Author: Editor TN Talks
திருவண்ணாமலையில் ரூபாய் 16 கோடி செலவில் கட்டப்பட்டு மூன்றே மாதத்தில் இடிந்து அடித்து செல்லப்பட்ட மாநில நெடுஞ்சாலை துறையின் உயர்மட்ட பாலம் கட்டுமானத்தில் நடந்த ஊழல் முறைகேட்டின் மீது விசாரணை கோரி அறப்போர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்அ அளித்துள்ளது. திருவண்ணாமலை தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அகரம் பள்ளிப்பட்டு மற்றும் தொண்டாமானூர் இடையே செப்டம்பர் 2024 இல் கட்டி முடித்து திறக்கப்பட்ட உயர்மட்ட பாலம் மூன்றே மாதத்தில் டிசம்பர் 3, 2024 அன்று ஏற்பட்ட வெள்ள பெருக்கத்தில் அடித்து செல்லப்பட்டது. ஆறு மாத காலம் ஆகியும் இன்றுவரை இதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அறப்போர் இயக்கம் இன்றைய தினம் இந்த பாலம் வடிவமைப்பு (டிசைன்) மற்றும் கட்டுமானம் குறித்த முறைகேடுகளை புகாராக எழுப்பி இந்த ஊழலின் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பாலத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை…
தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க இன்று 9 ஆயிரம் முகாம்கள் நடைபெறும் என்று அறிவித்த முதலமைச்சரின் அறிவுப்பு என்ன ஆனது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அந்த சிறப்பு முகாம்கள் எங்கே நடக்கிறது என பொதுமக்கள் அலைந்து, திரிந்து தேடி வருகின்றனர். 2021 சட்டமன்ற தேர்தலின் பொழுது திமுக வெற்றி பெற்றால் அனைத்து மகளிர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்த பின்னர், தகுதியுடைய மகளிர்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்து தற்பொழுது அது நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து மகளிர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று ( 4 – 6 – 25 ) அதற்கான சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் 9000 இடங்களில் நடைபெறும் என்றும்…
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 11,12 ஆகிய தேதிகளில் சேலம் மற்றும் ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று, களஆய்வு மேற்கொள்கிறார் 11 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் விஜயமங்கலத்தில் வேளான் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். 12 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் ஆணையை பாசன வசதிக்காக திறந்து வைக்கிறார் சட்டமன்ற தேர்தல் வரையறுக்கக் கூடிய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மற்றும் புதிய திட்டங்களை துவக்கி வைத்து வருகிறார். அந்த வகையில் வரும் 11, 12 ஆகிய தேதியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சேலம் மற்றும் ஈரோடு சென்று பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார். இதற்காக 11 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு செல்லும் முதலமைச்சர் ஈரோட்டில் இரண்டு நாட்கள்…
திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், சல்மா ஆகியோர் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் ஜூன் 6 ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜூன் இரண்டாம் தேதி முதல் வரும் ஒன்பதாம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வரும் 6 ஆம் தேதி திமுக அதிமுக வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். திமுக வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை நடைபெறும். வேட்பு மனுவில் (முன்மொழிய) கையெழுத்து போட எம் எல் ஏ க்கள் இன்று அண்ணா அறிவாலயம் செல்கிறார்கள். ஒரு மனுவுக்கு 10 எம் எல் ஏ க்கள் கையெழுத்து போடுகிறார்கள். விரைவில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு திமுக சார்பில் 4 பேர், அதிமுக சார்பில் 2 பேர் என்று மொத்தம் 6 பேர் மட்டுமே வேட்பாளர்களாக…
பரந்தூர் விமான நிலையம் கட்டுமான பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11:30 மணியளவில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர், தொழில்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5300 ஏக்கரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. புதிய விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு கிராமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக திட்ட அனுமதியை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்கு இட அனுமதியும் கிடைத்துள்ள நிலையில்,…
