Author: Editor TN Talks

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஹென்ரிச் க்ளாசனும் அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேனும், சுழற்பந்து வீச்சாளரும், மிகச்சிறந்த பீல்டரும் என்றால் அது க்ளென் மேக்ஸ்வெல் தான். 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த மேக்ஸ்வெல், இதுவரை 149 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3,990 ரன்கள் எடுத்துள்ளார். 77 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி உள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 126 ஆகும். 2015 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் உலககோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றபோது அதன் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் மேக்ஸ்வெல்லும் ஒருவர். சமீபகாலமாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மேக்ஸ்வெல் முழு ஆட்டத்திலும் பங்கேற்க முடியாமல் திணறி வந்தார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 ஓவர் உலக கோப்பை போட்டியில் முழுமையான கவனம் செலுத்தும்…

Read More

மூவரசம்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நல திட்ட உதவிகள் விழாவில் மின்சாரம் இல்லாமல் வெகு நேரம் காத்திருந்த அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மின்சாரம் சரிசெய்யப்பட்ட பின்பும் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடியையும் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைகீழாக ஏற்றியதால் சலசலப்பு ஜூன் 2 தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கான நோட்டு புத்தகம் வழங்கும் விழா தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூவரசம்பட்டு ஊராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியருக்கான நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்க…

Read More

ஜப்பானின் ஹொக்கைடோவின் குசிரோ கடற்கரைக்கு அருகே 6.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) தெரிவித்துள்ளது. ஜப்பானிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், ஆனால் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படவில்லை என்றும் JMA கூறியுள்ளது. இற்கு முன் அதே பகுதியில் 2.19 மணிக்கு 4.4 அளவிலான நிலநடுக்கத்துடன் பல பின்னதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. பின்னர், சிகோகுவின் கடற்கரையில் 3.5 அளவிலான நிலநடுக்கம் மாலை 4:45 மணிக்கு, மேலும் குசிரோ அருகே 4.7 அளவிலான இன்னொரு நிலநடுக்கம் 5:07 மணிக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை சேதம் அல்லது பாதிப்பு குறித்து உடனடி தகவல்கள் இல்லை. ஜப்பானிய உயரதிகாரிகள் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 2025 ஏப்ரல் மாதம், இந்திய நேரப்படி மாலை 7:34 மணிக்கு, ஜப்பானின் க்யூஷூ பகுதியில் 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது…

Read More

கட்டாய கல்வி நிதியை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். 2205-2026ம் ஆண்டிற்காக பாட நூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரண பொருட்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கும் விழாவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேசும் திருவல்லிக்கேணி பள்ளியில் அதனை செயல்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளியில் 16 ஆயிரம் மாணவ மாணவிகள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது நடப்பாண்டு கூடுதல் சேர்க்கை மகிழ்ச்சி அளிப்பதாகவும் இது எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்றார். அதேபோன்று பள்ளிகள் தொடங்கப் பட்ட முதல் வாரத்தில்…

Read More

நார்வே செஸ் 2025 செஸ் தொடரில் தரவரிசையில் உலகின் முதலிடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை நமது தமிழக வீரர் குகேஷ் வீழ்த்தி வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். அந்த போட்டியில் தோல்வியை தாங்க முடியாத ஆத்திரத்தில் கார்ல்சன் மேஜையை வேகமாக தட்டிய செயல், கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கி உள்ளது. The greatest chess finish ever | Gukesh vs Magnus Carlsen | Norway Chess 2025 World no.1 Magnus Carlsen and World Champion D. Gukesh clashed against each other in round 1 of Norway Chess and that game ended in Magnus’ favour. We are now back for the 2nd game in the tournament,… pic.twitter.com/TwshZH9NG1 — ChessBase India (@ChessbaseIndia) June 2, 2025 நார்வே நாட்டில் சர்வதேச செஸ்…

Read More

2026 சட்டமன்ற தேர்தல் நமது இலட்சியம், அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் 200 தொகுதிகளுக்குமேல் வெற்றி பெறுவது நிச்சயம் என்று கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தொண்டர்களிடையே உற்சாகமாக பேசினார். முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள், மற்றும் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி, சூலூர் சட்டமன்ற தொகுதி, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி, மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூத்கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர் கொள்கைபரப்பு துணை செயலாளர் தோப்பு அசோகன்,…

Read More

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஏககாலத்தில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் தண்டனை விவரங்கள் குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களை சந்தித்தார்….. அப்போது பேசிய அவர்….. முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை 30 ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளது, ஆயுள் தண்டனையை முழுவதுமாக அனுபவிக்க வேண்டும், இந்த காலத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படாது, புலன் விசாரணை மிகவும் சிறப்பாக நடைபெற்றது…. 11 குற்றச்சாட்டுகளுக்கும் அரசு தரப்பில் வாய்மொழியாகவும் ஆவணப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் அனைத்து குற்றச்சாட்டுக்கும் நீதிமன்றத்தில் அனைத்து ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் ஆதாரங்கள் திருப்திகரமாக இருந்ததால்தான் இவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு கிடைத்துள்ளது என்று அவர் அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக கூறினார்…. மேலும் பேசிய அவர் இந்த வழக்கில் முக்கிய சாட்சி என்றால் அது ஞானசேகரன் பயன்படுத்திய தொலைபேசி தான், அவர் சமூக…

Read More

தங்கத்தையும், இந்தியர்களையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு இரண்டற கலந்த ஒன்று. தங்கள் சேமிப்பை தங்கமாக மாற்றும் பழக்கம், தொன்றுதொட்டு இருந்து வருகிறது. உலகின் வேறேந்த நாட்டை விடவும் அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது இந்தியா. அதனால் தான் இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.71,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,920 ஆக உள்ளது. ஆனாலும், நகைக்கடைகளில், காய்கறி சந்தையில் உள்ளது போலேவே கூட்டம் அலைமோதுகிறது. கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.71,360-க்கு விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதன் விலையில் மாற்றம் ஏதுமில்லாமம் வியாபாரம் நடைபெற்று வந்தது. இன்று வாரத்தின் தொடக்க நாளிலேயே சவரனுக்கு ரூ.240 அதிகரித்தது. கடந்த சில நாட்களில் தங்கம் (22 கேரட்) விலை நிலவரம்: 31-05-2025 – ஒரு சவரன்…

Read More

கர்நாடகாவில் சமீபகாலமாக கன்னட மொழி பேச மறுத்து இந்தியில் தான் பேசுவோம் என்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டு வருகிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் இது.. கர்நாடக தலைநகர் பெங்களூரின் பெல்லந்தூர் பகுதியில் ஆட்டோ ஒன்றும், இருசக்கர வாகனம் ஒன்றும் போக்குவரத்து நெரிசலின் போது உரசிக் கொண்டன. இதையடுத்து பைக்கில் வந்த அந்த இளம்பெண், ஆட்டோ ஓட்டுநரை இந்தி மொழியில் சகட்டு மேனிக்கு அர்ச்சித்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண்தான் போக்குவரத்து விதிகளை மீறி எதிர்திசையில் வந்து ஆட்டோ மீது மோதியதாக அந்த ஓட்டுநர் எடுத்துக் கூறியும் கேளாமல் அவர் திட்டிக் கொண்டே இருந்துள்ளார். இதனை ஆட்டோ ஓட்டுநர் தனது மொபைல் போனில் படம்பிடிக்க, ஆத்திரமடைந்த அந்த பெண் தனது செருப்பைக் கழட்டி அவரை சரமாரியாக தாக்கினார். இதுவும் அந்த மொபைல் காட்சியில் பதிவானது. கன்னடத்தில் இவர் பதில் கூற, அந்த பெண் இந்தியிலேயே திட்டிக் கொண்டும்,…

Read More

அக்னி நட்சத்திரம் படத்தில் இடம்பெற்ற “ராஜாதி ராஜன் இந்த ராஜா” பாட்டில் கவிஞர் வாலி “நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நீ ராஜா… கோட்டை இல்லே கொடியும் இல்லே அப்பவும் நீ ராஜா” என்று எழுதிருப்பார். இன்று பெரும்பாலான திரைப்படங்களில் இளையராஜாவின் பாடல்கள் வைக்கப்பட்டு, அதற்கு ரசிகர்கள் தரும் வரவேற்பைப் பார்க்கும்போது வாலியின் வைர வரி தகுந்த வாழ்த்தாகத் தொனிக்கிறது.  இளையராஜாவின் வெற்றி ரகசியம் பண்ணைபுரத்திலிருந்து வந்து, அன்னக்கிளி மூலம் தமிழ்த் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி, 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த அபூர்வ கலைஞராக வலம் வருகிறார் இளையராஜா. மண்ணின் மனமான நாட்டுபுற இசை, மேற்கத்திய இசை, கர்நாடக இசை, செவ்விசை என இசையின் அனைத்து பரிமானங்களையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டு, அவற்றைத் தனக்கே உரிய புதுபாணியில் கோத்து இசையமைப்பதில் வல்லமை அடைந்தார். கடும்தவம்போல் தினம் செய்யும் பயிற்சிகளின் மூலம் மெட்டமைத்தல் என்ற பணி மூச்சுவிடுவதுபோல் அவரால்…

Read More