Close Menu
    What's Hot

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக மாறி விடுகிறது – நயினார் நாகேந்திரன்
    தமிழ்நாடு

    காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக மாறி விடுகிறது – நயினார் நாகேந்திரன்

    Editor TN TalksBy Editor TN TalksJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    03 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக ஆட்சி வரும்பொழுது எல்லாம் காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக மாறி விடுகிறது என்றும் காவல்துறை எங்கும் சரியான முறையில் தனது கடமையை செய்யவில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

    பாஜக முருக பக்தர் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் நத்தம் சாலையில் அமைந்துள்ள நேற்று இதில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு 2 முறை மாவட்ட நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் சந்தித்து தற்போது 3வது முறையாக மாநிலம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகளை சந்தித்து கொண்டிருக்கிறேன் என்றார்.

    ஆளுநர் பயந்து சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார் என ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு
    முதல்வர் கூறியது தவறான கருத்து. மக்களின் புரிதலை மாற்றுகிறது. ஏனென்றால் முன்பு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆளுநர் ஏன் மறுப்பு தெரிவித்தார். அதற்கு நீட் தேர்வுக்கு உதாரணமாக ஒன்றை கூறுகிறேன். நீட் தேர்வு குறித்த அதிமுக காலத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆளுநர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டு நிராகரிப்பு செய்யப்பட்டது. நடக்காத விஷயத்தை, நடைபெற முடியாத விஷயத்தை திரும்பவும் அரசியல் ஆதாயத்திற்காக முதலமைச்சர் நீட் தேர்வை விளக்கு பெறுவோம் என தேர்தலில் கூறினார்.

    மொழிய வைத்து முதலமைச்சர் அரசியல் செய்கிறார் இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் வர வேண்டும் மக்களை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகளை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். மதுரையில் கோமாளிகளின் கூட்டணி வெற்றி பெறாது என முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு, அது அவரே அவர் சொல்லி இருப்பார் என்பது தெரியவில்லை.

    அண்ணாமலை ஆதாரப்பூர்வமாக சில விஷயங்களை கூறியுள்ளார். அவர்களும் ஆதாரப்பூர்வமாக பதில் கூறினால் நன்றாக இருக்கும். என்னை பொருத்த வரை அதே பிரச்சனை தான். அதே கேள்வியை தான் நானும் கேட்கிறேன் நீதிமன்ற கருத்துக்கள் நான் செல்லவில்லை. அதே நேரத்தில் காவல் துறை குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யும்பொழுது சரியான முறையில் தாக்கல் செய்திருந்தால் அந்த சாருக்கும் விடை தெரிந்திருக்கும்.

    இப்போது அவசரம் அவசரமாக திமுக ஆட்சிகள் வந்து நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கிறது எத்தனையோ பாலியல் வழக்கு 2024 இல் துணை முதல்வர் ரசிகர் மன்றத்தை சேர்ந்த கவிதாஸ் பாலியல் பலாத்காரம் செய்தார் அந்த வழக்கு என்ன ஆனது? அண்ணா நகர் மனநலம் குன்றிய பெண்ணை ஒரு வருடமாக பத்து பேர் பாலியல் துன்புறுத்தல் செய்து இருந்தனர். அந்த வழக்கு என்ன ஆனது? 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த மனு கொடுக்க போன பெற்றோர் மீது புகார் சொன்ன வழக்கு என்ன ஆனது? என்ன ஆனது என்ன ஆனது என அண்ணாச்சியிடம் கேட்க வேண்டும். இதற்கு மட்டும் ஏன் இந்த அவசரம் மனசாட்சியுடன் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த வழக்கில் யாரையும் காப்பாற்றுவதற்காக என்று தெரியவில்லை.

    இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிராவல்ஸ் உரிமையாளர் கொலை : கைதான 6 பேரை காவலில் எடுத்து விசாரணை
    Next Article பரந்தூர் விமானநிலைய கட்டுமான பணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
    Editor TN Talks

    Related Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    June 2, 2026

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    June 2, 2026

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.