Author: Editor TN Talks
தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரியான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் கூடுதல் செயலாளர் சுப்பிரமணியத்திடம் வேட்புமனு தாக்கல் செய்யப்படும். பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள 7 மற்றும் 8ம் தேதி தவிர்த்து மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஜுன் 9ம் தேதி இந்த பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள். 10ம் தேதி, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 12-ம் தேதி இறுதி நாளாகும். விரைவில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு திமுக சார்பில் 4 பேர், அதிமுக சார்பில் 2 பேர் என்று மொத்தம் 6 பேர் மட்டுமே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், எனவே அறிவிக்கப்பட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள். திமுக சார்பில்…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையால் மறைக்கப்பட்ட அந்த சார்? யார்? என்பதை அதிமுக ஆட்சி அமைந்ததும் வெளிக்கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு… அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு. அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அஇஅதிமுக. பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும்…
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை அணியை வீழ்த்தி, பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னேறியது. இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டிகள் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா, ஜானி பெர்ஸ்டோ களமிறங்கினர். வெறும் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டாய்னிஸ் பந்தில் ரோகித் ஷர்மா ஆட்டமிழந்தார். மறுபுறம் தடாலடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பெயர்ஸ்டோ 38 ரன்கள் சேர்த்து வியாசக் பந்தில் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் இணை பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தது. இருவரும் தலா 44 ரன்கள் குவித்த நிலையில், அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். பின்னர் இணைந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, நமன் திர் ஜோடி இறுதிக்கட்டத்தில் ரன்களை குவிக்க போராடினர். ஹர்திக் 15 ரன்களும், நமன் திர்…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அபராத தொகை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதுபற்றி அவர் அளித்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் மகளிர் போலீசார், ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். இதுபற்றி தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம், 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது. அவர்கள் ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரித்து கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில்…
‘மதயானைக் கூட்டம்’ மற்றும் ‘இராவணக் கோட்டம்’ போன்ற முக்கிய படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார். பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன், சினிமாவில் நடிப்புக்காக சென்னைக்கு வந்தவர். தனது பயணத்தின் ஆரம்பத்தில், தமிழின் முன்னணி இயக்குநரான பாலு மகேந்திராவிடம் 1999 முதல் 2000 வரை உதவியாளராக பணியாற்றினார். பின்னர், வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சசிகுமார் நடித்த ‘கொடிவீரன்’ படத்திலும் அவர் நடித்துள்ளார். வெற்றிமாறனுடன் இணைந்து ‘ஆடுகளம்’ படத்திற்கு வசனம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது. 2013-ம் ஆண்டு கதிர் மற்றும் ஓவியா நடித்த ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தார் விக்ரம் சுகுமாரன். இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் இயக்கிய இரண்டாவது படம் ‘இராவணக் கோட்டம்’. இதில் சாந்தனு ஹீரோவாக நடித்தார். தற்போது, ஏறுதழுவலை மையமாகக் கொண்டு ‘தேரும்…
செம்மொழி நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நாளை கொண்டாடப்படுகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்று பல்வேறு விருதுகளையும் வழங்குவதோடு புத்தகத்தை வெளியிட்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூன் மூன்றாம் தேதி செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி நாளை காலை 10:15 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கலைஞர் கருணாநிதி செம்மொழி நாள் விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் நாளை வழங்க உள்ளார். மேலும், செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மத்திய நிறுவனத்தில் புதிய நூல்களை வெளியிடுவதோடு, உயர்த்தப்பட்ட உதவித்தொகை ஒப்பளிப்பு ஆணையையும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்க உள்ளார். அதேபோல், போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் பரிசுகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார். மேலும், தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலரையும் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள்,…
நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும், கூடுதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பட்டியலும் அதிகமாக இருந்ததால், இந்த முறை அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பொதுமக்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்…. இந்நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2025 – 26ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, மார்ச் மாதம் துவங்கியது. இதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி தரப்பில் சிறப்பு கவனம் எடுக்கப்பட்டது. அதன் பயனாக, கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் நேற்று வரை,…
முதல்வரின் காலை உணவு திட்டத்தில் திங்கள்தோறும் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் – சாம்பார் வழங்கப்படும் என்ற சட்டப்பேரவை அறிவிப்பை நடைமுறைப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நல துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் காலை உணவு திட்டத்தின்கீழ் திங்கள்கிழமை வழங்கப்படும் உணவு வகைகளில், காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா போன்ற சிற்றுண்டி வகைகளில் ஏதேனும் ஒன்றை சேர்த்து வழங்க வேண்டும் என சமூகநல துறை கடந்த 2023 ஜூன் மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தில் மாற்றம் செய்து கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ‘விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது, காலை உணவு திட்டத்தில் அரிசி உப்புமாவுக்கு பதிலாக, பொங்கல், சாம்பார் வழங்கப்படும்’ என்று சமூக நல துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார். இதையடுத்து, அத்திட்டத்தை…
தெருவில் ஆதரவின்றி விடப்படும் வளர்ப்பு மற்றும் தெரு நாய்களை பாதுகாக்க விழிப்புணர்வு மற்றும் நிதி திறட்டும் வகையில் நடைபெற்ற நாய்கள் வாக்கத்தான் போட்டியில் மனிதர்களைப் போல நாய்களும் வண்ணமயமான உடைகளுடன் ஸ்டைலாக நடை போட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் தெரு நாய்கள் மற்றும் ஆதரவின்றி தெருவில் கைவிடப்படும் நாய்களை பாதுகாக்க விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டும் வகையில் நாய்களுக்கான வாக்கத்தான் போட்டி நடைபெற்றது. PEPHANDS என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் “வேக் அன் வாக்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த நாய்கள் வாக்கத்தான் போட்டியில் சிப்பிபாரை, கன்னி, ராஜப்பாளையம் என உள்ளூர் இன நாய்களும் புல்லிகுட்டான், லேப்ரோடாக், ஷிட்ஷூ, பாக்சர், கோல்டன் ரிட்ரிவர் என பல்வேறு வெளிநாட்டு இனநாய்களும் கலந்து கொண்டது. ஒவ்வொரு நாய்களும் வண்ணமயமான ஆடை மற்றும் அணிகலங்களுடன் கலந்து கொண்டது. ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட நாய்கள் அவர்களது…
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அந்த தீர்மானத்தில் அதிமுக பற்றி 27வது தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். View this post on Instagram A post shared by TNtalks (@tntalksofficial) அதில் , துரோக அதிமுக என பயன்படுத்தியுள்ளனர். அது நாங்கள் இல்லை திமுக தான் இந்த நாட்டிற்கு துரோகம் செய்தது. அதிமுகவை பொருத்தவரை அம்மா ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த போதும் சரி, அவர் மறைவிற்கு பிறகு நான் முதலமைச்சராக இருந்த போதும் அதிமுக ஆட்சியில் சிறப்பான திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கினோம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இன்றைய தினம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தினம்தோறும் கொலை, கொள்ளை,…