திமுக ஆட்சி வரும்பொழுது எல்லாம் காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக மாறி விடுகிறது என்றும் காவல்துறை எங்கும் சரியான முறையில் தனது கடமையை செய்யவில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார். பாஜக முருக பக்தர் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் நத்தம் சாலையில் அமைந்துள்ள நேற்று இதில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு 2 முறை மாவட்ட நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் சந்தித்து தற்போது 3வது முறையாக மாநிலம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகளை சந்தித்து கொண்டிருக்கிறேன் என்றார். ஆளுநர் பயந்து சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார் என ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு முதல்வர் கூறியது தவறான கருத்து. மக்களின் புரிதலை மாற்றுகிறது. ஏனென்றால் முன்பு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆளுநர் ஏன் மறுப்பு…
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் விளாத்தி ஊரைச் சேர்ந்த சிகாமணி. இவர் துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சிகாமணிக்கு துபாயில் ஓட்டலில் வேலை செய்த கோவை காந்தி மாநகரை சேர்ந்த சாரதாவுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியது. சாரதாவிடம் சிகாமணி ரூபாய் 6 லட்சம் வரை வாங்கி இருந்தார். இது தொடர்பாக தகராறு ஏற்பட்ட போது சாரதாவை சிகாமணி தாக்கி உள்ளார். அதன் பிறகு சாரதா கோவை திரும்பினார். இதை அடுத்து சிகாமணி ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி துபாயில் இருந்து கோவை வந்த சாரதாவை சந்தித்தார். அப்பொழுது ஏற்பட்ட தகராறில் சாரதா தனது உறவினர்கள் மற்றும் கூலிப்படை உதவியுடன், இறைச்சியில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து சிகாமணியை கொலை செய்து உடலை கரூர் மாவட்டம் பரமத்தியில் காட்டுப் பகுதியில் வீசினர். இதுகுறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்கு…
கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வந்த மாணவிக்கு காதல் சில்மிஷம் செய்த கம்ப்யூட்டர் பயிற்சி மைய உரிமையாளர். கம்ப்யூட்டர் பயிற்சி மைய உரிமையாளரை கடுமையாக தாக்கி போலீசில் ஒப்படைத்த மாணவியின் உறவினர்கள். தெலுங்கானா மாநிலம் விகாரபாத் நகரில் நவாஸ் என்பவர் பிரைன் ட்ரீ கம்ப்யூட்டர் ட்ரைனிங் சென்டர் என்ற பெயரில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் கற்றுக் கொள்வதற்காக வந்த மாணவி ஒருவரிடம் நவாஸ் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. நவாஷின் சில்மிஷ லீலைகள் பற்றி அந்த மாணவி பெற்றோரிடம் கூறிய நிலையில் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கு வந்த மாணவியரின் உறவினர்கள் நவாஷை கடுமையாக தாக்கினர். அவருடைய ஆடைகளும் கிழிக்கப்பட்டன. இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக வேறொருவர் வந்து பேசினார். அவரையும் கடுமையாக எச்சரித்த மாணவியின் உறவினர்கள் நவாசை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். எனவே…
18 ஆண்டுகால ஏக்கம் முடிவுக்கு வந்ததாகவும், இத்தனை ஆண்டுகாலம் ஆர்சிபி அணிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த பெங்களூர் அணியின் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக கொள்வதாகவும், இன்றிரவு ஒரு குழந்தையைப் போல் நிம்மதியாக தூங்குவேன் என்றும் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கூறியுள்ளார். சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றிய பின்னர் மேத்யூ ஹைடன், விராட் கோலியிடம் பேட்டி எடுத்தார். அப்போது பேசிய விராட், என்னுடைய இளமையில் பெங்களூர் அணிக்கு வந்தேன், என்னுடைய மிகச்சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தின் போதும் இங்கு தான் இருந்தேன், என்னுடைய அனுபவத்தின் சாரம் சேர்ந்த போதும் இங்கு தான் விளையாடினேன். ஆனால் சாம்பியன் பட்டம் பெற முடியவில்லையே என்ற ஏக்கம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. இத்தனை ஆண்டுகாலம் எவ்வளோ தோல்விகள் அடைந்தபோதும், அணியில் அதிகப்படியான ரன்கள் குவித்த போதும் ஆர்சிபி ரசிகர்கள் எங்களை கை விட்டதே இல்லை. இந்த வெற்றி உண்மையில் அவர்களுக்கானது. இன்றிரவு அவர்களோடு…
18 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூர் அணி… ஐபிஎல்லில் சாம்பியன் கோப்பையை வெல்வது என்ற 18 ஆண்டுகால ஏக்கத்தை இன்றைய தினம் தீர்த்துக் கொண்டது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி.. இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு சாம்பியனாக உருவெடுத்தது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். 18-வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற தொடரில் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய 4 அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. இதில் முதல் போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தியதால் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தியது மும்பை அணி. பின்னர் பஞ்சாப் – மும்பை அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர…