN TalksBy Editor TN TalksJune 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kilambakkam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் நேற்றிரவு முதல் விடியும் வரை தங்கள் ஊர்களுக்குச் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே காத்திருந்து போராட்டம் நடத்திய மக்களின் வேதனைகள் தமிழக அரசிற்கும் மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் புரிய வாய்ப்பில்லை என்ற தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு…

    நேற்றிரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் சென்னையிலிருந்து தங்கள் ஊர்களுக்குச் செல்லவிருந்த மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் திராவிட மாடல் அரசின் நிர்வாகக் குளறுபடிகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. அதுகுறித்து பேருந்து நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால் மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி போராட்டங்களாலும் பற்றாக்குறைகளாலும் பொதுமக்களை வாட்டி வதைப்பதற்குப் பெயர் தான் “நாடு போற்றும் நல்லாட்சியா?”

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெகு நேரம் காத்திருந்த மக்கள் கேட்ட கேள்விகளுக்குக் கூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்றால், பேருந்துகளோடு சேர்ந்து மொத்த போக்குவரத்துத் துறையும் பழுதாகிவிட்டதா?

    மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தனது தந்தையின் பெயரை சூட்டி விளம்பரப்படுத்திக் கொள்வதில் அத்தனை அக்கறையுடனும் அவசரத்துடனும் செயலாற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், அந்தப் பேருந்து நிலையம் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யத் தவறிவிட்டார். இது வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுகிறது.

    இரவில் சாலையோரங்களிலும் பேருந்து நிலையத்திலும் காத்திருந்த வயதான பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் அவலநிலையைப் பற்றியெல்லாம் திமுக அரசிற்கு எந்தக் கவலையும் இல்லை. பல நாடுகளுக்கு ஒய்யாரமாக சுற்றுலா செல்லும் முதல்வர், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்துத் தேவையை மறந்து விட்டார் போல.

    பொது மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதை விட்டுவிட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்தி தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு திமுக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், இரவு நேரப் பேருந்து வழித்தடங்கள், டிக்கெட் கண்காணிப்பு, அலுவலக நேரம் மற்றும் பலவற்றை விரிவாக மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசட்டீஸ்கரில் மாவோயிட்த் தலைவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
    Next Article பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல். வாகன ஓட்டிகள் அவதி.
    Editor TN Talks

    Related Posts

    மூடப்பட்ட பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளை..!! ஒருவருக்கு கத்திக்குத்து..!! சிக்கிய தவெகவினர்..!!

    June 16, 2026

    61 நாட்களுக்குப் பிறகு.. கொத்து கொத்தாக கிடைத்த மீன்கள்..!! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!!

    June 16, 2026

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மூடப்பட்ட பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளை..!! ஒருவருக்கு கத்திக்குத்து..!! சிக்கிய தவெகவினர்..!!

    61 நாட்களுக்குப் பிறகு.. கொத்து கொத்தாக கிடைத்த மீன்கள்..!! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!!

    பவிஷ் நாராயணின் புதிய அவதாரம்..! ’லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீடு..!

    வெளியானது UPSC முதல்நிலைத் தேர்வு முடிவுகள்..!! 13,343 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி..!!

    FIFA World cup 2026: சவுதி அரேபியா Vs உருகுவே: 1-1 டிரா! ‘எச்’ பிரிவு பரபரப்பு உச்சம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.